வேடுவ மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வேட்டா
நாடு(கள்)இலங்கை
பிராந்தியம்ஊவா_மாகாணம்
இனம்2,500 வேடுவர் (2002)
சிங்களம்-சான்ற கிரியோல்
 • வேட்டா
மொழிக் குறியீடுகள்
ISO 639-3ved

வேடுவ மொழி இலங்கை உள்நாட்டு வேட மக்களால் பயன்படுத்தப்படும் மொழியாகும். எனினும் கரையோர வேடர்கள் மற்றும் அனுராதபுர வேடர்கள் போன்ற சமுகங்களும் இம்மொழியை அவர்களது மத மந்திரங்களிலும் வேட்டையின்போதும் நாடளாவியரீதியில் பயன்படுதுகின்றனர்.

1959ஆம் முறையான ஆய்வு ஒன்று மேற்கொள்ளபட்டபோது இம்மொழியானது தம்பனவில் உள்ள பழைய மொழிகளுக்கு மட்டுப்பபட்டதாக காணப்பட்டது. 1990இல் சுய அடையாளம் தேடும் வேடர்கள் சிலருக்கு சில வார்த்தைகள் மற்றும் வாக்கியங்களை மட்டுமே தெரிந்தபோதும் இம்மொழியை செவ்வனே கற்றவர்களும் இருந்தனர். ஆரம்பகாலத்தில் மொழியியலாளர்கள் வேடுவ மொழியானது சிங்களத்தின் பேச்சு வழக்கு மொழியா அல்லது வேறு ஓர் மொழியா என்று ஐயப்பட்டனர். அவர்கள் பின்னரே அறிந்துகொண்டனர் வேட்டா மொழியானது கிரியோல் மொழியென்று. இம்மொழி பண்டைய சிங்கள மொழியிலிருந்து சில வார்த்தைகள் கடன் பெற்று இருந்தாலும் அதன் இலக்கணம் மாறுபடவில்லை.[1]

வேடுவ மொழியின் தாய்மொழி அறியப்படவில்லை, எனினும் சிங்களத்தின் தாய்மொழி இந்திய-ஆரிய மொழிகள் மொழியாகும். ஒலியியல் ஆய்வு மூலம் இம்மொழி சிங்களத்தை விட அண்ண மெய் எழுத்துக்கள் 'சி' மற்றும் 'ஜெ' பயன் வேறுபடுகிறது. வேடுவ மொழியில் சொற்களின் வகையானது பெயர்ச்சொல், வினைச்சொல் மற்றும் உயர்திணை சொற்கள் பால் வித்தியாசத்தில் பயன்படுத்தப்பட்டன. இது சிங்களத்தை பல வடிவங்களில் குறைத்து எளிமையாக்கி உள்ளது (உதாரணமாக இடப் பெயர்ச்சொல்). மற்ற மொழிகளிலிருந்து சொற்றகளை கடன் எடுக்காமல் வேடுவ மொழியானது ஒரு குறிப்பிட்ட சொல் பங்கிலிருந்து வார்த்தைகளை உருவாக்குகிறது. வேடுவ மொழியானது சிங்களத்தில் பயன்படாமல் அழிவடைந்த சில 10ஆம் 12ஆம் நுற்றாண்டு சொற்களையும் பயன்படுத்துகிறது. வேடுவ மொழியானது சிங்களத்திலிருந்து பெறமுடியாத தனித்துவமான வார்த்தைகளையும் தன்னகத்தே உள்ளடகியுள்ளது. சிங்கள மொழியின் உருவாக்கத்தில் வேடுவ மொழி பெரும் பங்கு வகித்துள்ளது.

வரலாறு[தொகு]

கி.மு. 5 ஆம் நூற்றாண்டில் குடியேறிய பிராகிருதம் பேசும் மக்களுக்கு முன் இலங்கையில் பேசப்பட மொழி அறியப்படவில்லை. சிங்களத்தில் "'வேட்ட"' என்பதன் அர்த்தம் வேட்டையாடி உணவு முதலியவற்றை சேமிப்பதாகும்.[2] இலங்கையில் றோடிய மற்றும் கின்னறைய போன்ற வேட்டையாடும் மக்களும் இருந்தனர்.[3]

