உள்ளடக்கத்துக்குச் செல்

வேரா பெதரோவ்னா கசே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேரா பெதரோவ்னா கசே
தாய்மொழியில் பெயர்Вера Фёдоровна Газе
பிறப்பு(1899-12-29)29 திசம்பர் 1899
புனித பீட்டர்சுபர்கு, உருசியா
இறப்பு3 அக்டோபர் 1954(1954-10-03) (அகவை 54)
இலெனின்கிராது, சோவியத் ஒன்றியம்
தேசியம்உருசியர்
பணிவானியல்
செயற்பாட்டுக்
காலம்
1921–1954
அறியப்படுவதுஒண்முகில்களின் ஆய்வு

வேரா பெதரோவ்னா கசே (Vera Fedorovna Gaze) (உருசியம்: Вера Фёдоровна Газе; 29 திசம்பர் 1899 – 3 அக்தோபர் 1954)ஓர் உருசிய வானியலாளர் ஆவார். இவர் கதிருமிழ்வு ஒண்முகில்களையும் சிறுகோள்களையும் ஆய்வு செய்தார். இவர் ஏறதாழ, 150 ஒண்முகில்களைக் கண்டுபிடித்தார். இவர் 2388 கசே கோள் கண்டுபிடிப்புக்காக இறந்தபின்னர் பெருமை செய்யப்பட்டார். 2388 கசே கோளும் வெள்ளியின் குழிப்பள்ளமான கசே குழிப்பள்ளமும் இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளன.

இளமையும் கல்வியும்[தொகு]

இவர் 1899 திசம்பர் 29 இல் (முன்பு திசம்பர் 17 ) உருசியாவில் உள்ள புனித பீட்டர்சுபர்கில் பிறந்தார். இவர் 1921 முதல் 1926 வரை இலெனின்கிராது வானியல் நிறுவனத்தில் பணிபுரிந்தார். இந்நிறுவனம் பிறகு கோட்பாட்டு வானியல் நிறுவனமாக பெயர் மாற்றப்பட்டது. இவர் பெத்ரோகிராது பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கல்வி கற்றார். இவர் 1924 இல் இளவல் பட்டம் பெற்ற பின்னர் 1926 புல்கோவா வான்காணகத்தில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கியுள்ளார்.

வாழ்க்கைப்பணி[தொகு]

இவர் 1929 ஈர்ப்பளவு அளக்கைப் பயணத்திலும் 1936 முழு சூரிய ஒளிமறைப்பு நோக்கீட்டுப் பயணத்திலும் பங்கேற்றார்.[1] 1936 ஒளிமறைப்பு சோவியத் நாட்டின் பகுதிக்குக் குறுக்காக கடந்து சென்றதால் அதை சோவியத் ஒன்றியத்தில் மட்டுமே காண முடிந்துள்ளது. எனவே ஏறக்குறைய 30 30 பன்னாட்டுப் பயணங்கள் ஒளிமறைப்பு நோக்கீட்டுக்காக ஜூன் 17 அன்று அப்போது உருசியாவுக்கு வந்தன.[2] இந்த ஒளிமறைப்பை இரண்டு மணி நேரம் மட்டுமே நோக்க முடிந்தது.[3]

இவர் 1936 முதல் 1940 வரை புல்கோவா வான்காணகத்துக்கு இழிதகவை இழைத்தமைக்காக அரசியல் அடக்குமுறைக்கு உள்ளானார்.[4] இவர் ஆங்கில மொழிபெயர்ப்புக்காக 1935 இல் தரப்பட்ட நிக்கோலாய் மீகைலோவிச், வொரனோவ் ஆகியோரின் அறிக்கையில் உள்ள கணிப்புப் பிழைகளைக் கண்டுபிடிக்க நேர்ந்துள்ளது. வொரனோவ் சிறுகோள்களின் இயக்கத்துக்கான கோட்பாடுகளைப் பற்றி ஆய்வுரை வெளியிட்டு புகடைந்து வரும் அறிஞர் ஆவார். இந்த ஆய்வுரையின் அடிப்படையில் இவர் புல்கோவா வான்காணகத்தில் பணியமர்த்த்ப்பட்டார். இவர் 13 எகிரியா சிறுகோளின் எப்பிமெரிசு கணிப்புகளை வைத்து மற்றொரு ஆய்வுரையையும் வெளியிட்டுள்ளார். இதில் தான் கசே பிழைகளைக் கண்டுபிடித்து தன் உயர் அலுவலருக்கு அறிவித்தார். தன்னைக் கேள்வி கேட்டபோது அந்தக் கணிப்புகளைத் தன் கோட்பாட்டைப் பயன்படுத்திக் கணிக்கவில்லையென ஏற்றுக்கொண்டார், ஆனால் கோளின் இருப்புகளை அதன் மதிப்பீடுகள் சார்ந்து கணித்துள்ளார். இந்தத் தவறான நடவடிக்கைக்காக இவர் கண்டிக்கப்பட்டபோது ஊடகத்தினர் தலையிட்ட்தால் அந்நிகழ்ச்சி சார்ந்த அனைவரையும் சிறையெடுக்க நேர்ந்தது.[5] கசே இவரது பல ஆய்வுக் கட்டுரைகளை மொழிபெயர்த்து கொண்டிருந்தமையால் கசே அவருக்கு உதவி இருக்கலாம் எனக் கருத நேர்ந்துள்ளது.[6] இவருக்கு எதிரான எழுத்துவழி சாட்சியம் ஏதும் கிடைக்காதமையால் பின்னர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.[5]

