உள்ளடக்கத்துக்குச் செல்

வேங்கைவாசல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேங்கைவாசல்
வேங்கைவாசல் is located in தமிழ்நாடு
வேங்கைவாசல்
வேங்கைவாசல்
ஆள்கூறுகள்: 12°55′09″N 80°11′33″E / 12.9191°N 80.1924°E / 12.9191; 80.1924
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்செங்கல்பட்டு
ஏற்றம்
30.29 m (99.38 ft)
மக்கள்தொகை
 (2011)
  மொத்தம்13,671
மொழிகள்
  அலுவல்தமிழ், ஆங்கிலம்
  பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
600100
புறநகர்ப் பகுதிகள்மேடவாக்கம், பள்ளிக்கரணை, கோவிலம்பாக்கம், பெரும்பாக்கம்
மக்களவைத் தொகுதிதென் சென்னை
சட்டமன்றத் தொகுதிசோழிங்கநல்லூர்

வேங்கைவாசல் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் செங்கல்பட்டு (இதற்கு முன்னர் காஞ்சிபுரம்) மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2]

அமைவிடம்

[தொகு]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 30.29 மீ. உயரத்தில், (12°55′09″N 80°11′33″E / 12.9191°N 80.1924°E / 12.9191; 80.1924) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு கோவிலம்பாக்கம் பகுதிக்கு அருகில் வேங்கைவாசல் அமையப் பெற்றுள்ளது.[3]

வேங்கைவாசல் is located in தமிழ்நாடு
வேங்கைவாசல்
வேங்கைவாசல்
வேங்கைவாசல் (தமிழ்நாடு)

மக்கள்தொகை பரம்பல்

[தொகு]

2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், வேங்கைவாசல் ஊரின் மொத்த மக்கள்தொகை 13,671 பேர் ஆகும். இதில் 6,805 பேர் ஆண்கள் மற்றும் 6,866 பேர் பெண்கள் ஆவர்.[4]

சமயம்

[தொகு]

இந்துக் கோயில்

[தொகு]

கங்கையம்மன் கோயில் என்ற இந்துக் கோயில், வேங்கைவாசல் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலானது, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிறது.[5]

அரசியல்

[தொகு]

வேங்கைவாசல் பகுதியானது, சோழிங்கநல்லூர் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, தென் சென்னை மக்களவைத் தொகுதி சார்ந்தது.[6][7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தாம்பரம் மாநகராட்சியுடன் 15 ஊராட்சிகள் இணைப்பு: அதிகாரிகள் ஆலோசனை" (in en). https://m.dinakaran.com/article/News_Detail/1425168.
  2. S. Muthiah (2008). Madras, Chennai: A 400-year Record of the First City of Modern India (in ஆங்கிலம்). Palaniappa Brothers. ISBN 978-81-8379-468-8.
  3. "வேங்கைவாசல், கோவிலம்பாக்கத்தில் ரூ.19 கோடி மதிப்பிலான திட்டப் பணிகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்" (in ta). 2024-03-16. https://www.hindutamil.in/news/tamilnadu/1216077-19-crore-project-works-at-vengaivasal-kovilambakkam.html.
  4. "Vengavasal Census Town City Population Census 2011-2025". www.census2011.co.in. Retrieved 2025-01-13.
  5. "Arulmigu Gangaiamman Temple, Vengaivasal, Chennai - 600063, Chengalpattu District [TM000565].,No,No". hrce.tn.gov.in. Retrieved 2025-01-13.
  6. "Vengavasal Locality". www.onefivenine.com. Retrieved 2025-01-13.
  7. "VENGAIVASAL Village in KANCHEEPURAM". www.etamilnadu.org. Retrieved 2025-01-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேங்கைவாசல்&oldid=4187536" இலிருந்து மீள்விக்கப்பட்டது