வேற்றுலக நுண்ணறிவு உயிரினம்
வேற்றுலக நுண்ணறிவு உயிரினம் (Extraterrestrial intelligence) என்பது பூமிக்கு அப்பால் உள்ள கோள்களில் ஏதேனும் நுண்ணறிவு கொண்ட உயிரினம் இருக்குமாயின், அதைக் குறிப்பதாகும். விண்வெளியில் எங்கேனும் நம்மைப் போலவே உயிரினங்கள் இருக்கின்றனவா என்று பழங்காலந் தொட்டே மக்கள் அறிய ஆவலாக இருந்திருக்கின்றனர். [1] சூரியனை, பூமி(உலகம்) உட்பட எல்லா கோள்களும்(உலகங்களும்) சுற்றி வருகின்றன என்று கோப்பர்னிக்கசு (Copernicus) கண்டு பிடித்த பிறகு, பூமியில் உள்ளது போலவே மற்ற கோள்களிலும் மனிதர்கள் வாழ்கின்றனரா என்ற கேள்வி மீண்டும் எழுந்தது.[2] இதன் விளைவாக, அறிவியலிலும் அறிவியல் புனைவுகளிலும் (science fiction) வேற்றுலக நுண்ணறிவு உயிரினம் என்ற கோட்பாடு பலராலும் பேசப் படுகின்ற ஒன்றாக இருக்கின்றது. [3]
வாய்ப்புகள்
[தொகு]வேற்றுலகங்களில் நுண்ணறிவு கொண்ட உயிரினம் இருப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவே பலரது கருத்துக்கள் கூறுகின்றன. பூமியில் உள்ள மனிதர்கள் மட்டும் தான் இந்த அண்டத்தைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்று கூறுவதற்கில்லை.[4] நம் பேரண்டம் இவ்வளவு பெரிதாக இருப்பதால், நுண்ணறிவு கொண்ட உயிரினம் எங்கேயேனும் இருப்பதற்கு வாய்ப்புகள் மிகுதியாகவே இருக்கும் என்று ஸ்டீவன் ஹாக்கிங்(Stephen Hawking) போன்ற அறிஞர்கள் கூறியுள்ளனர்.[5] ஆயினும், பெர்மி முரண்போலி (Fermi paradox) கூற்றையும் நாம் இங்கு நினைவு கூற வேண்டியுள்ளது. அதாவது, நுண்ணறிவு கொண்ட உயிரினம் வான் வெளியில் இருப்பதற்கு வாய்ப்புகள் மிகுதியாக இருந்தும், இதுவரை அதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்பது ஒரு முரண்பாடு.[6]
கார்தசேவு அளவீடு (Kardashev scale) என்ற அளவீட்டின் முறைப்படி, ஒரு நாகரிகத்தின் தொழில் நுட்ப வளர்ச்சியை, அந் நாகரிகம் எந்த அளவுக்கு ஆற்றலைப் (energy) பயன்படுத்தும் திறமை கொண்டது என்பதை வைத்துக் கணக்கிடலாம். [7] நம் பால் வழியில், எத்தனை வேற்றுலக நாகரிகங்கள் இன்னும் விண் வெளியை ஆராய்ந்து கொண்டிருக்கின்றன என்பதை திரேக்கச் சமன்பாட்டை (Drake equation) வைத்துக் கணிக்கலாம். [8]
வேற்றுலக நுண்ணறிவு உயிரினத்தை வான் வெளியில் தேடுதல்
[தொகு]வேற்றுலக நுண்ணறிவு உயிரினத்தைப் பல ஆண்டுகளாகத் தேடினினும், இது வரை ஒன்றையும் காணவில்லை.[9] ஆக்டிவ் SETI (Active Search for Extra-Terrestrial Intelligence) என்னும் அமைப்பு வானொலி அலைகளை (radio signals) விண்ணில் செலுத்தி, யாரேனும் இருக்கின்றார்களா என்று பார்த்துக் கொண்டு இருக்கின்றது.