வேடுவர்களை பற்றி முதலில் எழுதியவர் ரைக்லோப் வான் கொன்ச் (1663–1675), இவர் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியில் இலங்கையில் பணிப்பாளர் நாயகமாக பணிபுரிந்தர். அவர் வேடுவ மொழியானது தமிழ் மொழியிலும் பார்க்க சிங்கள மொழிக்கு நேருக்கமுடயதாக காணப்பட்டதாக கூறினர்.[4] 1681ஆம் ஆண்டு கண்டி ராஜ்யத்தில் கைதியாக இருந்த ராபர்ட் நொக்ஸ் என்ற ஆங்கிலேயர் வேடுவ மக்கள் சிங்கள மொழியையும் பயன்படுத்தினர் என்றார். 1686ஆம் ஆண்டு போர்த்துகீய துறவி பெர்னாண்டோ டி குயெரொஸ் வேடுவர்களை பற்றி எழுதிய தொகுப்பில் கூறியதாவது வேடுவ மொழி இலங்கையில் உள்ள வேறு மொழிகளில் இருந்து வேறுபட்டது.[5] 1803ஆம் ஆண்டு ராபர்ட் பேர்சிவல் கூறியதாவது வேடுவ மக்கள் சிங்கள மக்களிடமும் தங்களுக்கு இடையில் சிங்களத்தை போன்ற ஒரு மொழியை பயன்படுத்தினர் என்று ஆகும்.எனினும் ஜான் டேவிஸ் 1831ஆம் ஆண்டு கூறியதாவது வேடுவர்கள் பேசிய மொழியில் உள்ள பெரும்பான்மையான சொற்களை சிங்கள மக்கள். 1848ஆம் ஆண்டு சார்லஸ் ப்ரிதம் கூறியதாவது வேடுவ மக்கள் தங்களிடையில் வேட்டா மொழியை பாவித்தனர் என்றும் வெளி மக்களிடம் சிங்களம் போன்ற ஓர் மொழியை கதைத்தனர் என்றும் கூறினார்.[6]

பிரித்தானிய இலங்கையில் சேவையாற்றிய ஆங்கில அரசு ஊழியர் ஹுக்ஹ் நேவிள்ளே என்பவரே வேடுவ மொழியை முதலில் ஆராய்வதற்கு முயற்சி எடுத்தார். அவர் 'தி டேபிரோபனியன்' என்ற சஞ்சிகையில் பண்டைய இலங்கையை பற்றி அணைத்து விடயங்களையும் எழுதினார சொற்பிறப்பியல் மூலம் அவர் யுகித்ததவது வேடுவ மொழியானது பண்டைய சிங்கள மொழியின் ஒரு பிரிவான 'ஹெல' என்றாகும்.[7] இன்னுமோர் ஆங்கில அரசு ஊழியரும் 'அன்சிஎன்ட் சிலோன் (1909)' இன் நூலாசிரியருமான ஹென்றி பார்கர் கூறியதாவது பெரும்பாலான சொற்களை வேடுவ மொழி சிங்களத்திலிருந்து கடன் பெற்றுள்ளது என்றாகும். எனினும் சில சொற்கள் வேடுவ மொழிக்கே தனித்துவம் வாய்ந்ததென்றும் கூறினார்.[8] வில்லெம் கெய்கர் 1935ஆம் ஆண்டு கூறியதாவது வேடுவ மொழி அழிவை நெருங்குவதாகவும் அம்மொழியை மேலும் ஆராயவேண்டும் என்றாகும்.[9] இதனை அறிந்த மன்னிக்கு வ. சுகதபால தே சில்வா என்ற மொழியியலாளர் 1959ஆம் ஆண்டு தனது PhD ஆய்வறிக்கையில் வேடுவ மொழியை பற்றி விரிவான ஆய்வு ஒன்றை புத்தகமாக வெளியிட்டார். சமய அனுஷ்டானங்களின் போது சில மக்கள் வேடுவ மொழியை பயன்படுத்துவர். அனுராதபுரம் சார்ந்த வேடுவர்கள் சிங்கள் மொழியை பாவித்தாலும் சில மிருகங்களை குறிப்பதற்கு வேடுவ மொழியை பயன்படுத்துவர். [10]

வகைப்படுத்துதல்[தொகு]

சிங்கள மொழியின் ஒரு பிரிவா அல்லது ஒரு தனித்துவமான மொழியா

ஆரம்ப மொழியியலாளர் மற்றும் பார்வையாளர்கள் இவ்விரு மொழியையும் ஒன்றென்றே கருதினர். வில்ஹெல்ம் கெஇகெர் வேடுவ மொழி சிங்கள மொழியின் ஒரு திரிவடைந்த ஒரு வடிவமாகும் என்றே கருதினார்.

வேடுவ மக்கள் தங்கள் மொழியை சிங்களத்திலிருந்து தனித்துவம் வாய்ந்ததாகவே கருதுகின்றனர்.

