வேதித்தற் செய்கை மாதிரியாக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேதித்தற் செய்கை மாதிரியாக்கம் (Chemical Process Modeling) என்பது ஒரு கணினி வழி மாதிரியாக்க முறையாகும். இதன் வழியாக வேதித்தற் பொறியியலின் பல செய்கைகளை முன்னறிந்து கொள்ளலாம். மேலும் செயல்முறை கட்டமைப்பு செய்வதிலும் இம்முறை மிகுதியாகப் பயன்படுகிறது. இம்மாதிரியாக்கம், வேதிகளின் இயற்பியல் பண்புகள் மற்றும் தொட்டிகள், ஏற்றிகள், குழாய்கள், அழுத்தக்கலன்கள் ஆகியன போன்ற அமைப்புகளின் பண்புகள், போன்ற பரந்துபட்ட அறிவின் மேல் செய்யப்படுகிறது.