வேப்பெண்ணெய்
வேப்பெண்ணெய் (Neem oil) என்பது வேப்ப மரத்தின் பழ விதைகளில் (வேப்பங்கொட்டை) இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் ஆகும். கோடை காலத்தில் வேம்புகளில் பூக்கும் பூக்களிலிருந்து காய்கள் உருவாகி, பழங்களாக பழுக்கும். உதிர்ந்த பழங்களை பொறுக்கி எடுத்து வெயிலில் உலர்த்தி அதன் விதையை எடுப்பர். அவ்விதைகளை அரைக்க எண்ணெய் கிடைக்கும். ஒரு மணமும், கசப்புத்தன்மையும் உடைய இந்த எண்ணெய் மருத்துவக் குணமுடையது. விதைகளை அரைத்த பின் கிடைக்கும் சக்கை வேப்பம் புண்ணாக்கு எனப்படும் இது ஒரு சிறந்த மண்ணுக்கான உரமாகவும் பூச்சிக்கொல்லியாகவும் பயன்படுகிறது.
வேப்பெண்ணெய் பொதுவாக குருதியைப் போன்று சிவப்பு நிறமுடையது. நிலக்கடலை, பூண்டு ஆகியவை இணைந்த ஒரு மணத்தை ஒத்தது. இது பெரும்பாலும் டிரைகிளிசரைடுகள், மற்றும் டிரிட்டர்பெனாய்டு ஆகியவற்றின் சேர்வைகளைக் கொண்டது. இவையே இதன் கசப்புத் தன்மைக்குக் காரணமாகும்.
வேப்பெண்ணெயில் காணப்படும் கொழுப்பு அமிலங்களின் சராசரி அளவு | ||
---|---|---|
பொதுப்பெயர் | அமிலம் | சேர்வை |
ஒமேகா-6 | லினோலெயிக் அமிலம் | 6-16% |
ஒமேகா-9 | ஒலெட்டிக் அமிலம் | 25-54% |
பாமித்திக்கு அமிலம் | எக்சடெக்கனோயிக் அமிலம் | 16-33% |
ஸ்டியரிக்கு அமிலம் | ஒக்டாடெக்கனோயிக் அமிலம் | 9-24% |
ஒமேகா-3 | ஆல்ஃபா-லினோலெனிக் அமிலம் | ?% |
பாமித்தலெயிக்கு அமிலம் | 9-எக்சாடெக்கனோயிக்கு அமிலம் | ?% |
பயன்கள்[தொகு]
வேப்பெண்ணெய் பொதுவாக சமையலில் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் இதிலுள்ள மருத்துவக் குணங்களின் காரணமாக, மருந்தாகவும், ஒப்பனைப் பொருட்களாகவும், சோப் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றது. அத்துடன் பீடைகொல்லிகள், பூச்சிகொல்லிகளாகப் பயன்படுத்தப்படுவதுடன், சேமிக்கப்பட்ட விதைகளை பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்கவும் உதவுகின்றது.[1]
மருத்துவக் குணங்கள்[தொகு]
வேப்ப எண்ணெய் முகப்பரு குறைக்கிறது [2]
ஒப்பனைப் பொருட்கள்[தொகு]
பீடைகொல்லிகள்[தொகு]
வேறு பயன்கள்[தொகு]
நச்சுவிளைவு[தொகு]
சில ஆய்வுகள் வேப்பெண்ணெயால் எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லை எனக் கூறும் அதேவேளை, வேறு சில ஆய்வுகள் இதனால் ஏற்படக் கூடிய பக்கவிளைவுகளைக் குறிப்பிடுகின்றன[3][4][5][6]. வேப்பெண்ணெயில் பலவிதமான பயனுள்ள இயல்புகள் இருப்பினும், செறிவு கூடிய நிலையில் பயன்படுத்தப்படும்போது, முக்கியமாக வாய்வழியாக உள்ளெடுக்கப்படும்போது, இதனால் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படலாம் எனச் சில ஆய்வு முடிவுகள் கூறுகின்றன[7].
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Boeke SJ, Boersma MG, Alink GM, van Loon JJ, van Huis A, Dicke M, Rietjens IM. "Safety evaluation of neem (Azadirachta indica) derived pesticides". J Ethnopharmacol. 2004 Sep. Laboratory of Entomology, Wageningen University, P.O. Box 8031, 6700 EH, The Netherlands. pp. 94(1):25-41.CS1 maint: multiple names: authors list (link)
- ↑ "neem oil for acne". 2013-04-26 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-08-25 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Enjoy a Greener Safer Life Style, Discover Neem". Birgit Bradtke. 26 மே 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Talwar GP, Raghuvanshi P, Misra R, Mukherjee S, Shah S. "Plant immunomodulators for termination of unwanted pregnancy and for contraception and reproductive health". Immunol Cell Biol. 1997 Apr. Source Reproductive Health and Vaccinology Division, International Centre for Genetic Engineering and Biotechnology, Aruna Asaf Ali Marg, New Delhi, India. pp. 75(2):190-2.CS1 maint: multiple names: authors list (link)
- ↑ Ghosesawar MG, Ahamed RN, Ahmed M, Aladakatti RH. "Azadirachta indica adversely affects sperm parameters and fructose levels in vas deferens fluid of albino rats". J Basic Clin Physiol Pharmacol. 2003. Post-Graduate Department of Zoology, Karnatak University, Dharwad 580 003, India. pp. 14(4):387-95.CS1 maint: multiple names: authors list (link)
- ↑ Brahmachari G. (2004 Apr 2). "Neem--an omnipotent plant: a retrospection". Chembiochem. Natural Product Laboratory, Department of Chemistry, Visva-Bharati University, Santiniketan 731235, West Bengal, India. brahmg2001@yahoo.co.in. pp. 5(4):408-21. Check date values in:
|date=
(உதவி) - ↑ Panda S, Kar A. "How safe is neem extract with respect to thyroid function in male mice?". Pharmacol Res. 2000 Apr. School of Life Sciences, Vigyan Bhawan, Khandwa Road, Indore, 452 017, India. pp. 41(4):419-22.