வேம்பு பால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வேம்பு பால் என்பது பூச்சிகளை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் ஒரு மருந்தாகும். வேம்பின் பல்வேறு பாகங்களான இலை, பூ, காய், விதை போன்றவையும், உபபொருட்களான எண்ணெய், பிண்ணாக்கு ஆகியவையும் பயிர் பாதுகாப்பில் பயனாகின்றன.வேம்பில் அசாடிராக்டின்[1] மற்றும் நிம்பிடின்[2] என்னும் வேதிப்பொருட்கள் உள்ளன. இவை பூச்சி விரட்டியாகவும், பூச்சி தடுப்பானாகவும், பூச்சிகொல்லியாகவும் பல்வேறு பயிர்கள் மற்றும் தானிய சேமிப்பில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வேம்பு பாலை நாமே சுயமாக தயாரித்து பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.

தயாரிக்கும் முறை[தொகு]

முதிர்ந்த வேப்பம் பழங்களை சேகரித்து 3-5 நாட்கள் ஊற வைக்க வேண்டும். பழத்திலுள்ளசதை மற்றும் தோலை நீக்கி விதைகளை கழுவி 8 – 10 நாட்கள் வரை நிழலில் உலர்த்த வேண்டும்.விதைகளிலுள்ள ஓட்டை நீக்கி 50 கிராம் பருப்பை தூள் செய்ய வேண்டும். இதனுடன் ஒரு லிட்டர் நீர் சேர்த்து 8-10 மணி நேரம் ஊற வைத்த பின் மெல்லிய துணி பயன்படுத்தி வடிகட்ட வேண்டும். வடித்து எடுத்த கரைசலுடன் 1மிலி டீபால்[3] (ஒட்டும் திரவம்) சேர்க்க வேண்டும். இக்கலவையை மாலை நேரத்தில் பயிர் பாகங்களில் படுமாறு தெளிக்க வேண்டும்.

பயன்கள்[தொகு]

  • வீட்டு தோட்டத்தில் விளைவிக்கப்படும் காய்கறி பயிர்களுக்கு ஏற்றது.
  • இரசாயன மருந்து பயன்படுத்தப்படாததால் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காது.
  • பயிருக்கு நன்மை தரும் பூச்சிகளுக்கு பாதிப்பு இல்லை.
  • பயிர் பாதுகாப்பு செலவு குறைவு.
  1. https://en.wikipedia.org/wiki/Azadirachtin
  2. https://en.wikipedia.org/wiki/Nimbin_(chemical)
  3. http://teepol.co.uk/products/mpd.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேம்பு_பால்&oldid=2722305" இருந்து மீள்விக்கப்பட்டது