வேதிச் சேர்மம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வேதியியற் சேர்மம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இரண்டு ஐதரசன் அணுக்களையும் ஒரு ஆக்ஸிஜன் அணுவினையும் கொண்ட நீர் (H2O) ஒரு சேர்மம் ஆகும்

வேதிச் சேர்மம் அல்லது இரசாயனச் சேர்வை (Chemical Compound) அல்லது பொதுவாக சேர்மம் அல்லது சேர்வை என்பது ஒன்றுக்கும் மேற்பட்ட தனிமங்களின் இணக்கத்தினால் உருவாகும் மாசற்ற கூட்டமைப்பு ஆகும். அணுக்களின் இடையே உருவாகும் பிணைப்பின் தன்மையைப் பொறுத்து சேர்மங்கள் வகைப்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக இரண்டு ஐதரசன் அணுக்களையும் ஒரு ஆக்ஸிஜன் அணுவினையும் கொண்ட நீர் (H2O) ஒரு சேர்மம் ஆகும். எனினும் தனியே ஒரு தனிமம் கொண்ட மூலக்கூறுகளாலான பொருட்களை சேர்மமாக கருதுவதில்லை. உதாரணமாக ஐதரசன் வாயு (H2) ஒரு சேர்மம் அல்ல.

முக்கிய எண்ணக்கருக்கள்[தொகு]

  • சேர்மங்களில் தனிமங்கள் குறிப்பிட்ட விகிதத்தில் காணப்படும். உதாரணமாக நீரில் ஒரு ஒக்ஸிஜன் அணுவுக்கு இரண்டு ஐதரசன் அணுக்கள் என்ற விகிதத்தில் இருக்கும்.
  • ஒவ்வொரு சேர்மத்துக்கும் தனித்துவமான பண்புகள் காணப்படும். சேர்மத்தை ஆக்கும் தனிமங்களின் பண்புகள் வெளிப்பட மாட்டா. உதாரணமாக எரியக்கூடியதும் எரிவதற்குத் துணைபோகாததுமான ஐதரசனும், எரியாததும் எரிவதற்குத் துணைபோகும் ஒக்ஸிஜனும் இணைந்து நீர் எனும் சேர்மம் உருவாகின்றது. எனினும் நீர் எரியாது, எரிவதற்குத் துணை போகாது. நீர் எனும் சேர்மம் தனக்கே உரிய தனித்துவமான இயல்பைக் காட்டுகின்றதே தவிர அதனை ஆக்கிய தனிமங்களின் இயல்பைக் காட்டவில்லை. ஆக்ஸிஜன் வாயு, ஐதரசனும் வாயு எனினும் நீர் திரவமாகும். இது முற்றிலும் தனித்துவமான இயல்பாகும். அதாவது சேர்மங்கள் எப்போது தனித்துவமான இயல்புகளைக் காட்டுவனவாகும்.

சேர்மங்களையும் கலவைகளையும் வேறுபடுத்தல்[தொகு]

இரும்பு சல்பைட்டு சேர்மம். இதன் கூறுகளை காந்தத்தைக் கொண்டு பிரிக்க முடியாது
  • சேர்மங்களில் (compound) தனிமங்கள் இரசாயன ரீதியில் இணைக்கப்பட்டிருக்கும். பௌதிக ரீதியில் கலக்கப்பட்டிருக்கும் பொருட்சேர்வையை கலவை (mixture) என்ற சொல் குறிப்பிடும்.
  • சேர்மங்களை ஆக்கும் தனிமங்களை பௌதிக ரீதியில் பிரிக்க முடியாது; இரசாயன முறையாலேயே பிரிக்கலாம். கலவைகளை மிக இலகுவாக பௌதிக முறையில் பிரித்தெடுக்கலாம். இரும்பையும் சல்பரையும் வெப்பமேற்றுவதன் மூலம் பெறப்பெடும் இரும்பு(II)சல்ஃபைட்டு சேர்மத்தை ஆக்கும் இரும்பையும் சல்பரையும் காந்தத்தின் மூலமோ பிற பௌதிக முறையாலோ பிரித்தெடுக்க முடியாது. எனினும் வெப்பமேற்றாமல் கலக்கப்பட்ட இரும்புத்தூள் மற்றும் சல்ஃபர் தூள்களை சாதாரண காந்தத்தின் உதவியுடன் பிரித்தெடுக்கலாம்.
  • சேர்மங்களின் இயல்பு அதனை ஆக்கும் தனிமங்களின் இயல்பிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். எனினும் கலவைகளின் இயல்பு அவற்றை ஆக்கும் கூறுகளில் தங்கியுள்ளன.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேதிச்_சேர்மம்&oldid=2222500" இருந்து மீள்விக்கப்பட்டது