வேற்றிட இயக்குநீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வேற்றிட இயக்குநீர் (ectopic hormone) என்பது தான் இயல்பாகச் சுரக்கப்படும் உறுப்பின் இழையத்தில் இருந்து அல்லாது வேறு ஒரு இழையத்தால் சுரக்கப்படும் இயக்குநீர் ஆகும். பொதுவாக வேற்றிட இயக்குநீர்கள் புற்றுநோய்க் கலங்களால் சுரக்கப்படுகின்றன. மனித உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுவிலும் உள்ள டி.என்.ஏ இலும் எல்லா இயக்குநீருக்குமான மரபியல் தகவல்கள் உண்டு. ஆனால் இயல்பான நிலையில் எல்லா உயிரணுக்களிலும் அத்தகவல்கள் மொழிபெயர்க்கப்பட்டு இயக்குநீர்ப் புரதங்கள் உண்டாவதில்லை. ஆனால் புற்றுநோய்க் கலங்கள் நிலைப்பிறழ்வடைந்தவையாதலால் அவை இயல்புக்கு மாறாக இயக்குநீரைச் சுரக்கின்றன.

(எ.கா) இயல்பாக சிறுநீரகத்தின் மேல் உள்ள அட்ரீனல் சுரப்பியால் சுரக்கப்படும் ACTH இயக்குநீர் நுரையீரலில் ஏற்படும் சிறிய கலப்புற்று நோயில் (small cell carcinoma of lung) சுரக்கப்படுவது[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. Sai-Ching Jim Yeung, MD, PhD and Robert F. Gagel, MD. (2003). "Endocrine Paraneoplastic Syndromes (“Ectopic” Hormone Production)". Holland-Frei Cancer Medicine. 6th edition.. BC Decker Inc.. பார்த்த நாள் மே 14, 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேற்றிட_இயக்குநீர்&oldid=1930396" இருந்து மீள்விக்கப்பட்டது