உள்ளடக்கத்துக்குச் செல்

வேடபாளையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 வேடபாளையம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்காஞ்சிபுரம்
மொழிகள்
 • அலுவல்   தமிழ், ஆங்கிலம்
 • பேச்சு தமிழ், ஆங்கிலம்    
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)

வேடபாளையம் (Vedapalayam) என்பது இந்திய நாட்டின் தமிழ்நாடு மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள உத்திரமேரூா் ஒன்றியத்தில் அமைந்துள்ள உத்திரமேரூா் பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட ஓர் ஊராகும்.[1][2]

இக்கிராமம் உத்திரமேரூரில் இருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க உத்திரமேரூர் கல்வெட்டுக்கு அருகில் உத்திரமேரூா் - வந்தவாசி மாநில நெடுஞ்சாலையில் வேடபாளையம் அமைந்துள்ளது. வைர மேக தடாக ஏரி என்றழைக்கப்படும் உத்திரமேரூா் ஏரியின் கிராமத்திற்கு மிக அருகில் உள்ளது. இந்த ஏரி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள இரண்டாவது பெரிய ஏரியாகும். இங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, அங்கன்வாடி, பொது நியாயவிலைக் கடை உள்ளன. அதன் அருகில் தமிழ்நாடு போக்குவரத்துப் பணிமனை உத்திரமேரூா் கிளையும் பொதுப்பணித்துறை விருந்தினா் மாளிகையும் உள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேடபாளையம்&oldid=4519294" இலிருந்து மீள்விக்கப்பட்டது