உள்ளடக்கத்துக்குச் செல்

வேத் மேத்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேத் பிரகாசு மேத்தா (Ved Prakash Mehta, பிறப்பு: மார்ச்சு 21, 1934) பிரித்தானிய இந்தியாவில் லாகூர் நகரில் பிறந்த ஓர் ஆங்கில எழுத்தாளர். ஐக்கிய அமெரிக்காவில் வாழ்ந்து வரும் இவர் நான்கு வயது குழந்தையாக இருக்கும்போதே மூளை உறையழற்சி (meningitis) நோயால் பாதிக்கப்பட்டுத் தன் கண் பார்வையை இழந்தார்.

இவரது தாய் சாந்தி மேத்தா குடும்பத்தலைவி. வேத் மேத்தா ஏழு குழந்தைகளில் ஐந்தாவதாகப் பிறந்தவர்.[1]

வேத் மேத்தாவின் தந்தையார் ஒரு மருத்துவர். எனவே தம் குழந்தைக்கு பல்வேறு சிகிச்சைகளை செய்தார். அவை பலனளிக்கவில்லை. மும்பையில் பார்வையற்றோருக்கான ஒரு பள்ளியில் வேத் சேர்க்கப்பட்டார். பின்னர் ஆக்சுபோர்டு ,ஆர்வர்டு பல்கலைக் கழகங்களில் சேர்ந்து வரலாறு போன்ற பாடங்களில் தேர்ச்சி பெற்றார். வேத் மேத்தா அபார ஞாபக சக்தி கொண்டவர்.[1]

1949 ஆம் ஆண்டு முதல் மேற்கத்திய நாடுகளில் வாழ்ந்தார். 1975 இல் அமெரிக்கக் குடிமகன் ஆனார். 1957 ஆம் ஆண்டில் தம் வாழ்க்கை வரலாற்றை 'பேஸ் டு பேஸ்' என்னும் பெயரில் எழுதி ஓர் ஆங்கில நூலாக வெளியிட்டார்.

மொத்தம் 27 ஆங்கில நூல்களை எழுதியுள்ளார். நியூயார்க்கர் என்னும் ஆங்கில இதழில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்தார். 2009ஆம் ஆண்டில் ராயல் இலக்கியக் கழகம் அவரை 'மதிப்புமிகு உறுப்பினர்' என்று கவுரவித்து விருது வழங்கியது. தனக்கு கிடைத்த பட்டங்களை விட காந்தியடிகள் பிறந்த நாட்டில் பிறந்தவன் என்பதற்காகப் பெருமை கொள்பவர்.[1] தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.[1]

நூல்கள்

[தொகு]

இவர் ஆங்கிலத்தில் 27 நூல்கள் எழுதியுள்ளார்.

வெளி இணைப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 குறைகள் சாதனைக்குத் தடையல்ல; கமலநாதன்; வானதி பதிப்பகம்; பக்கம்220-226
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேத்_மேத்தா&oldid=3229397" இலிருந்து மீள்விக்கப்பட்டது