வேதியியல் பச்சோந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வேதியியல் பச்சோந்தி வினை

வேதியியல் பச்சோந்தி (Chemical chameleon) என்பது ஒரு வகையான ஆக்சிசனேற்ற ஒடுக்கவினையாகும். வகுப்பறைகளில் நன்கு அறியப்பட்ட இச்செயல்விளக்க வினை மாங்கனீசின் பல்வகையான ஆக்சிசனேற்ற நிலைகளைக் குறித்துத் தெரிவிக்கிறது.[1][2]

பொட்டாசியம் பர்மாங்கனேட்டு உற்பத்தியைக் குறித்து யோகான் ருடால்ப் கிளாபர் தன்னுடைய முதல் விளக்கத்தை அளித்தார். மாங்கனீசின் ஆக்சைடு தாதுவான பைரோலூசைட்டில் உள்ள மாங்கனீசு ஈராக்சைடு காரத்துடன் அதிக வெப்பநிலையில் வினைபுரிந்து நீரில் கரைந்திருக்கும் ஒரு வேதிப்பொருளைத் தருகிறது. இவ்வேதிப்பொருளின் கரைசல் பச்சை வண்ணத்தில் காணப்படுகிறது. பின்னர் மெல்ல மெல்ல ஊதாச்சிவப்பு நிறமாக மாறுகிறது.[3] பொட்டாசியம் பர்மாங்கனேட்டு உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் செயல்முறை இவ்வினையுடன் ஒத்திருக்கிறது.[4]. ஆக்சிசனேற்றம் செய்யப்பட்ட மாங்கனீசு ஈராக்சைடு பொட்டாசியம் மாங்கனேட்டாக மாற்றப்பட்டு பின்னர் காற்றிலுள்ள கார்பனீராக்சைடை உறிஞ்சி அமிலமாக்கப்படுகிறது. தொடர்ந்து மேலும் ஆக்சிசனேற்றம் செய்யப்பட்டு ஊதாநிற பொட்டாசியம் பர்மாங்கனேட்டு உருவாகிறது.

வேதியியல் பச்சோந்தி வினை இதற்கு நேர் தலைகீழான வினையை வெளிப்படுத்துகிறது. முதலில் ஊதாநிற பொட்டாசியம் பர்மாங்கனேட்டை (KMnO4) ஒடுக்கி பச்சைநிற பொட்டாசியம் மாங்கனேட்டாகவும் (K2MnO4) முடிவாக பழுப்புநிற மாங்கனீசு ஈராக்சைடாகவும் (MnO2) மாற்றுகிறது[1][2][5]

KMnO4 (ஊதா) → K2MnO4 (பச்சை) → MnO2 (பழுப்பு/மஞ்சள் தொங்கல்)

இடைநிலைப் பொருளாக நீலநிற பொட்டாசியம் ஐப்போமாங்கனெட்டும் உருவாகிறது.[6]

மாங்கனீசின் ஆக்சிசனேற்ற நிலைகள்[7]
+7 KMnO
4
(ஊதா)
+6 K
2
MnO
4
(பச்சை))
+5 K
3
MnO
4
(நீலம்)
+4 MnO
2
(மஞ்சள்)

ஆக்சிசன் ஒடுக்கி செல்வாக்கின் கீழ் காரத்தன்மை நிபந்தனைகளுடன் இவ்வினை முன்னிகழ்கிறது. பொட்டாசியம் பர்மாங்கனேட்டு கரைசலை காரத்தன்மை உடையதாக மாற்ற சோடியம் ஐதராக்சைடு, பொட்டாசியம் ஐதராக்சைடு மற்றும் அமோனியம் ஐதராக்சைடு போன்ற காரச்சேர்மங்களைப் பயன்படுத்த முடியும். சர்க்கரைகள் பொதுவான ஆக்சிசன் ஒடுக்கிகள் என்றாலும் பல்வேறு வகையான ஆக்சிசன் ஒடுக்கிகளை இதற்காக உபயோகிக்கலாம்.[1][5][8]

காரத்தன்மையுள்ள பர்மாங்கனேட்டு கரைசலில் காகிதத்தை ஊறவைக்கும் நிகழ்விலும் இதே செயல்விளக்கம் பொருந்துகிறது. இவ்வினையில் காகிதம் ஆக்சிசனேற்றமும் பர்மாங்கனேட்டு ஆக்சிசன் ஒடுக்கமும் அடைகின்றன[9]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Science Brothers: The Chemical Chameleon
  2. 2.0 2.1 Oxidation states and the Chemical Chameleon Catholic High School, Malaysia Science and Maths Society
  3. Weeks, M. E. and Leicester, H. M.; Discovery of the Elements, Journal of Chemical Education 1968
  4. Reidies, Arno H. (2002) "Manganese Compounds" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a16_123
  5. 5.0 5.1 "The Chemical Chameleon". Ontario Institute for Studies in Education. பார்த்த நாள் 20 மார்ச் 2014.
  6. Faculty of Science Perth University: Chemistry experiment – KMnO4 + NaOH + sugar
  7. Schmidt, Max (1968). "VII. Nebengruppe" (in German). Anorganische Chemie II.. Wissenschaftsverlag. பக். 100–109. 
  8. Chem C3000 Experiment Manual. Thames & Kosmos. பக். 53. http://www.thamesandkosmos.com/news/manualsamples/640132_chemc3000v2_manual_sample.pdf. 
  9. Thompson, Robert Bruce. "Lab 10.2: Oxidation States of Manganese". Illustrated Guide to Home Chemistry Experiments. http://books.google.com/books?id=iZVCN05SURsC. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேதியியல்_பச்சோந்தி&oldid=2746996" இருந்து மீள்விக்கப்பட்டது