இலக்கணம்[தொகு]

வேடுவ மொழியானது 9ஆம் நூற்றண்டில் உலர் வலய நாகரிகத்தின் விழ்ச்சியின்போது மத்திய மலை நாட்டில் மற்றும் மலாயா பகுதியிலும் பாவனைக்கு உள்ளாகியது. வேடுவ கிரியோல் 10ஆம் நூற்றாண்டு முதல் 12ஆம் நூற்றாண்டு வரை நிலவியது.[11]

சிங்கள மொழியில் ஒரு சொல்லின் எதிர் பதத்தை கூறுவதற்கு அச்சொல்லின் முன் மறுத்தல் சொற்பதத்தை சேர்ப்பார்கள், எனினும் வேடுவ மொழியில் ஒரு சொலின் முடிவில் இப்பதத்தை சேர்ப்பார்கள். சிங்கள மொழியில் இறந்தகாலம் மற்றும் இறக்காத காலம் என்றே இரு காலங்களுமே பயன்படுத்தபடுகின்றன எனினும் வேடுவ மொழியில் முக்காலங்கள் பயன்படுத்தபடுகின்றன. சிங்கள மொழியில் மறுபெயர்கள் வித்தியாசங்களை பிரதிபலிக்கிறது எனினும் வேடுவ மொழியில் அவ்வாறு இல்லை. வேடுவ மொழியில் பயன்படுத்தப்படும் சில இலக்கண ரீதியான சொற்பதங்கள் சிங்கள மொழிக்கு ஒப்பாக இருந்தாலும் அவை இரண்டும் வேறுபட்டவை. வேடுவ மொழி உயர்திணை மற்றும் அ∴றிணையில் ஆண் பெண் வித்தியாசத்தை வெளிபடுத்துகிறது.

ஒலியியல் ஆய்வு[தொகு]

'சி' மற்றும் 'ஜ' போன்ற எழுத்துகள் வேடுவ மொழியில் அதிகம் பயன்படுத்தபடுகின்றன. சில ஒற்றுமைகள் :-[12]

தமிழ் சிங்களம் வேடுவ மொழி
முந்தைய இஸ்சர இச்சற

இம்மொழியில் போச்சா, கச்ச மற்றும் ராக்க போன்ற விகுதிகளின் பிரயோகம் அ∴றிணையில் பெரிதும் காணலாம். இவ்விகுதிகள் சிங்கள மொழியிலிருந்து பெறபட்டவை.

தமிழ் சிங்களம் வேடுவ மொழி
எடை பார பாரபோச்சா
கண் அஸ்ஸ அஜ்ஜெஜ்ச
தலை இஸ இஜ்ஜெஜ்ச
நீர் வத்துற/திய தியராக்க

பிசின மொழி மற்றும் ஜமைக்கன் இங்கிலீஷ் கிரியோலை ஒத்ததாக இந்த மொழி அமைந்தது. [13]

சொல் அமைப்பு[தொகு]

வேடுவ மொழியில் உள்ள பெயர்ச்சொல் வகையானது விகுதியின் அடிப்படையில் இரு வகையாக பிரிக்கப்படும்.

உயர்திணை[தொகு]

தனிப்பட்ட பிரதிபெயர்களுக்கு பாவிக்கப்படும் விகுதியானது -அட்டொ, மற்ற உயிருள்ள பொருட்களுக்கு -லாட்டோ விகுதியும், பெயர்சொற்களுக்கு -போச்சா மற்றும் -ராக்க விகுதிகள் பயபடுதப்பட்டன.

 • தேய்யலாட்டோ (கடவுள்)
 • பண்ணிலாட்டோ (புழு)
 • மீஅட்டொ (நான் அல்லது நாம்)
 • இரபோச்சா (சூரியன்)
 • கினிராக்கா (தீ)

இவ்விகுதிககள் ஒருமை மற்றும் பன்மைகளிலும் கதைக்கும் பொழுதும் எழுதும் பொழுதும் பயன்படுத்தப்படும்.

 1. போடகண்டா நம் புக்ககடுவா ஹுர மீஅட்டொ (ஐயா, நான் யானையை கொலை செய்தேன் )
 2. மீஅட்டன்னெ கிரியாமிலாட்டோ கலாபோஜ்சேன் மங்கக்கன கோட்ட ஈஅட்டன்னெ பாதாபோஜ்ஜே ககுலேக் ரண்டால இண்டடிபால திபெணவ (எங்ளுடைய பெரிய பாட்டி காட்டில் நடந்துகொண்டிருக்கும் பொழுது அவரது கருவறையில் ஒரு சிறு குழந்தை மறைந்திருந்தது )

வேடுவ மொழிக்கே தனித்துவமாக காணப்பட்ட சில சொற்களுக்கு இவ்விகுதிகள் காணப்படவில்லை. உயிருள்ள பொருட்களுக்கு ஆன் பெண் வித்தியாசம் இருந்தது, சில உயிரற்ற பொருட்களுக்கும் இது இருந்தது.

