வேடசந்தூர் வட்டாரத்தில் உள்ள சில முக்கிய கோவில்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வேடசந்தூர் வட்டாரத்தில் உள்ள சில முக்கிய கோவில்கள்:

                        திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வட்டம் (தாலுக்கா) வேடசந்தூர் ஆகும் வேடசந்தூர் குடகனாறு ஆற்றங்கரையில் அமைந்துள்ளது .வேடசந்தூர் வட்டாரம் 1978ல் குடகனாறு வெள்ளத்தில் மிகவும் பாதிக்கப்பட்டது. வேடசந்தூர் ,வடமதுரை ,குஜிலியம்பாறை ஆகிய மூன்று ஒன்றியங்கள் இவட்டத்தில் உள்ளன. வேடசந்தூரைச் சுற்றி பல நூற்பு ஆலைகள் உள்ளன.வேடசந்தூர் நகரம் சேலம், ஈரோடு, திண்டுக்கல், மதுரை, நாமக்கல், கரூர், ஓசூர், பெங்களூரிலிருந்து பொதுப் போக்குவரத்து மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ. டாக்டர் பரமசிவம் ஆவர்புகையிலை உற்பத்திக்கான முக்கிய மையமாகவும் இந்த நகரம் விளங்குகிறது. முன்னாள் பிரிட்டிஷ் பிரதம மந்திரி வின்ஸ்டன் சர்ச்சில் பயன்படுத்திய பிரபலமான சிகார் என்ற புகையிலை 'லைட் ஆப் ஆசியா' இங்கே தயாரிக்கப்பட்டது. மத்திய அரசு 1948 ல் மத்திய புகையிலைஆராய்ச்சி மையத்தை வேடசந்தூரில் அமைத்துள்ளது. வர்ஜீனியா என்ற புகையிலை இங்கு தயாரிக்கப்படுகிறது

வேடசந்தூர் வட்டாரத்தில் உள்ள சில முக்கிய கோவில்கள்:

              வேதாசந்தூர் நகரம் குங்கும காளியம்மன் கோவில், விஷ்ணு கோயில், மாரியம்மன் கோவில், பத்ரா காளியம்மன் கோவில் மற்றும் பாத்திமா மாதா சர்ச் போன்ற இடங்களுடன் ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகும்.

ஆவலக்கோனூர் :

          வேடசந்தூர் வட்டாரத்தில் குடப்பம் கிராமத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆவலக்கோனூர் ஆகும்.இவ்வூரில் பாண்டியர் கால கல்வெட்டு உள்ளது .ஆவலக்கோனூரில் அமைந்துள்ள ஸ்ரீ பெருமாள் கோவில் மிகவும் சிறப்புப்பெற்றது.மேலும் இங்கு அமைந்துள்ள ஸ்ரீ கன்னிமார் திருக்கோவில் வரலாற்றுப்பெருமை மிக்கது.இக்கோவிலில் திரு.கி .அன்புமுத்து அவர்களால் கலைநயமிக்க குதிரைச்சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.திருமுருகப்பெருமானின் அய்யாமாலை பங்குனித்தேரோட்டம் சிறப்புமிக்கது.

ராமகிரி பெருமாள் கோவில் :

          வேடசந்தூர் வட்டாரத்தில் குஜிலியம்பாறைக்கு அருகில் உள்ள அருள்மிகு ராமகிரி ஸ்ரீ நரசிங்கபெருமாள் மிகவும் சிறப்புபெற்றது.வடமதுரை -ஸ்ரீ சௌந்திரராஜப்பெருமாள் கோவில் மிகவும் புகழ் பெற்றது காசிபாளையத்திற்கு அருகில் உள்ள கோவில்பட்டி என்னும் ஊரில் அமைந்துள்ள ஸ்ரீ பெருமாள் கோவில் பாண்டியர் காலத்தைச் சேர்ந்தது .

References: 1.Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional). 2.Census Commission of India. Archived from the original on 2004-06-16. Retrieved 2008-11-01. 3. "List of Parliamentary and Assembly Constituencies" (PDF). Tamil Nadu. Election Commission of India. Retrieved 2008-10-11.