உள்ளடக்கத்துக்குச் செல்

வேர்ப்பாலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிழக்கு காசி மலைப்பகுதியில் இரட்டை வேர் பாலம்
கொங்தோங் கிராமத்துக்கு அருகில் உள்ள ஒரு வேர் பாலம்.

வேர்ப்பாலம் (Living root bridges) என்பது வடகிழக்கு இந்தியாவில் உள்ள மேகாலயாவின் தென் பகுதியில் உயிருள்ள மரங்களின் வேரைக் கொண்டு படிப்படியாக இயற்கையான முறையில் அமைக்கப்படும் பாலங்களாகும். இங்கு இரப்பர் மரங்களின் (சீமை ஆல்) மேல் பக்கமாக உள்ள காற்று வேர்களை கையால் வேண்டியவாறு வளைத்து முறுக்கி இணைத்து உருவாக்கப்படுகின்றன.[1][2] ) இவ்வகை பாலங்கள் காசி மற்றும் ஜெய்ந்தியா மலைப்பகுதிக்கு இடையில் ஷில்லாங் பீடபூமி பகுதி மக்களால் அமைக்கப்படுகின்றன.

பாலம் அமைக்க வேண்டிய பகுதியில் வளைந்து கொடுக்கும் மர வேர்களை முறுக்கி முறுக்கி ஆற்றின் மறுபுரம் நோக்கி செலுத்துகிறார்கள் வேர்கள் மறு கரையை அடைந்தது மண்ணைத் தொட்டு அங்கும் வேர் பரவுகிறது. இந்த வேர்களை பாக்கு மரத்தில் வெற்றிலைக் கொடிகள் சுற்றி செல்வதுபோல அமைக்கிறார்கள்.[3] இவ்வாறு ஆறுகளின் குறுக்காக வைக்கப்பட்டு எதிர் பக்கதிதல் உள்ள சீமை அத்தி வேர்களை குச்சி, கற்கள் ஆகியவற்றின் உதவியுடன் சீர்படுத்தி, நீரோடைகளுக்கு இடையே பாலம் அமைக்கப்படுகின்றது. இந்த செயல்முறையில் பாலங்களை அமைக்க 15 ஆண்டுகள்வரை ஆகின்றது.[4] இந்த பயனுள்ள உயிருள்ள வேர்ப் பாலத்தை அமைக்கும் நுட்பம் பல நூறு ஆண்டுகளாக பரிணாமித்து வந்துள்ளது. இந்த பாலம் மரங்களின் வேர் தடிமன் கூடகூட வலிமை மிக்கதாக மாறுகிறது. பாலத்தின் ஆயுள் மரங்களின் வேர் ஆரோக்கியமாக உள்ளவரை நீடிக்கிறது.[5][6] நன்கு வளர்ந்த மேகாலயா வேர்ப் பாலங்கள் மிகவும் உறுதி வாய்ந்தவையாக இருக்கின்றன சில பாலங்கள் 50 பேர் வரை எடை தாங்கக் கூடியனவாகவும், சுமார் 30 மீட்டர் நீளம் கொண்டவையாகவும் உள்ளன. அவை வளர வாளர, நாளாக நாளாக வலு அதிகரிக்கின்றன. மேகாலயா வேர்ப் பாலங்களில் சில நூற்றாண்டுகள் பழமையானவையாகும்.[7]

வரலாறு

[தொகு]

உள்ளூர் காசி மக்களுக்கு வாழும் வேர்ப் பாலங்கள் என்னும் பாரம்பரியம் எப்படி தொடங்கியது எப்படி தெரியும் என்பது தெரியவில்லை. சிரபுஞ்சி வேர் பாலங்கள் பற்றிய பழைய குறிப்பு லெப்டினன்ட் எச் யூல் அவர்களால் 1844 இல் வங்காளத்தின் ஆசியச் சமூகத்தின் இதழில் ஆச்சர்யத்துடன் எழுதியுள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Lewin, Brent (November 2012), "India's living Bridges", Reader's Digest Australia, pp. 82–89, archived from the original on 2012-11-16, பார்க்கப்பட்ட நாள் 2017-02-11
  2. "Living Root Bridge in Laitkynsew India". www.india9.com. பார்க்கப்பட்ட நாள் 2010-02-22.
  3. Vallangi, Neelima. "Indias amazing living root bridges". BBC. பார்க்கப்பட்ட நாள் 27 August 2015.
  4. Baker, Russ.
  5. "Cherrapunjee.com: A Dream Place". Cherrapunjee Holiday Resort. பார்க்கப்பட்ட நாள் 2010-05-07.
  6. "Living Root Bridge". Online Highways LLC. 2005-10-21. பார்க்கப்பட்ட நாள் 2010-05-07.
  7. "மேகாலயா பழங்குடிகள் உருவாக்கிய உயிருள்ள பாலம்: அதிசயத்தை உலகுக்கு சொன்ன தமிழர்". BBC News தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2023-05-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேர்ப்பாலம்&oldid=3714074" இலிருந்து மீள்விக்கப்பட்டது