வேயின் பார்னெல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வேயின் பார்னெல்
Wayne Parnell.jpg
தென்னாப்பிரிக்கா கொடி தென்னாபிரிக்கா
இவரைப் பற்றி
முழுப்பெயர் வேயின் டிலான் பார்னெல்
பிறப்பு 30 சூலை 1989 (1989-07-30) (அகவை 29)
தென்னாபிரிக்கா
வகை பந்து வீச்சு சாளர்
துடுப்பாட்ட நடை இடதுகை
பந்துவீச்சு நடை இடதுகை விரைவு மிதம்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு சனவரி 14, 2010: எ இங்கிலாந்து
கடைசித் தேர்வு பிப்ரவரி 20, 2014: எ ஆஸ்திரேலியா
முதல் ஒருநாள் போட்டி (cap 94) சனவரி 30, 2009: எ ஆத்திரேலியா
கடைசி ஒருநாள் போட்டி நவம்பர் 30, 2013:  எ இந்தியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒ.நாமுதல்ஏ-தர
ஆட்டங்கள் 4 43 50 109
ஓட்டங்கள் 44 344 1,408 1,327
துடுப்பாட்ட சராசரி 14.66 22.93 23.08 25.51
100கள்/50கள் 0/0 0/1 0/7 2/2
அதிக ஓட்டங்கள் 22 56 91 129
பந்து வீச்சுகள் 357 1,939 7,683 4,858
இலக்குகள் 7 59 134 144
பந்துவீச்சு சராசரி 45.40 30.20 32.71 30.56
சுற்றில் 5 இலக்குகள் 0 2 3 3
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 n/a 0 3
சிறந்த பந்துவீச்சு 2/17 5/48 7/56 6/51
பிடிகள்/ஸ்டம்புகள் 1/– 5/– 18/– 18/–

சனவரி 8, 2015 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

வேயின் டிலான் பார்னெல் (Wayne Dillon Parnell, பிறப்பு: சூலை 30, 1989), தென்னாபிரிக்கா துடுப்பாட்ட அணியின் பந்து வீச்சாளர்களுள் ஒருவர். அணியின் இடதுகை விரைவு மித பந்துவீச்சுசாளரான இவர் இடதுகை துடுப்பாளரும் கூட. களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது.இவர் தென்னாப்பிரிக்க அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடி வருகிறார். மேலும் இவர் கேப்கோராஸ், வாரியர்ஸ், கிழக்கு மாகாணம், கெண்ட் மாகாணத் துடுப்பாட்ட அணி, சசெக்ஸ் துடுப்பாட்ட அணி, கிளாமோர்கன் மாகாணத் துடுப்பாட்ட அணி, இங்கிலாந்து மாகாணத் துடுப்பாட்ட அணி, பார்படோசு ஆகிய அணிக்களுக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்தியன் பிரீமியர் லீக் தொடர்களில் இவர் டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் புனே வாரியர்சு இந்தியா ஆகிய அணிகளுக்காக விளையாடினார்.

சர்வதேச போட்டிகள்[தொகு]

2008 ஆம் ஆண்டில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் தென்னாப்பிரிக்க அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார். மேலும் இவர் 2006 ஆம் ஆண்டில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரிலும் தென்னாப்பிரிக்க அணியின் சார்பாக விளையாடினார். மேலும் 2008 ஆம் ஆண்டில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 8 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து ஆறு இலக்குகளைக் கைப்பற்றினார். மேலும் மட்டையாட்டத்தில் 57 ஓட்டங்களை அடித்தார்.[1] இந்தத் தொடரில் அதிக இலக்குகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் 18 இலக்குகள் எடுத்து முதல் இடத்தில் இருந்தார்.இவரின் பந்துவீச்சு சராசரி 8.38 ஆக இருந்தது.[2]

