வேமுரி கக்கையா
வேமுரி கக்கையா | |
---|---|
பிறப்பு | 1895 வேமுரி, குண்டூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
இறப்பு | 30 டிசம்பர் 1955 (வயது 60) ஐதராபாத்து, இந்தியா |
பணி | நடிகர் |
வெமுரி கக்கையா (Vemuri Gaggayya) (1895-1955) ஒரு இந்திய நடிகரும் பாடகரும் ஆவார். இவர் தெலுங்குத் திரைப்படங்கள் மற்றும் தெலுங்கு நாடகங்களில் தனது படைப்புகளுக்காக அறியப்பட்டவர்.
கக்கையா 1913-28 காலகட்டத்தில் கிருஷ்ணா மாவட்டம் மைலவரத்தில் "மைலவரமா பால பாரதி நாடக சமாஜத்தின்" முக்கிய உறுப்பினராக இருந்தார். "மைலாவரம் தியேட்டர்" மூலம், கக்கையா புராண பாத்திரங்களுக்கு பெயர் பெற்றவர். இவரது நாடக நிகழ்ச்சிகளைக் கண்ட சி. புல்லையா திரைப்படத் துறைக்கு இவரை அழைத்து வந்தார்.
1933ல் புல்லையா இயக்கிய சதி சாவித்திரி படத்தில் யமனாக நடித்தார். இப்படம் 2வது வெனிஸ் திரைப்பட விழாவில் கௌரவ பட்டயத்தைப் பெற்றது. [1] [2] ஸ்ரீ கிருஷ்ண லீலாலு (1935), ஜலந்திராவின் சதி துளசி (1936), சண்டிகா ( 1940), மற்றும் பக்த பிரகலாதா (1942) (இரணியகசிபு ) போன்றவை இவரது மற்ற முக்கிய பாத்திரங்கள். இவர் "போ பாலா பொம்மிக்கன்" மற்றும் "திக்கரமுலு சைதுனா" போன்ற பிரபலாமான பாடல்களை பாடியுள்ளார். [3]
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]கக்கையா 1895 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள வெமுருவில் பிறந்தார். சிறுவயதிலேயே தந்தையை இழந்த இவருக்கு இவரது மூத்த சகோதரர் இவருக்கு கல்வி கற்பிக்க முயன்றார். ஆனால் தனது முயற்சியில் தோல்வியடைந்தார். 1913 இல் இராமலட்சுமி என்பவரை மணந்தார். அந்த நாட்களில், சுரபி நாடக நிறுவனம் ஆந்திர பிரதேசம் முழுவதும் நாடகங்கள நடத்தி பெரும் கூட்டத்தை ஈர்த்து வந்தது. இதன் தாக்கத்தால் இசையும் பாடலும் கற்றுக்கொண்டார். அதே குழுவில் சேர்ந்து அவர்களுடன் சுற்றுப்பயணம் செய்து பல நாடகங்களில் நடித்தார். இவரது மகன் வேமுரி ராமையாவும் மேடை நடிகராக இருந்தவர். [4]
இறப்பு
[தொகு]வேமுரி கக்கையா 1955 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி தனது சொந்த கிராமமான வேமுருவில் இறந்தார்.
சான்றுகள்
[தொகு]- ↑ Narasimham. "Sati Savithri (1933)". http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/article871376.ece.
- ↑ Bhagwan Das Garg (1996). So many cinemas: the motion picture in India. Eminence Designs. p. 86. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-900602-1-X.
- ↑ Luminaries of 20th Century, Potti Sreeramulu Telugu University, Hyderabad, 2005.
- ↑ "Famous artists in Andhra Natakam".