கசே 1940 இல் சீமைசு வான்காணகத்துக்கு மாறினார். இது ஜார்ஜிய தேசிய வானியற்பியல் வான்காணகம் ஆகும் இது அபாசுட்டுமணி வானியற்பியல் நோக்கீட்டகமென அழைக்கப்படுகிறது. இங்கு இவர் 1941 முதல் 1945 வரை பணிபுரிந்துள்ளார். பிறகு இவர் சோவியத் அறிவியல் கல்விக்கழகமான கிரீமிய வானியற்பியல் நோக்கீட்டகத்தின் பணியாளரானார். இவர் 1940 இல் ஒய் காசியோபையாயே கதிர்நிரல் மாற்றங்களைக் கண்டறிந்தார். மேலும் இவர்[1] அந்த நோக்கீட்டக இயக்குநரான கிரிகோரி ஆபிரமோவிச் சாய்ன் உடன் இணைந்து,[7] கசேவிண்மீன்களின்கரிம ஓரகத் தனிமங்களின் மூலக்கூறுகளை ஆய்வு செய்தார் மேலும் ஒண்முகில்களின் கட்டமைப்பையும் ஆராய்ந்தார். இதைக் கொண்டு ஒண்முகில்களின் உருவாக்க நிகழ்வில் தூசு, வளிம உருவளவு வகிக்கும் பங்களிப்பைத் தீர்மானிக்க முயன்றார்.[1] இவர் ஒண்முகில்களின் ஒளியின் சிவப்புநிற எச்-ஆல்பா (Hα ) உமிழ்வைப் பதிவு செய்து 150 "புதிய பால்வெளி வெளிய்யீட்டு ஒண்முகில்களைக் கண்டறிந்தார்".[8] கசேவும் சாய்னும் 1952 இல் , விரவிய வளிம் ஒண்முக்கில்களின் சில ஆய்வு முடிவுகளும் அண்டப்பிறப்பில் அவற்றின் செயற்பாங்கும் எனும் தலைப்பில் ஒரு நூலை வெளியிட்டனர்.[9]

இறப்பும் தகைமையும்[தொகு]

கசே 1954 அக்தோபர் 3 அன்று இலெனின்கிராதில்(புனித பீட்ட்ர்சுபர்கில்) இறந்தார். இவர் புனித பீட்டர்சுபர்கு புறநகரில் அமைந்த புல்கோவா வான்காணகத்துக்கு அருகில் உள்ள வானியலாளர் கல்லறைத் தோட்டத்தில் புதைக்கப்பட்டார்.[10]

1977 இல் கண்டுபிடிக்கப்பட்ட கசே எனும் கோள் இவர் இறந்த இவரது நினைவாக 2388 கசே எனப் பெயரிடப்பட்டது.[11] மேலும் வெள்ளியின் குழிப்பள்ளம் ஒன்றும் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது.[12]

தேர்ந்தெடுத்த நூல்கள்[தொகு]

 • Gaze, V F (1926). Orbit of the spectroscopic binary [alpha] Ursae Minoris (1922-1924). Moscow, Russia: Glav. upr. nauch. uchrezhdeniiami.
 • Gaze, V F (1929). Velocity curves of [zeta] Geminorum in layers of different height in the chromosphere. Moscow, Russia: Glav. upr. nauch. uchrezhdeniiami.
 • Appell, Paul Émile; Gaze, Vera Fedorovna; Malkin, Nikolaj Romanovič; Hublarova, S L; Idel'son, Naum Il'ič (1936). Figury ravnovesiâ vraŝaûŝejsâ odnorodnoj židkosti (in Russian). Leningrad, Russia: ONTI. Glavnaâ redakciâ obŝestvennoj literatury.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
 • Shain, Grigorii Abramovich; Gaze, Vera Fedorovna (1952). Nekotorye rezul'taty issledovanii a diffuznykh gazovykh tumannosteii ikh otnoshenie k kosmogonii (in Russian). Moscow, Russia: Izd-vo Akademii nauk SSSR.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 "Газе Вера Федоровна" (in Russian). Астронет. பார்க்கப்பட்ட நாள் 18 November 2015.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
 2. Perelman & Shkarovsky-Raffe 2000, ப. 86.
 3. Guillermier & Koutchmy 1999, ப. 105.
 4. Абалакин, В.К.; Львов, В.Н.; Московченко, Н.Я.; Соболева, Т.В.; Толбин, С.В. "Пулковская страница ОСЗ" (in Russian). St. Petersburg, Russia: Российской Академии наук, Санкт-Петербург, Россия. பார்க்கப்பட்ட நாள் 18 November 2015.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
 5. 5.0 5.1 Бронштэн, В. А. (27 February 2015). "Из истории науки. Николай Воронов" (in Russian). Vestishki. பார்க்கப்பட்ட நாள் 18 November 2015.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
 6. Бронштэн, В.А (2001). ""Дело Воронова" – взгляд через две трети века" (in Russian). Историко-астрономические исследования (Гос. изд-во физико-математической лит) 26: 214–240. http://www.ihst.ru/projects/sohist/papers/iai/26/214-240.pdf. பார்த்த நாள்: 18 November 2015. 
 7. Lankford 1997, ப. 186.
 8. Trimble, et. al. 2007, ப. 1046.
 9. "Nekotorye rezul'taty issledovanii a diffuznykh gazovykh tumannosteii ikh otnoshenie k kosmogonii". HathiTrust. 1952. பார்க்கப்பட்ட நாள் 18 November 2015.
 10. "Вера Фёдоровна Газе" (in Russian). Космический мемориал. பார்க்கப்பட்ட நாள் 18 November 2015.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
 11. Schmadel 2013, ப. 317.
 12. Bergeron 2012, ப. 598.

நூல்தொகை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேரா_பெதரோவ்னா_கசே&oldid=3602139" இலிருந்து மீள்விக்கப்பட்டது