2008 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணி ஆத்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகள் கொண்?ட தொடரில் விளையாடியது.[3][4] இதில் சனவரி 13 இல் , பிரிசுபேன் துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் பந்துவீசி அதிக ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார் . மேலும் களத் தடுப்பாட்டத்தில் முக்கிய வீரர் அடித்த பந்தை பிடிக்கத் தவறினார். பின் பார்வையாளர் ஒருவர் லேசர் ஒளியை அடித்ததனால் அந்தப் பந்தை பிடிக்க முடியவில்லை என விளக்கம் தெரிவித்தார்.[5]

2009 ஐசிசி உலக இருபது20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணியில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். மே மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடினார். இதில் 9 இலக்குகளைக் கைப்பற்றினார். இவரின் பந்துவீச்சு சராசரி 13.22 ஆகும்[6]. இதில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 14 ஓட்டங்களை விட்டுக் ஒடுத்து 3 இலக்குகளைக் கைப்பற்றினார். துவக்க ஓவர்களில் 2 ஓவர்களை வீசி 2 ஒட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 1 இலக்கினைக் கைப்பற்றினார்.[7] இதன் பின் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்கள்வீசி 13 ஓட்டங்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 இலக்குகளைக் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினார்.[8] இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருதினைப் பெற்றார். இவரின் நிலையான விளையாட்டுத் திறனால் அணியில் நிலையான இடம் கிடைத்தது.[9] இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தங்கப் பந்து வென்றார்.

இஸ்லாம் மதத்தை தழுவியமை[தொகு]

ஜூலை 28, 2011 ல் இஸ்லாத்தை ஏற்றிருப்பதாக இவர் அறிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாண்டு ஜனவரி மாதமே தான் இஸ்லாத்தை ஏற்று கொண்டதாகவும் தன் பெயரை புதிதாய் பிறந்த மகன் என பொருள்தரும் வலீத் என வைக்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இஸ்லாத்தை பற்றிய குறித்த கால ஆராய்ச்சிக்கு பிறகு இம்முடிவை அவர் எடுத்ததாக தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்க மக்களும் ஊடகங்களும் தன் கிரிக்கெட் ஆட்டத்தில் காட்டும் ஆர்வத்தை மதிக்கும் அதே வேளையில் எந்நம்பிக்கையை ஏற்பது என்பது தனது தனிப்பட்ட உரிமை என்றும் கூறியுள்ள அவர் அதை ராசிகர்கள் மதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.[10][11]

இவற்றையும் காண்க[தொகு]

ஏ பி டி வில்லியர்ஸ்

மோர்னி மோர்க்கல்

அல்பி மோர்க்கல்

மேற்கோள்கள்[தொகு]

 1. Bangladesh Under-19s v South Africa Under-19s, Scorecard, CricketArchive, Retrieved on 30 April 2008
 2. Under-19 World Cup, 2007/08 – Most Wickets, Cricinfo, Retrieved on 30 April 2008
 3. South Africa in Australia ODI Series, 2008/09 – South Africa ODI Squad, Cricinfo, Retrieved on 13 January 2009
 4. South Africa in Australia Twenty20 International Series, 2008/09 – South Africa Twenty20 Squad, Cricinfo, Retrieved on 13 January 2009
 5. The Proteas might have lost anyway, IOL, Retrieved on 29 July 2009
 6. ICC World Twenty20, 2009 – South Africa averages, Cricinfo, Retrieved on 29 July 2009
 7. England v South Africa (14th match, Group E), commentary, Cricinfo, Retrieved on 29 July 2009
 8. South Africa v West Indies (17th match, Group E), scorecard, Cricinfo, Retrieved on 29 July 2009
 9. Three South Africans in World T20 team, IOL, Retrieved on 29 July 2009
 10. Jang, Online. "Wayne Parnell embraces Islam". TheNews. பார்த்த நாள் 29 July 2011.
 11. The Express, Tribune. "S.African bowler Wayne Parnell converts to Islam". News. பார்த்த நாள் July 29, 2011.

வெளியிணைப்புகள்[தொகு]

கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: வேயின் பார்னெல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேயின்_பார்னெல்&oldid=2714062" இருந்து மீள்விக்கப்பட்டது