 • போடகண்ட (யானை)
 • கண்குணா (மான்)
 • கரிய (கரடி)
 • ஹடேற (கரடி)
 • ஓகம (எருமை)
 • கண்டார்னி (தேனீ)
 • முண்டி (உடும்பு)
 • போட்டி (தேனீ)
 • மகினி (சிலந்தி பூச்சி)
 • இகினி (பேன்)[14]

எண்கள்[தொகு]

உயர்திணை மற்றும் அ∴றிணை என்பனவற்றுக்கு எண்ணும் முறைகள் வித்தியாசப்படும்.

ஆங்கிலம் சிங்களம் வேடுவம் [15]
இருவர் தேன்னேக் தேகமக்
இரு பொருட்கள் தேகக் தேகமக்
இருமடங்கு தேபரக் தேகமக்

அ∴றிணை[தொகு]

அ∴றிணைக்கு பாவிக்கும் விகுதிகலானது –ருகுல, –டண்ட, -போச்சா , -தன மற்றும் -கேஜ்ச ஆகும். சிங்கள மொழியிலிருந்து கடன் பெற்ற சொற்களுக்கே விகுதிகள் பயன்படுகின்றன.

 • அய்ருகுல (கண்)
 • உகுருடண்ட (தொண்டை)
 • வீடிபோச்சா (வீதி)
 • கிரிகேஜ்ச (தேங்காய்)
 • கவிதன (கவிதை)
 • கினிரக்க (நெருப்பு )[16]

வேடுவ மொழிகே உரித்தான சில சொற்களுக்கு விகுத்திகளே இல்லை.

 • கலராக்கி (கோடாரி)
 • காலவ (பானை)
 • புக்க (புதர்)

வேடுவ அ∴றிணைகளானது சிங்கள பெயரடைகளுக்கு விகுதிகளை சேர்த்து பாவிக்கப்படும். 'கவிய' என்ற சிங்கள பெயர்சொளுக்கு உரிய பெயரடை 'கவி' ஆகும். எனினும் வேடுவ மொழியில் இதற்கான பெயர்சொல்லானது கவி-தன என்பதாகும்.

மறுபெயர்கள்[தொகு]

மறுபெயர்களுக்கு சில உதாரனங்களானது :- மீஅட்டொ (நான்), தோபன் (நீ), ஏயப (அங்கே), கொய்ப (எங்கே?). சிங்கள மொழியில் மக்களின் தராதரத்திற்கு ஏற்ப அவர்களை ஐந்து வகையில் அழைப்பர், எனினும் வேடுவ மொழியில் (தோபன்) என்று ஒரேயொரு விதமாகவே அழைப்பர்.

சிங்கள ஒருமை சிங்கள பன்மை வேடுவ ஒருமை / பன்மை [17][18]
ஒபவஹன்சீ ஒபவஹசீலா தோபன்
ஓஹீ ஓஹீலா தோபன்
தமுசே தமுசேலா தோபன்
ஓயா ஓயால்லா தோபன்
உம்ப உம்பள்ள தோபன்
தோ தொப்பி தோபன்

எதிர்மறை[தொகு]

சிங்கள மொழி போல் இல்லாமல் வேடுவ மொழியில் எதிர் சொற்கள் மிக எளிதாக கையாளப்பட்டுள்ளது. [19]

சிங்களம் வேடுவம்
நே கொடுய்
எபா கொடுய்
பே கொடுய்
நேமி கொடுய்
நட்டான் கொடுய்
பரி கொடுய்

அகராதி[தொகு]

வேடுவ மொழியில் பயன்படுத்தப்படும் பல சொற்கள் சிங்கலத்திலிருந்தோ தமிழிலிருந்தோ இந்து-ஆரிய மொழியிலிருந்தோ கடன்பெற்றவை.

உதாரணமாக :-[20]

சிங்களம் வேடுவம் தமிழ்
நேவ மாடியங்கனள்ளே தன்ட்டுகக்க (கடல் வாகனம்) கப்பல்
வேஸ்ஸ உடடனின் மண்டோவென டியரக்க (ஆகாயத்திலிருந்து விழும் தண்ணீர்) மழை
துவக்குவ (துருக்கிய மொழி) புக்ககழ்டன யமகே (சுடும் பொருள்) துப்பாக்கி
உபதினவா படபொஜ்ஜென் மங்கக்கன்வா (வயித்திலிருந்து வருவது) பிறக்க
பேதுர வடேரென யமகே (படுக்கும் பொருள்) படுக்கை
பேன்சல (ஆங்கிலம்) குருகுருகக்கன உள்போஜ்ச (குறு குறு சத்தம் செய்யும் கூர் முனை) எழுதுகோல்

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேடுவ_மொழி&oldid=3010184" இருந்து மீள்விக்கப்பட்டது