உள்ளடக்கத்துக்குச் செல்

வேதி விபத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேதிப் பேரழிவு (Chemical disaster) என்பது மனித உடல்நலத்திற்கு அல்லது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அபாயகரமான வேதிப்பொருள் எதிர்பாராவிதமாக வெளிப்பட்டு பேரழிவுக்கு காரணமாவதைக் குறிக்கும். இத்தகைய இரசாயனப் பேரழிவுகள் சில சூழ்நிலைகளில் வேதி விபத்துக்கள் மூலமாக ஏற்படக்கூடும். தீப்பிடித்தல், வெடிப்பு, வாயுக் கசிவுகள், நச்சு அல்லது அபாயகரமான வேதிப்பொருட்களின் வெளியீடு ஆகியவை வேதி விபத்துகளில் அடங்கும் சில விபத்துகளாகும். இதனால் மக்களிடையே காய்ச்சல் நோய், காயம் அல்லது ஊனம் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.

வேதிப் பொருட்கள் சேகரிக்கப்படும் போது, போக்குவரத்து வழியாக இடமற்றம் செய்யும்போது அல்லது இவற்றை பயன்படுத்தும்போது வேதி விபத்துகள் ஏற்படலாம். தொழில்துறையில் நிகழும் விபத்துக்கள் மிக முக்கியமான விபத்துகள் ஆகும், முக்கிய இரசாயனப் பொருள்கள் உற்பத்தி மற்றும் அவற்றை சேமிக்கும் வசதிகள் செய்யப்படும்போது இத்தகைய விபத்துகள் நிகழ்கின்றன. 1984 ஆம் ஆண்டு போபால் நகரில் ஏற்பட்ட வேதிப் பேரழிவு இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட மிகவும் குறிப்பிடத்தக்க ஓர் இரசாயன விபத்து ஆகும். இவ்விபத்து வரலாற்றில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் யூனியன் கார்பைடு நிறுவன பூச்சிக்கொல்லி தொழிற்சாலையில் வெளியிடப்பட்ட மிகவும் நச்சுமிக்க மெத்தில் ஐசோசயனைடு வாயு கசிவினால் இறந்து போனார்கள்.

விபத்துகளைத் தடுக்கும் முயற்சிகளாக மேம்பட்ட பாதுகாப்பு அமைப்புகளிலிருந்து இரசாயனப் பயன்பாடு மற்றும் உற்பத்தி ஆகியவற்றில் அடிப்படைப் பாதுகாப்பு வரை பல மாற்றங்கள் செய்யப்படுகின்றன, இந்நடவடிக்கையை முதன்மை தடுப்பு அல்லது உள்ளார்ந்த பாதுகாப்பு எனக் குறிப்பிடுகிறார்கள்.

போபால் பேரழிவிற்குப் பின்னர் இரசாயன விபத்துகள் மீதான பாதுகாப்பு பற்றாக்குறையை உணர்ந்த்தால் அமெரிக்காவில் 1986 அவசரகால திட்டமிடல் மற்றும் சமூக தகவலறியும் உரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டது. அவசர அறிவிப்பு உட்பட நாடு முழுவதும் உள்ளூர் அவசர திட்டமிடல் முயற்சிகளை இச்சட்டம் ஆதரித்தது. நிறுவனங்கள் தங்களிடம் இருப்பிலுள்ள நச்சு இரசாயனங்கள் சேமிப்பைப் பற்றி பொதுமக்களிடம் பகிரங்கமாக தகவலை வழங்க இச்சட்டம் வலியுறுத்தியது. இத்தகைய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தீங்கு அல்லது மரணத்தை விளைவிக்கக்கூடிய கடுமையான நச்சு வெளியீடுகள் மற்றும் அவற்றால் பாதிக்கப்படக்கூடிய மண்டலங்களை குடிமக்கள் எளிதாக அடையாளம் காணலாம்.

1990 ஆம் ஆண்டில் இரசாயன பாதுகாப்பு மற்றும் தீங்குவிளைவித்தல் விசாரணை வாரியம் ஒன்று காங்கிரசால் நிறுவப்பட்டது. என்றாலும் 1998 ஆம் ஆண்டு வரை இவ்வாரியம் செயல்படவில்லை. எதிர்கால பாதுகாப்பு செயல்திறன் குறிகாட்டிகளைத் தடுக்க, இரசாயன விபத்துக்கள் நிகழ்வதற்கான வேர் காரணிகளை தீர்மானிப்பது, எதிர்காலத்தில் அவற்றை தடுப்பதற்கான பாதுகாப்பு பரிந்துரைகளை வழங்குவது போன்றவை வாரியத்தின் பணிகளாகும். மேலும் இரசாயன விபத்துக்கள் நிகழ்ந்துவிட்டால் அதை எவ்வாறு பாதுகாப்பாக எதிர்கொள்வது, விபத்துகள் நிகழாமல் எவ்வாறு தடுப்பது போன்றவை தொடர்பான பல்வேறு வகையான பட்டறைகளையும் இவ்வாரியம் ஒழுங்குபடுத்தி அளிக்கிறது [1].

ஐரோப்பிய ஒன்றியத்திலும் பிக்சுபோரோவ் பேரழிவு மற்றும் செவெசோ பேரழிவு போன்ற சம்பவங்கள் நிகழ்ந்த பின்னர் செவெசோ உத்தரவு மற்றும் செவெசோ திட்டமிடல் போன்ற சட்ட நடவடிக்கைகள் தோன்றின. இதனால் உள்ளூர் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு அறிக்கைகள் வழங்கப்படுகின்றன.

பல்வேறு பொருட்களின் ஆபத்து மதிப்பீடு மற்றும் அவற்றுக்கான அவசரத் திட்டமிடல் போன்ற பல்வேறு சட்டங்களின்படி தேவைப்படும் உதவிகளை வழங்கக்கூடிய இங்கிலாந்தில் உள்ள தேசிய வேதியியல் அவசர மையம், பெல்கியத்தில் உள்ள ஆபத்தான பொருட்களுக்கான தகவல் மையம் போன்ற அமைப்புகள் பல்வேறு நாடுகளும் தற்போது கொண்டிருக்கின்றன.

இங்கிலாந்தில், இங்கிலாந்தின் வேதியியல் வினைகளின் தீங்குகள் கருத்துக்களம் அதன் வலைத் தளத்தில் விபத்துக்கள் அரிக்கையை வெளியிடுகிறது [2]. இந்த விபத்துக்கள் அக்காலத்தில் சிறியனவாக இருந்தன. ஆனால் பின்னர் இவை பெரும் விபத்துக்களாக அதிகரித்தன. இந்த சம்பவங்களை வெளியிடுவதனால் விபத்துகள் நிகழ்வது தடுக்கப்படும் என்று நம்பப்படுகிறது. டிசம்பர் 2008 இன் படி அதன் இணைய தளத்தில் 140 க்கும் அதிகமான விபத்துகள் குறித்த கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Chemical Accidents: About பரணிடப்பட்டது மே 31, 2008 at the வந்தவழி இயந்திரம்." OECD Environment Directorate. OECD. 19 July 2007.
  2. Jones, Dr. Ron. "UK Chemical Reaction Hazard Forum Home". Archived from the original on 26 பிப்ரவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 22 October 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேதி_விபத்து&oldid=3572576" இலிருந்து மீள்விக்கப்பட்டது