விண்ணில் அனுப்பப்படும் சேதி (message) எவ்வாறு வேற்றுலக உயிரினங்களால் பிரித்து, உணர்ந்து அறிந்து கொள்ளப்படும் என ஆராய CETI (Communication with extraterrestrial intelligence) என்று ஒரு பிரிவு இயங்கிக் கொண்டுள்ளது. பிராங்க் திரேக் (Frank Drake) மற்றும் காரல் சாகன் (Carl Sagan) 1974-இல் உருவாக்கிய ஆர்சிபோ சேதி (Arecibo message) என்ற செயல் முறை ஆய்வுச் சேதி பலரும் அறிந்ததே. இன்றும் CETI தொடர்பான ஆய்வுகள் பல அமைப்புகளால் நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கிடையில், நமக்கும் பரந்த வான் வெளிக்கும் மிகுந்த தொலைவு இருப்பதால், வேற்றுலக நுண்ணறிவு உயிரினத்தோடு தொடர்பு கொள்வதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவே என்ற நிலைப்பாட்டை அமெரிக்க அரசாங்கம் எடுத்துள்ளது. [10][11]
மனிதப் பண்பாட்டின் மீது தாக்கம்
[தொகு]வேற்றுலக நுண்ணறிவு உயிரினத்தின் தாக்கம் நம் மீது எந்த அளவுக்கு இருக்கும் எனக் கூற இயலாது. அவர்கள் நம்மை விட அறிவியல் வளர்ச்சியில் மிக முன்னேறி இருப்பார்களேயானால், நம்மைப் போல் ஒரு விலங்கு இனமாக இல்லாமல், ஒரு வேளை, கணிப்பொறிக்குள் இயங்கும் இனமாக இருக்கலாம். அவர்கள் நம்மிடம் தொடர்பு கொள்ள மின் காந்த அலைகள், நேர் முகச் செயல் வடிவங்கள், அவர்கள் உலகத்தில் படைத்த கருவிகள் ஆகிய எதைப் பயன்படுத்தினாலும், அதன் இறுதி முடிவு என்னவாகும் என்று அறுதியிட்டுக் கூற இயலாது. [12] ஓர் இனத்தின் மீது வலிமை வாய்ந்த மற்றோர் இனம் சேரும் போது (அல்லது தாக்கும் போது) என்ன ஆகும் என்பதற்குக் கொலம்பியப் பரிமாற்றம்(Columbian Exchange) ஓர் எடுத்துக் காட்டாகக் காட்டப் படுகின்றது. இதனால் இனங்களும் நாகரிகங்களும் அழியும் நிலை ஏற்படலாம். [13]
பறக்கும் தட்டுகள்
[தொகு]ஒரு சிலர் வானில் பார்த்ததாகக் கூறும் பறக்கும் தட்டுகள் (UFO) வேற்றுலக நுண்ணறிவு உயிரினங்கள் அனுப்பியதாகவும் இருக்கலாம் என்றும் கருதப் படுகின்றது. [14]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Plurality of Worlds: The Extraterrestrial life Debate from Democritus to Kant, by Steven Dick, Cambridge University Press 1984
- ↑ The Extraterrestrial Life Debate: 1750-1900, by Michael J. Crowe, Dover Publications, 2011
- ↑ Are we alone? Peter Spinks. May 21, 2013.
- ↑ Peacock, John A. (1998). Cosmological Physics. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். p. 66. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-42270-1.
- ↑ Hickman, Leo (25 April 2010). "Stephen Hawking takes a hard line on aliens". தி கார்டியன். https://www.theguardian.com/commentisfree/2010/apr/26/stephen-hawking-issues-warning-on-aliens. பார்த்த நாள்: 24 February 2012.
- ↑ Krauthammer, Charles (December 29, 2011). "Are we alone in the universe?". தி வாசிங்டன் போஸ்ட். https://www.washingtonpost.com/opinions/are-we-alone-in-the-universe/2011/12/29/gIQA2wSOPP_story.html.
- ↑ Kardashev, Nikolai. "On the Inevitability and the Possible Structures of Supercivilizations", The search for extraterrestrial life: Recent developments; Proceedings of the Symposium, Boston, MA, June 18–21, 1984 (A86-38126 17-88). Dordrecht, D. Reidel Publishing Co., 1985, p. 497–504.
- ↑ Zaun, Harald (1 November 2011). "Es war wie eine 180-Grad-Wende von diesem peinlichen Geheimnis!" (in German). Telepolis (Heise). http://www.heise.de/tp/artikel/35/35756/1.html.
- ↑ "The search for ET is a detective story without a body" by Nigel Henbest, New Scientist, March 9, 2013, p. 53.
- ↑ Larson, Phil (5 November 2011). "Searching for ET, But No Evidence Yet". White House. Archived from the original on 24 November 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-11-06.
- ↑ Atkinson, Nancy (5 November 2011). "No Alien Visits or UFO Coverups, White House Says". UniverseToday. பார்க்கப்பட்ட நாள் 2011-11-06.
- ↑ Harrison, A. A. (2011). "Fear, pandemonium, equanimity and delight: Human responses to extra-terrestrial life". Philosophical Transactions of the Royal Society A: Mathematical, Physical and Engineering Sciences 369 (1936): 656. doi:10.1098/rsta.2010.0229. Bibcode: 2011RSPTA.369..656H இம் மூலத்தில் இருந்து 25 December 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6DA62RTMm?url=http://rsta.royalsocietypublishing.org/content/369/1936/656.full.pdf+html. பார்த்த நாள்: 5 April 2012.
- ↑ Kazan, Casey (1 August 2008). "The Impact of ET Contact: Europe's Scientists Discuss The Future of Humans in Space". Daily Galaxy. Archived from the original on 15 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 21 April 2012.
- ↑ Fuller, Curtis (1980). Proceedings of the First International UFO Congress. New York: Warner Books. pp. 157–163.