உள்ளடக்கத்துக்குச் செல்

வேப்பதா சிரஞ்சீவி ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேப்பதா சிரஞ்சீவி ராவ்
வேப்பதா சிரஞ்சீவி ராவ்
Vepada Chiranjeevi Rao
உறுப்பினர், ஆந்திரப்பிரதேச சட்டமன்றம்
பதவியில்
2023–2029
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு30 ஆகத்து 1972 (1972-08-30) (அகவை 54)
அரசியல் கட்சிதெலுங்கு தேசம் கட்சி
பெற்றோர்வேப்பதாதேமுது, சிலக்கம்மா

வேப்பதா சிரஞ்சீவி ராவ் (Vepada Chiranjeevi Rao) என்பவர் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1972 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 30 ஆம் தேதியன்று வேப்பதாதேமுது சிலக்கம்மா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். கல்வியாளர், எழுத்தாளர் மற்றும் பொருளாதார பேராசிரியர் என்று பன்முகங்களுடன் அறியப்படுகிறார். 2023 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் மேற்கு ராயலசீமா பட்டதாரிகள் தொகுதியில் (சிறீகாகுளம், விசாகப்பட்டினம், விழியநகரம்) தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

வேப்பதா சிரஞ்சீவி ராவ் 1972 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 30 ஆம் தேதி அனகப்பள்ளி மாவட்டம், இரவிகமத்தம் மண்டலத்தில் உள்ள தொண்டபுடி கிராமத்தில் பிறந்தார். நிவேதிதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தாவரவியல் விரிவுரையாளராக விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பணியாற்றினார். இவருடைய நிரந்தர குடியிருப்பு விசாகப்பட்டினத்தின் பெடவல்துரு ஆகும்.

கல்வி

[தொகு]

தனது சொந்த ஊரான தொண்டபுடியில் உள்ள மண்டல் பரிசத்து தொடக்கப் பள்ளியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை கல்வி கற்றார். அதே கிராமத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை படித்து முடித்தார். கல்வியையும் முடித்தார். கோத்தகோட்டில் உள்ள அரசு இளையோர் கல்லூரியில் இடைநிலைப் படிப்பையும், சோடாவரத்தில் உள்ள அரசு பட்டப்படிப்பு கல்லூரியில் கல்வியியல் பட்டத்தையும் முடித்தார். ஏலூரில் உள்ள சி.ஆர். ரெட்டி கல்வியியல் கல்லூரியில் முதுகலை பட்டமும், விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திரப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். பின்னர் முனைவர் பட்டம் பெற்றார்.

1998 ஆம் ஆண்டு வேப்பதா உயர்நிலைப் பள்ளியில் பள்ளி உதவியாளராகச் சேர்ந்தார். அங்கு சிறிது காலம் பணியாற்றிய பிறகு, 2002 ஆம் ஆண்டு சப்பாவரம் அரசு பட்டப்படிப்பு கல்லூரியில் பொருளாதார விரிவுரையாளராகச் சேர்ந்து, 2023 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் தன்னார்வ ஓய்வு பெற்றார்.[1][2][3][4][5][6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Vepada Chiranjeevi Rao(TDP):(ELECTED BY GRADUATES MLC election)". thehindu.com.
  2. "Public representative | Srikakulam District | India" (in அமெரிக்க ஆங்கிலம்).
  3. "MLC". thehansindia (in ஆங்கிலம்).
  4. "Sri Vepada Chiranjeevi Rao, Member of Legislative Council". Andhra Pradesh State Legislature, Govt. of Andhra Pradesh.
  5. "TDP’s Chiranjeevi Rao wins North Andhra Graduate MLC seat" (in en-IN). The Hindu. 18 March 2023 இம் மூலத்தில் இருந்து 1 July 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250701045221/https://www.thehindu.com/news/cities/Visakhapatnam/tdps-chiranjeevi-rao-wins-north-andhra-graduate-mlc-seat/article66635367.ece.
  6. "TDP wins North Andhra Graduates’ MLC seat" (in en). The New Indian Express. 18 March 2023. https://www.newindianexpress.com/states/andhra-pradesh/2023/Mar/18/tdp-wins-north-andhra-graduates-mlc-seat-2557174.html.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேப்பதா_சிரஞ்சீவி_ராவ்&oldid=4396506" இலிருந்து மீள்விக்கப்பட்டது