உள்ளடக்கத்துக்குச் செல்

வேதம் புதிது கண்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேதம் புதிது கண்ணன்
பிறப்பு18 ஏப்ரல் 1950 (1950-04-18) (அகவை 74)
திருநெல்வேலி, தமிழ்நாடு, இந்தியா
பணிதிரைப்படம்/மேடை நாடகம்/தொலைக்காட்சி எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1978–தற்போது வரை
விருதுகள்கலைமாமணி விருது[1]
சிறந்த உரையாடல் எழுதியதற்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருது[2]

வேதம் புதிது கண்ணன் (Vedham Puthithu Kannan) என்று பிரபலமாக அறியப்படும் கே. கண்ணன் ஒரு இந்திய திரைப்பட / மேடை நாடக இயக்குனர், எழுத்தாளர், தயாரிப்பாளர் ஆவார், இவர் முதன்மையாக தமிழகத் திரைப்படத்துறையில் பணியாற்றுகிறார். தனது தொழில் வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில், மூத்த இயக்குநர்களான பாரதிராஜா, எஸ். பி. முத்துராமன், கே. பாலசந்தர் ஆகியோரின் வழிகாட்டுதல் கண்ணனுக்கு கிடைத்தது. கண்ணன் தனது கதைகளில் சமூக சீர்திருத்த செய்திகளை உட்பொதிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். 2016 ஆம் ஆண்டு வரை இவர் கலைமாமணி, சிறந்த உரையாடல் எழுத்தாளருக்கான தமிழக அரசு திரைப்பட விருது,[2] வாழ்நாள் சாதனையாளர்களுக்காக மைலாப்பூர் அகாடமி விருது போன்றவற்றைப் பெற்றுள்ளார்.

திரைப்பட வாழ்க்கை[தொகு]

கண்ணன் தனது பள்ளி காலத்திலேயே மாவட்ட அளவிலான எழுத்துப் போட்டிகளில் வென்றதால் துவக்கத்திலேயே எழுதத் தொடங்கினார். ரகு இயக்கி, இந்திரலாயம் பதாகையின் கீழ் தயாரிக்கப்பட்ட சுபமுகூர்த்தம் படமானது, கண்ணன் தமிழ் திரையுலகில் நுழைவதற்கு வழி வகுத்தது. இவரது மேடை நாடகமான ஜாதிகள் இல்லயடி பாப்பாவை பாரதிராஜா வேதம் புதிது படமாக இயக்கினார். இந்த படத்திற்கு கண்ணன் கதை, உரையாடலை எழுதினார்.[3] இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு கண்ணன் வேதம் புதிது கண்ணன் என்று பிரபலமாக அழைக்கபட்டார். பிற்காலத்தில் சிவா, பகலில் பௌர்ணமி (1990), காவல் கீதம் (1992) போன்ற திரைப்படங்கள் கண்ணனைத் தமிழ் திரைப்படத் துறையில் ஒரு முக்கிய எழுத்தாளராக நிறுவின. அப்போதிருந்து, இவர் பல்வேறு படங்களுக்கான கதை மற்றும் திரைப்பட தயாரிப்புப் பணிகளுக்கான விவாதங்களில் பரந்த அளவில் ஈடுபட்டார்.

பின்னர் இவர் தனது நீண்டகால நண்பரான டி. வி. வரதராஜனின் நாடகக் குழுவான யுனைடெட் விஷுவல்சின் மேடை நாடகப் பணிகளுக்குத் திரும்பினார். அடுத்த 7 ஆண்டுகளில் 10 நாடகங்களை நடத்தினார். தமிழ் செயற்கைக்கோள் தொலைக்காட்சிகளில் தொலைக்காட்சித் தொடர்கள் பிரபலமடைந்து வந்த நிலையில், இவர் தனது கவனத்தை தொலைக்காட்சிக்கு மாற்றினார். இவர் நிம்மதி உங்கள் சாய்ஸ் II & III, ஜன்னல் (மரபு கவிதைகள்) மற்றும் சகானா போன்ற தொலைக்காட்சித் தொடர்களை எழுதினார். மேலும் அண்ணி ( சாமுத்திரகனி இயக்கியது), அக்கா (தெலுங்கு) போன்ற தொடர்களுக்கு திரைக்கதை எழுதினார்.

