வேம்பத்தூர் பிச்சுவையர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேம்பத்தூர் பிச்சுவையர் இராமநாதபுரம் பாஸ்கர சேதுபதி மன்னரின் (1889–1892) அரசவையில் ஆஸ்தானப் புலவராய் இருந்தவர். இவர் "சிலேடைப் புலி" பிச்சுவையர் எனவும் அழைக்கப்பட்டார். இவர் பல தனிப் பாடல்களேயும் சிறுநூல்களையும் இயற்றியுள்ளார். இவர் சௌந்தரிய லஹரியை தமிழாக்கம் செய்த வேம்பத்தூர் வீரை கவிராஜ பண்டிதர் பரம்பரையில் பிறந்தவர். இவரின் தந்தை "சாம ஆண்டி ஐயர்" எனும் புலவர் ஆவார்.

இயற்றிய நூல்கள்[தொகு]

இவர் இயற்றிய நூல்களை பல , அவற்றுள் சில :

  • ஜெயசிந்தாமணி விநாயகர் பதிகம்
  • திருப்பரங்குன்ற முருகன் மேற்பாடிய சிந்து
  • தடுத்தாள்மாலை (முத்து கண்ணாற்றுச் சிவன் பேரில் பாடியது ).
  • ராஜராஜேஸ்வரி பதிகம்.
  • பெரியநாயகியம்மை பதிகம் .
  • மதுரை நீரோட்ட யமகவந்தாதி
  • பொன்மாரிச் சிலேடை வெண்பா மாலை.
  • வல்லைக் கும்மி , உமையாண்டாள் கும்மி
  • ஸ்ரீ சிருங்கேரி ஆச்சாரியார் பதிகம்.
  • அரிமளம் சிவானந்த ஸ்வாமிகள் பதிகம்.