வேதாளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வேதாளை
வேதாளை
இருப்பிடம்: வேதாளை
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 9°16′30″N 79°06′00″E / 9.2750°N 79.100°E / 9.2750; 79.100ஆள்கூறுகள்: 9°16′30″N 79°06′00″E / 9.2750°N 79.100°E / 9.2750; 79.100
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் இராமநாதபுரம்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெ. யு. சந்திரகலா, இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

வேதாளை இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கிராமம் ஆகும் .

புவியியல் அமைப்பு[தொகு]

இவ்வூரின் வடக்கே பாக் நீரிணையும் தெற்கே மன்னார் வளைகுடாவும் கடல் எல்லைகளாக அமைந்துள்ளன. மேற்கே சுந்தரமுடையான் கிராமமும் கிழக்கே மரைக்காயர்பட்டினமும் அமைந்துள்ளது. சுமார் 20 சகிமீ பரப்பளவில் அமைந்துள்ள இவ்வூர் 9.26 டிகிரி அச்ச ரேகை மற்றும் 79.11 டிகிரி தீர்க்க ரேகையில் அமைந்துள்ளது. தெற்கே மன்னார் வளைகுடா கடற்பகுதியில் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் முசல் தீவு காணப்படுகிறது. இப்பகுதி அரிய கடல் உயிரினங்களை கொண்டுள்ளது ஆகவே மத்திய அரசால் இப்பகுதி கண்காணிக்கப்படுகிறது.

வரலாறு[தொகு]

இவ்வூர் இப்னு பதூதா என்னும் அறிஞரால் ”பதலா” எனும் பெயருடன் அறியப்பட்டுள்ளது. வேத அலை என்னும் பெயர் மருவி ”வேதாளை” ஆனது எனவும் கூறுவர் அதனை தொடர்ந்து போர்த்துக்கீசியரின் காலத்தில் இப்பகுதியில் போர்கள் நடந்த்தது பற்றிய குறிப்புகள் அந்நாட்டு வரலாற்று ஆய்வாளர்களால் எழுதப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன. மொகலாயர்கள்-போர்த்துக்கீசியர்கள் இடையே போர், கிபி1630களில் போர்த்துக்கீசியர்-இலங்கையின் யாழ்ப்பாணத்தை ஆண்டு வந்த சங்கிலி மன்னனுக்கும் இடையே போரில் மன்னன் தோல்வி, கேரளாவின் மாப்பிள்ளைமார்கள்-போர்த்துக்கீசியரிடையே நடந்த போர் முக்கியத்துவம் வாய்ந்த்தவை. வேதாளையின் மேற்கே அமைந்த்துள்ள மீசான்கற்கள் இதற்கு ஆதாரமாக விளங்குகின்றன இதில் இருந்தே கிபி1600களில் மக்கள் இங்கே வாழ்ந்தார்கள் என அறிந்து கொள்ளலாம்.

மக்கள்[தொகு]

இப்பகுதியில் 8000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். பெரும்பாலான மக்கள் முஸ்லீம்கள். இப்பகுதியில் மக்களின் வருகை கிபி1600களில் நிகழ்ந்த்துள்ளது பெரும்பாலும் கடல் வழி குடியேற்றங்களே நிகழ்ந்த்துள்ளது புதுமடம், இருமேனி, பெரியப்பட்டினம், பிரப்பன்வலசை, மண்டபம் உள்ளிட்ட அருகாமையில் அமைந்த்துள்ள ஊர்களில் இருந்தும் இலங்கையில் இருந்தும் பெரும்பாலான மக்கள் அப்போதே குடியேறியுள்ளனர்.30 சதவீத அளவில் இந்துக்களும், ஒரு சில நாடார்,வலையர்,கோனார், கிருத்தவ குடும்பங்களும் வசிக்கின்றன.

தொழில்[தொகு]

ஆரம்ப காலத்தில் இருந்தே இப்பகுதியில் கடல் வழி வாணிபமும் ,மீன்பிடி தொழிலும் முக்கியத்துவம் பெற்றவை. இலங்கைக்கு இங்கிருந்து பல குடும்பங்கள் வாணிபம் மூலமாக இடம்பெயர்ந்த்தும், இங்கே குடியேறியும் உள்ளன. இது போலவே மலேசியாவிற்கும் இடம் பெயர்வு நிகழ்ந்த்துள்ளது. 1980க்கு பின்னர் இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரங்கள் மூலமாக முற்றிலும் அடியோடு வாணிபம் பாதிக்கப்பட்டது.பின்னர் மீன் பிடி தொழில் முஸ்லீம்களிடம் நலிவடைந்த்து கிழக்காசிய நாடுகளுக்கும், பின்னர் வளைகுடா நாடுகளிலும் வேலை செய்து வருகிறார்க்ள். பாசி ஏற்றுமதி மீன்பிடி போன்ற பாரம்பரிய தொழில்களும் ஒரு சிலரால் செய்யப்பட்டு வருகின்றன.

சிறப்புகள்[தொகு]

தேசிய நெடுஞ்சாலை 49ல் அமைந்துள்ள இப்பகுதியில் நூற்றாண்டு கால பாரம்பரியமிக்க வடக்குத்தெரு கல்லுப்பள்ளி, பெரிய மேற்குதெரு பள்ளி,காட்டானே சேகு ஒலியுல்லாஹ் தர்கா, கந்தூரி விழா, இடயர்வலசை பங்குனி உத்திர திருவிழா, கூட்டாஞ்சாலை கோவில், இஸ்லாமிய இளைஞர் மன்ற ஆண்டு விழாக்கள் சிறப்பு பெற்றதாகும். இது தவிர இஸ்லாமிய பெருநாள்களும், இந்து பண்டிகைகளும் இதன் சிறப்பாகும்.

கல்வி நிலையங்கள்[தொகு]

இப்பகுதியின் ஆரம்ப காலங்களில் இடையர்வலசையில் அரசு ஆரம்ப பள்ளியும்,மேற்கு தெருவில் அரசு தொடக்கப்பள்ளியும் உள்ளது.பின்னர் உயர்நிலை பள்ளி ஆரம்பிக்கப்பட்டு பல்வேறு இடையூறுகள்ளுக்குப்பிறகு அப்போதைய பெற்றோர் ஆசிரியர் கழகம், மூன்று தெரு ஜமா அத்தார்கள் மற்றும் இந்து சகோதரர்களின் முயற்சியால் 2006ம் ஆண்டு மேல்நிலையாக்கப்பட்டது. வடக்குத்தெரு ஜமாத், மற்றும் மேற்கு தெரு ஜமா அத் நிர்வாக நிலங்களில் பள்ளி அமைந்த்துள்ளது. இது தவிர குஞ்சார் வலசை துவக்க பள்ளியும், அல் அமீன், ராஜா இடைநிலைபள்ளி, குழந்தையேசு பள்ளி போன்ற தனியார் பள்ளிகளும் அமைந்த்துள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேதாளை&oldid=3169477" இருந்து மீள்விக்கப்பட்டது