வேலுசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேலுசாமி என்பவர் தமிழ்ப்புலவர். இவர் 1854 ஆம் ஆண்டு சிதம்பரத்திற்கு அருகாமையில் உள்ள தில்லைவிடங்கன் எனும் ஊரில் பிறந்தவர்.

கல்வியும் பணியும்[தொகு]

இவர் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் ஆங்கிலம் பயின்றார். அக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்த வித்துவான் சின்னசாமிப் பிள்ளையிடம் தமிழ் பயின்றார். மேலும், புரசை அஷ்டாவதானம் சபாபதி முதலியார், மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஆகியோரிடம் தமிழ்ப் பயின்றார். திருவாவடுதுறை ஆதீனத்துச் சுப்பிரமணிய தேசிகரிடத்திலும் கல்வி பயின்றுள்ளார். இவர் பச்சையப்பன் உயர்தரப் பள்ளியில் 1890 முதல் 1920 வரை 30 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

எழுதிய நூல்கள்[தொகு]

இவர், கந்தபுராணத்தை 5663 வெண்பாக்களில் பாடியுள்ளார். இந்நூலை 22-5-1907 இல் காஞ்சி குமரகோட்டத்தில் அரங்கேற்றினார். மேலும் இவர், காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் தேரடியின் கீழ் அருளும் ஆஞ்சநேயரைப் புகழ்ந்து, ஆஞ்சநேய புராணம் எனும் நூலைப் பாடி இழந்த தன் பார்வையைப் பெற்றதாக வரலாறு கூறுகிறது.[1]

  • தேவார சிவதல வெண்பா
  • ஐயனார் நொண்டி
  • வருணாபுரிக் குறவஞ்சி
  • அநீதி நாடகம்
  • திருக்கச்சூர் ஆலக்கோயிற் புராணம்
  • தில்லைவிடங்கன் புராணம்
  • திருவேட்டக்குடிப் புராணம்
  • தில்லைவிடங்கன் நீரோட்டக யமக அந்தாதி
  • புலியூர் வெண்பா
  • சிதம்பரேசுவரர் விறலிவிடு தூது
  • தேவார வைப்புத்தலக் கட்டளைக் கலித்துறை.

பாராட்டுகள்[தொகு]

இவர் செய்யுள் இயற்றுவதில் வல்லவர். வெண்பா பாடுவதில் வல்லமை உடையவர். அதனால் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள், இவருக்கு, வெண்பாப் புலி எனும் சிறப்புப் பெயரை வழங்கியுள்ளார்.

மறைவு[தொகு]

இவர் 1926 ஆம் ஆண்டு மறைந்தார்.

உசாத்துணை[தொகு]

1) மயிலை சீனி.வேங்கடசாமி," பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் " மணிவாசர் பதிப்பகம் -2001. 2) www.googleweblight.com, http://periyarparavai.com.பார்த்த[தொடர்பிழந்த இணைப்பு] நாள் 09-7-17.

  1. [www.dinakaran.com "கண் கொடுக்கும் ஆஞ்சநேயர்"]. தினகரன், ஆன்மிகம். பார்க்கப்பட்ட நாள் 9 சூலை 2017. {{cite web}}: Check |url= value (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேலுசாமி&oldid=3730625" இலிருந்து மீள்விக்கப்பட்டது