வேடப்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேடப்பன்
இயக்கம்ஆனைவாரி ஏ. ஸ்ரீதர்
தயாரிப்புபி. இராதாகிருஷ்ணன்
கதைஆனைவாரி ஏ. ஸ்ரீதர்
இசைநேசன்
நடிப்பு
ஒளிப்பதிவுடி. மகிபாலன்
படத்தொகுப்புஎஸ். சத்திஷ்
கலையகம்பி.ஆர்.கே. மூவிஸ்
வெளியீடுஅக்டோபர் 9, 2009 (2009-10-09)
ஓட்டம்125 நமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வேடப்பன் (Vedappan) என்பது 2009 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். ஆனைவாரி ஏ. ஸ்ரீதர் இயக்கிய இப்படத்தில் ஹேமந்த்குமார், புதுமுகம் அப்சரா மற்றும் புதுமுகம் நிகிதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், வெண்ணிற ஆடை மூர்த்தி, பாலு ஆனந்த், மகாநதி சங்கர், கிரேன் மனோகர், சபிதா ஆனந்த் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு நேசன் இசை அமைத்துள்ளார். படமானது 9 அக்டோபர் 2009 அன்று வெளியானது.[1][2]

கதைச் சுருக்கம்[தொகு]

கிராமத்தில் வாழும் வேடப்பன் ஒரு திரைப்பட நடிகை மீது பெரும் அபிமானம் கொண்டவன். ஒரு சமயம் அந்த நடிகை குறித்து ஊரில் உள்ள ஒருவர் தவறாக பேசியதால் அவரைக் கொல்லத் துணிகின்றான். இதனால் ஊர் பஞ்சாயத்தால் அவன் தண்டிக்கப்படுகின்றான். இதன்பிறகு தன் அபிமான நடிகையையே கொல்ல அவளைத் தேடி வருகிறான். அவளை சந்திக்கிறான் பின்னர் என்ன நடந்தது என்பதே கதையின் பிறபகுதியாகும்.

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

பி. ஆர். கே. மூவிஸ் பதாகையின் கீழ் தயாரிக்கபட்ட வேடப்பன் படம் மூலமாக இயக்குநராக ஆனைவாரி ஏ. ஸ்ரீதர் அறிமுகமானார். வசூல் (2008) படத்தில் நடித்த ஹேமந்த்குமார் முதன்மை ஆண் கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டார். பெங்களூரைச் சேர்ந்த புதுமுகம் அருந்ததி (அப்சரா என குறிப்பிடபட்டார்), புதுமுகம் நிகிதா ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க தேர்வு செய்யப்பட்டனர். மகாநதி சங்கர், வெண்ணிற ஆடை மூர்த்தி, பாலு ஆனந்த் ஆகியோர் குறிப்பிடத்தக்க பிற வேடங்களில் நடித்தனர். படத்திற்கு நேசன் இசையமைக்க, டி. மகிபாலன் ஒளிப்பதிவை மேற்கொள்ள, படத்தொகுப்பை எஸ். சதீஷ் மேற்கொண்டார். இப்படம் 30 நாட்களில் படமாக்கப்பட்டது.[3][4][5][6][7][8]

இசை[தொகு]

இத்திரைப்பட பின்னணி இசை, பாடல் இசை ஆகியவற்றை திரைப்பட இசையமைப்பாளர் நேசன் அமைத்தார். இந்த இசைப்பதிவில் இளைய கம்பன், அண்ணாமலை, சுந்திரன், ஆண்டனி குரூஸ், ஜெயங்கொண்டான் ஆகியோரால் எழுதப்பட்ட ஐந்து பாடல்கள் இருந்தன. இப்படத்தின் இசையானது 29 சூன் 2009 அன்று சென்னையில் வெளியிடப்பட்டது. இசை வெளியீட்டில் நடிகர் பிரசாந்த், சிவசக்தி பாண்டியன், வி. சி. குகநாதன், சுரேஷ் ஜோக்கிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.[9][10][11]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "வந்துபுட்டோம் சலங்கை கட்டி"  பெரிய கருப்பு தேவர் 03:57
2. "அழகிய அழகிய தேவதைப் பெண்ணே"  பெல்லி ராஜ், அனுராதா ஸ்ரீராம் 04:55
3. "மல்லிவெச்சேன் மல்லிவெச்சேன்"  பெல்லி ராஜ், நீபா 04:17
4. "வாழ்க்கை ரோம்ப அவசரம்"  மாலதி லட்சுமணன் 04:45
5. "நதியின் பயணம் கடலைத் தேடும்"  கார்த்திக் 07:16
மொத்த நீளம்:
25:10

குறிப்புகள்[தொகு]

  1. "Vedappan Tamil Movie". woodsdeck.com. பார்க்கப்பட்ட நாள் 8 March 2019.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Jointscene : Tamil Movie Vedappan". jointscene.com. Archived from the original on 20 July 2011. பார்க்கப்பட்ட நாள் 8 March 2019.
  3. "Innoruvan with debutants". ayngaran.com. 19 July 2009. பார்க்கப்பட்ட நாள் 8 March 2019.
  4. "Mahanadhi Shankar turns a hero". indiaglitz.com. 17 May 2010. பார்க்கப்பட்ட நாள் 8 March 2019.
  5. "A Debutant raged to stab a famous actress". kollywoodtoday.net. 4 May 2009. Archived from the original on 21 செப்டம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 8 March 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "Vedappan - A murder mystery on make". kollywoodtoday.net. 30 September 2009. Archived from the original on 8 நவம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 8 March 2019.
  7. "வேடப்பன்: ஒரு நடிகையும் அவர் ரசிகனும்!" [Vedappan: a film about an actress] (in Tamil). filmibeat.com. 11 June 2008. பார்க்கப்பட்ட நாள் 8 March 2019.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  8. "'உம்மா' நாயகன் விக்னேஷ்!" ['Kissing' Hero Vignesh!] (in Tamil). filmibeat.com. 11 June 2008. பார்க்கப்பட்ட நாள் 8 March 2019.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  9. "Vedappan Songs". raaga.com. பார்க்கப்பட்ட நாள் 8 March 2019.
  10. "Vedappan (Original Motion Picture Soundtrack) - EP by Nesan". itunes.apple.com. பார்க்கப்பட்ட நாள் 8 March 2019.
  11. "Vaigai's inspiration". ayngaran.com. 30 June 2009. பார்க்கப்பட்ட நாள் 8 March 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேடப்பன்&oldid=3660949" இலிருந்து மீள்விக்கப்பட்டது