உள்ளடக்கத்துக்குச் செல்

வேணன் (இந்து அரசன்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேணன்
தகவல்
குடும்பம்அங்கன் (தந்தை) , சுனிதா (தாயர்)
பிள்ளைகள்பிருத்து, நிசிதன் (வேணனின் உடலைத் தடவியதால் தோன்றியவன்)[1]

வேணன் (Vena) இந்து வேதங்களில் ஒரு அரசனாகக் கருதப்பட்டாலும், ஒரு தீயவனாகவும் ஊழல்வாதியாகவும் இருந்தான். இதனால் கோபம் கொண்ட பூமிக் கடவுளான பூமாதேவி, இனி மனிதர்களுக்குப் பயிர்களை வழங்கமாட்டேன் என்று முடிவெடுத்து பசுவாக உருவெடுத்து மறைந்ததனால் உலகம் இருளாக மாறியது. இதற்கிடையில், ரிஷிகள் குழு கோபத்தால் வேணனைக் கொன்றது.

பின்னர் அவர்கள் அவனது சடலத்தின் தொடையைத் தடவி, அவனது உடலில் இருந்து அனைத்து தீமைகளையும் வெளியேற்றினர். பின்னர், அவர்கள் வேணனின் வலது கையைத் தடவும் போது, பிருது என்பவர் வெளிப்பட்டார்.

இந்து சமயத்தின்படி, இவர் விஷ்ணுவின் அவதாரங்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். வேணனின் செயல்களால் கோபம் கொண்ட பூமிதேவி மக்களுக்கு பயிர் கொடுக்க மறுத்து பசு வடிவத்தில் மறைந்த காரணத்தால் வேணனின் மகனான பிருத்து அவளை மீண்டும் அழைக்க முயன்று தவம் செய்ய காடுகளுக்குச் சென்றார். நீண்டநாள் தவத்தினால் பூமிதேவி வெளிபடாததால் தனது உயிரைவிட தயாராகிக்கொண்டிருந்தபோது, பசுவின் உருவில் பூமிதேவி, வெளிபட்டு அனைத்து மருத்துவ மற்றும் பயிர் தாவரங்களையும் தன்னிடம் செழித்து வளர்ந்த உயிரினங்களுக்கு திருப்பி அளித்தாள். பிருது மன்னன் பூமிதேவியை மீண்டும் அவளது இயல்பான நிலைக்கு கொண்டு வந்தார். அதனால் பூமிதேவியை பிருத்வி என்றும் அழைப்பர்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Motilal Bansaridas Publisher's Bhagavata Purana Book 2, Skandha IV Chapter 13
  2. www.wisdomlib.org. "The Kings Vena and Prithu". Wisdom Library. Retrieved 2016-04-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேணன்_(இந்து_அரசன்)&oldid=4372012" இலிருந்து மீள்விக்கப்பட்டது