வேதி தகவலியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணினி தொழில்நுட்பத்தின் முக்கிய பயன்பாடுகளில் ஒன்று வேதி தகவலியலாகும். வேதி தகவலியல் என்பது பன்முக நெறிகளைக் கொண்ட துறையாகும். இதில் உள்ளடக்கிய துறைகளாவன கட்டமைப்பு குறிப்பிடுதல், ஆராய்தல், மூலக்கூறு பண்புகளை முன்னுரைதல், மூலக்கூறு கட்டமைப்புகளை பார்வையிடுதல். எனவே, இத்துறை வேதியியலின் பல சிக்கல்களுக்கு தீர்வு காண்பதாக உள்ளது. தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாடுகளின் வாயிலாக அறிவியல் குறிப்புகளை அமைத்தலும், ஆராய்தலும் மற்றும் பலபடி சேர்மங்கள் பற்றிய குறிப்புகளை விரிவுப்படுத்துவதும் இதன் முக்கிய நோக்கமாகும்.

வேதிதகவலியல் என்பது வேதியலுக்கும் தகவல் தொழில் நுட்பத்திற்கும் இடையேயான தொடர்பை தெளிவாக விளக்குவதுடன், இந்த துறை மிகச் சிறந்த கருவியாகச் செயல்பட்டு வேதியியலைப் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள எளிய வகையில் பயன்படுகிறது.

வரையறை[தொகு]

வேதி தகவலியல் என்பது வேதியியல் துறையிலுள்ள எல்லையில்லா சிக்கல்களுக்கு தீர்வு காண கணினி மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையை பயன்படுத்துவதாகும்.

குறிக்கோள்[தொகு]

வேதி கட்டமைப்பின் வாயிலாக பெறப்பட்ட எண்ணற்ற தகவல்களை உருவாக்கவும், வேதியியல் பகுதிப்பொருட்களின் பண்புகளை துல்லியமாக முன்னுரைப்பதாகும்.

கருவிகள்[தொகு]

புள்ளியியல் கருவிகள், தகவல் ஆராய்வு கருவிகள், காட்சி சார்ந்த தொழில்நுட்பங்கள், வலைத்தள மொழிகள் பற்றிய விழிப்புணர்வு மரபுசார்ந்த கணக்கிடும் முறை மற்றும் தொடர்பு பண்புகள்.

பயன்பாடுகள்[தொகு]

முலக்கூறு கட்டமைப்பை முன்னுரைத்தல்[தொகு]

வேதி தகவலியலின் உதவியுடன், மூலக்கூறு மற்றும் உயிரிய மூலக்கூறுகளின் கட்டமைப்பையும், பண்புகளையும் மற்றும் முன்னறியாத மூலக்கூறின் எதிர்ச்செயல்பாடுகளையும் கூறலாம்.

எதிர்ச்செயலின் வேகம்[தொகு]

முன்னறியாத எதிர்ச்செயலின் வேகத்தையும் அதன் செயல்முறையையும் ஆற்றலுடைய மூலக்கூறுகளைக் கொண்டு முன்னுரைக்கப்படுகிறது.இது கணக்கீட்டு முறைகளால் முன்னுரைக்கப்படுகிறது.

எதிர்ச்செயலின் நிலை[தொகு]

கணக்கீட்டு வேதியியலானது வேதியியல் வல்லுனரை அணு மற்றும் மூலக்கூறு எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்ய உதவுகிறது.

முலக்கூறு வடிவமைத்தைல்[தொகு]

இது குவாண்டம் மற்றும் மூலக்கூறு இயந்திரவியல் முறைகளை பயன்படுத்தி முப்பரிமாண முலக்கூறு கட்டமைப்புகளை ஆராயவும்,வடிவமைக்கவும் பயன்படுகிறது.

துணைக்கூட்டு சேர்மங்களை குறியிடுதல்[தொகு]

வினைபடு தொகுதிகளை உள்ளடக்கிய சில மூலக்கூறுகள் உயிரியல் குறிக்கோள்களை கொண்ட ஒழுங்கற்ற முறைகளில் வினைபுரிகிறது.மற்ற மூலக்கூறுகள் தேர்வுகளுடன் குறிக்கப்படுகிறது.

எச். ஐ.வி தடுப்பான்[தொகு]

அண்மையில் நிகழ்ந்த மருந்துப் பொருள் வடிவமைப்பானது எச்.ஐ.வி அணுவின் தடுப்பான் வடிவமைப்பாகும். எச்.ஐ.வி அணு வடிவமைத்த தடுப்பானை ஒன்றாக பின் தொடர்கிறது. வேதி தகவலியலை பயன்படுத்தி வேதியியல் கட்டமைப்புகள் மட்டும் தேடுவதற்கான கருவியாக இல்லை.அதனுடைய பண்புகளும் இதற்கு உதவுகிறது.மருந்து பொருள் வடிவமைத்தல்,வேதி தகவலியலின் பயன்பாடுகளைக் கொண்டு எளிதாகப்படுகிறது.

கட்டமைப்பு தகவல்களை கணினியின் செய்தி தொகுப்பில் சேகரித்தல்[தொகு]

  • அமெரிக்காவின் வேதியியல் கழகம்:

18 மில்லியன் சேர்மங்களை அமெரிக்காவின் வேதியியல் குழுமம் கொண்டுள்ளது.

  • கேம்ப்ரிட்ஜ் வடிவமைப்பு செய்தி தொகுப்பு:

கேம்ப்ரிட்ஜ் வடிவமைப்பு செய்தி தொகுப்பு படிக மற்றும் கரிம சேர்மங்கள், கரிம உலோக சேர்மங்களை கொண்டுள்ளது.இது மேலும் 15,000க்கும் மேற்பட்ட எக்ஸ்ரே ஆய்வு குறிப்புகளையும் கொண்டுள்ளது.

  • கனிம கட்டமைப்பு செய்தி தொகுப்பு:

இத்தொகுப்பு கனிம சேர்மத் தொகுப்புகளைக் கொண்டுள்ளது.

  • புரத செய்தி தொகுப்பு:

இத்தொகுப்பு புரத மற்றும் டி.என்.ஏ மூலக்கூறுகளைக் கொண்டுள்ளது.

  • உலகளாவிய படிக ஆராய்ச்சி கூட்டமைப்பு குழு:

இக்குழு உலகளவில் உள்ள படிக ஆராய்ச்சி மையங்களில் உள்ள தகவல்களை சேகரித்தும் அதனை தக்க வைக்கவும், அத்தகவல்களைப் பகிர்ந்தளிக்கவும் செய்கிறது.

கட்டமைப்பு தகவல்களை பார்வைக்கு வைத்தல்[தொகு]

மூலக்கூறு வடிவமைப்புகளை பற்றிய செய்முறை தகவல்கள் மிகவும் பயனுள்ள ஆராய்ச்சி கொள்கைகளை முன்னுரைக்க உதவுகிறது. தற்போது உபயோகத்தில் உள்ள் சில முக்கிய முறைகள் முப்பரிமான முலக்கூறினை கண்டுபிடிக்க உதவுகிறது. இது எக்ஸ் கதிர் படிக மாதிரியைக் கொண்டு கண்டறியப்படுகிறது. இவ்வாறு மின்னணு முறையில் தகவல்களை சேகரித்து மற்றும் பகிர்ந்தளிக்கப்படுவன செய்தி தொகுப்புகள் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேதி_தகவலியல்&oldid=3699738" இலிருந்து மீள்விக்கப்பட்டது