உள்ளடக்கத்துக்குச் செல்

வேலூர் பாளையம் தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேலூர் பாளையம்
பொது தகவல்கள்
அமைவிடம்படைத்தளச் சாலை, பாளையம், வேலூர், தமிழ்நாடு, இந்தியா
ஏற்றம்215 மீட்டர்கள் (705 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
தடங்கள்அகலப்பாதை
நடைமேடை3
இருப்புப் பாதைகள்5
இணைப்புக்கள்மகிழ்வுந்து, தானி, பொதுப்போக்கு வரத்து
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதொடருந்து நிலையம்
தரிப்பிடம்உண்டு
துவிச்சக்கர வண்டி வசதிகள்உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல்
மற்ற தகவல்கள்
நிலைசெயல்பாட்டில்
நிலையக் குறியீடுVLR
பயணக்கட்டண வலயம்தென்னக இரயில்வே
வரலாறு
மின்சாரமயம்ஆம்


வேலூர் பாளையம் தொடருந்து நிலையம் (Vellore Cantonment railway station) என்பது தெற்கு ரயில்வே மண்டலத்தின் திருச்சிராப்பள்ளி ரயில்வே பிரிவில் உள்ள என். எஸ். ஜி-5 வகை இந்திய தொடருந்து நிலையமாகும்.[1] இது காட்பாடி சந்திப்புடன் கூடுதலாக வேலூர் நகரத்திற்கு சேவை செய்யும் ஒரு தொடருந்து நிலையமாகும். இந்த நிலையம் விழுப்புரம்-திருப்பதி பாதையில் அமைந்துள்ளது. இது நகரத்தின் மையத்தில் காலாட்படை சாலையில் (வேலூர் மாநகராட்சி அருகில்) அமைந்துள்ளது.

இந்த நிலையம் முதலில் மீட்டர்-இருப்புப் பாதையாகச் சேவை செய்யப்பட்டது. தெற்கு ரயில்வே மேற்கொண்ட பாதை மாற்றும் இயக்கத்திற்குப் பிறகு, இந்த பாதை 2010ஆம் ஆண்டில் அகலப் பாதையாக மாற்றப்பட்டது.[2] பாதை மாற்றத்திற்குப் பிறகு முதல் தொடருந்து, இராமேசுவரம்-திருப்பதி தொடருந்து ஏப்ரல் 2011இல் இந்த நிலையத்தின் வழியாக சென்றது.[3]

வசதிகள்

[தொகு]

இந்த ரயில் நிலையம் ஒப்பீட்டளவில் புதியது என்பதால், அதிக வசதிகள் இல்லை. தளம் 1இல் ஒரு சில மாற்றங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

தொடர்புகள்

[தொகு]

தொடருந்து நிலையத்திற்கு வெளியே நகரின் பிற பகுதிகளையும், காட்பாடி சந்திப்பு, வேலூர் நகரம், வேலூர் பாளையத்தினையும் இணைக்கும் பேருந்து வசதிகள் உள்ளன. வாடகை மகிழ்வுந்து, தானி, உள்ளிட்ட பிற முக்கிய போக்குவரத்து வசதிகளும் உள்ளன.

திட்டங்கள் மற்றும் வளர்ச்சி

[தொகு]

இந்திய ரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட வேண்டிய தமிழ்நாட்டின் 73 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "SOUTHERN RAILWAY LIST OF STATIONS AS ON 01.04.2023 (CATEGORY- WISE)" (PDF). Portal of Indian Railways. Centre For Railway Information Systems. 1 April 2023. p. 8. Archived from the original (PDF) on 23 March 2024. Retrieved 3 April 2024.
  2. "Opening of BG track between Vellore Cantonment, Villupuram awaited". The Hindu. 6 October 2010 இம் மூலத்தில் இருந்து 9 October 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101009125344/http://www.hindu.com/2010/10/06/stories/2010100651340300.htm. 
  3. "First passenger train starts plying on newly laid BG track". The Hindu. 2 April 2011. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/first-passenger-train-starts-plying-on-newly-laid-bg-track/article1593769.ece. 
  4. "AMRIT BHARAT STATIONS". Press Information Bureau (New Delhi). 10 Feb 2023. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1897980.