2006 ஆம் ஆண்டில், கண்ணன் எழுத்துப்பட்டறை என்ற பதாகையின் கீழ் தயாரிப்பாளர் ஆனார் [4] மேலும் அமிர்தம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.[5]

படைப்புகள்[தொகு]

மேடை நாடகங்கள்[தொகு]

கண்ணன் கீழ்கண்ட மேடை நாடகங்களை எழுதி இயக்கியுள்ளார்:

 • இலவச இணைப்பு அக்கா ரீ(ய)ல் எஸ்டேட் (Re(a)el Estate)[6]
 • மெகா சீரியல் [7]
 • டேக் இட் ஈசி
 • இரவல் தந்தவன் கேட்கிறான்
 • சுபமுகூர்த்த பத்திரிக்கை
 • சொல்லடி சிவசக்தி
 • அவனுடைய செல்லம்மா
 • மகளிர் மட்டும்
 • எல்கேஜி ஆசை
 • குரோர்பதி
 • மற்றும் பலர்
 • வீட்டுக்கு வீடு கார்கில்
 • ஆசைக்கும் ஆஸ்திக்கும்
 • வெளிச்சம்
 • போர்க்களம்
 • சுய தரிசணம்

தொலைக்காட்சி[தொகு]

 • நிம்மதி உங்கள் சாய்ஸ் II (கண்ணமாவின் காதல்) ( எஸ். பி. முத்துராமன் இயக்கியது) - கதை, திரைக்கதை & உரையாடல் எழுதாளர்
 • நிம்மதி உங்கள் சாய்ஸ் III (திருவேணி சங்கமம்) (எஸ். பி. முத்துராமன் இயக்கியது) - திரைக்கதை & உரையாடல் எழுத்தாளர்
 • அக்கா (தெலுங்கு) - கதை & உரையாடல் எழுத்தாளர்
 • ஜன்னல் (மரபுக் கவிதைகள்) - கதை, திரைக்கதை & உரையாடல் எழுதாளர் மற்றும் இயக்குநர் (தலைப்பு/புகழாரம் கே. பாலச்தருடன் பகிர்ந்து கொள்ளபட்டது)
 • பிளாஸ்டிக் விழுதுகள் - கதை, திரைக்கதை & உரையாடல் எழுதாளர் மற்றும் இயக்குநர்
 • விடியல் புதிது - கதை, திரைக்கதை & உரையாடல் எழுதாளர் மற்றும் இயக்குநர்
 • சகானா - உரையாடல் எழுத்தாளர்
 • அன்னை - முதனைமைக் கதை ,உரையாணல் எழுத்தாளர்
 • வசந்தம் - கதை, திரைக்கதை & உரையாடல் எழுத்தாளர்

திரைப்படங்கள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

 1. "70 Chosen for Kalaimamani award" (in en-IN). The Hindu. 2009-02-26. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/70-chosen-for-kalaimamani-award/article363237.ece. 
 2. 2.0 2.1 "Tamilnadu govt awards Rajini and Kamal". cinesouth.com. Archived from the original on 2007-09-11. பார்க்கப்பட்ட நாள் 2009-10-20.
 3. Rajadhyaksha, Ashish; Willemen, Paul (10 July 2014). Encyclopedia of Indian Cinema. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781135943257.
 4. "Amirtham IndiaGlitz". http://www.indiaglitz.com/tamil-movies-amirtham-gallery-7334.html. 
 5. "Path-breaking". http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/pathbreaking/article3187095.ece. 
 6. "Telegraph Calcutta".
 7. "Mega Serial ref".
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேதம்_புதிது_கண்ணன்&oldid=3954166" இலிருந்து மீள்விக்கப்பட்டது