உள்ளடக்கத்துக்குச் செல்

வேக ஈனுலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1951ஆம் ஆண்டில் இதாகோவில் இயங்கிய சோதனை ஈனுலையின் கருனியின் கட்டமைப்பு

ஈனுலை (breeder reactor) எனப்படும் அணு உலையில் பிளவுறு பொருளை பயன்படுத்துவதைக் காட்டிலும் கூடுதலான பிளவுறு பொருட்களை உருவாக்கப்படுகின்றன.[1] இவ்வுலைகளின் நியூத்திரன் இலாபம் மிகக் கூடியநிலையில் இருப்பதால் யுரேனியம்-238, தோரியம்-232 போன்ற தனிமங்களிலிலிருந்து பிளவுறு பொருட்களை ஈனுவதால் இவை ஈனுலைகள் எனப்படுகின்றன. மென்னீர் அணு உலைகளை விட கூடிய எரிபொருள் திறனைக் கொண்டிருந்ததால் இவை துவக்கத்தில் மேம்பட்ட தொழில்நுட்பமாக கருதப்பட்டது. 1960களில் யுரேனியம் மிகுந்த அளவில் கிடைக்கத்தொடங்கியதாலும் புதிய யுரேனியச் செறிவு முறைகள் கண்டுபியடிக்கப்பட்டமையாலும் எரிபொருட் செலவு குறையத் தொடங்கிய பிறகு இவ்வகை அணு உலைகளில் ஆர்வம் குறையத் தொடங்கியது.

ஈனுலைகள் கொள்கையளவில் யுரேனியத்திலிருந்தோ தோரியத்திலிருந்தோ முழு ஆற்றலையும் பயன்படுத்திக் கொள்ள இயலும். இதனால் வழமையான அணு உலைகளை விட இரு மடங்களவில் எரிபொருளைச் சேமிக்க இயலும். கடலிலிருந்து பிரிக்கப்படும் யுரேனியத்தின் அளவைக் கருத்தில் கொண்டால் சூரியன் உள்ளளவும் தொடர்ந்து ஈனுலைகளை இயக்கத் தேவையான எரிபொருள் புவியில் உள்ளது. எனவே ஈனுலைகள் மூலம் பெறப்படும் ஆற்றலானது சூரிய சக்தி அல்லது காற்றுச் சக்திக்கிணையாக பேணத்தக்க புதுப்பிக்கத்தக்க ஆற்றலாக விளங்குகிறது.[2][3]

அணுக் கழிவுகளைக் குறித்த கவலைகள் 1990களில் ஏற்படலாயிற்று. இதனைத் தொடர்ந்து எரிபொருளை சேமிக்கும் ஈனுலைகளில் மீண்டும் ஆர்வம் ஏற்பட்டது. குறிப்பாக ஈனுலைகளில் எரிபொருள் சுழற்சிகளால் புளுடோனியம் போன்ற அக்டினைடுகளின் கழிவுகளைக் குறைக்கக்கூடிய வாய்ப்பு கவனத்தைக் கவர்ந்தது.[4] ஓர் மென்னீர் அணு உலையில் பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருளின் கழிவுகளில் இருக்கும் நிலையற்ற யுரேனியம்சார் தனிமங்கள் அடுத்த 10,000 ஆண்டுகள் வரையிலான கதிரியக்கத்தில் முதன்மை வகிக்கும். எனவே இத்தகைய நீண்ட வாழ்நாள் கதிரியக்க கழிவுகளை இல்லாமலாக்குவது பெரும் பயனளிக்கும்.[5]

கருதுகோளின்படி ஓர் ஈனுலை மீண்டும் மீண்டும் எரிபொருளைப் பயன்படுத்தி அனைத்து அக்டினைடுகளையும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.[2]

ஈனுலை சுழற்சிகள் இருவகைப்படுகின்றன; இரண்டுமே அக்டினைடு கழிவுகளை குறைக்கின்றன:

  • வேக ஈனுலைகளின் விரைவு நியூத்திரன்கள் அக்டினைடு கருனியைப் பிளந்து இரட்டை எண்ணிக்கையில் புரோட்டான்களையும் நியூத்திரன்களையும் உண்டாக்குகிறது.
  • தோரியம் எரிபொருள் சுழற்சியில் குறைந்த எண்ணிக்கையில் கனத்த அக்டினைடுகளை உண்டாக்குகிறது. எரிபொருள் சில கலப்பட ஓரிடத்தான்களுடன் துவங்குகிறது; அதாவது உலையில் தூய U238 இருப்பதில்லை. இரண்டு வாய்ப்புகளில் எரிபொருளை பிளக்கிறது; முதலில் U233ஆகவும் பின்னர் நியூத்திரன்களை உட்கொண்டபிறகு U235ஆகவும் பிளக்கிறது.

வேக ஈனுலை[தொகு]

தொட்டி மற்றும் முழுச்சுற்று வகை நீர்ம உலோக வேக ஈனுலைகளுக்கிடையேயான வேறுபாடுகளைக் குறிக்கும் வரைபடம்.

2006 ஆண்டு நிலவரப்படி, பெரிய அளவில் இயங்கும் அனைத்து வேக ஈனுலைகளுமே நீர்மநிலை சோடியத்தால் குளிர்விக்கப்படும் நீர்ம உலோக வேக ஈனுலைகளாக (LMFBR) உள்ளன. இவற்றின் வடிவமைப்பு இரண்டு வகைகளாக உள்ளன:[1]

  • முழுச்சுற்று வகையில் முதன்மை குளிர்வி அணுஉலைத் தொட்டிக்கு வெளியேயுள்ள முதன்மை வெப்பமாற்றிகளில் சுற்றி வருகின்றன. (இருப்பினும் கதிரியக்கமுள்ள சோடியம்-24 குளிர்வியாக இருப்பதால் இவையும் கதிரியக்கக் கேடயத்திற்கு உள்ளேயே இருக்கும்).
  • தொட்டி வகையில் முதன்மை வெப்பமாற்றிகளும் ஏற்றிகளும் அணுஉலைத் தொட்டிக்கு உள்ளேயே அமிழ்ந்திருக்கும்.

இதையும் காண்க[தொகு]

அதிவேக ஈனுலை

சான்றுகோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Waltar, A.E. (1981). Fast breeder reactors. New York: Pergamon Press. p. 853. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-08-025983-3. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help)
  2. 2.0 2.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-01-14. பார்க்கப்பட்ட நாள் 2012-12-08.
  3. Weinberg, A. M., and R. P. Hammond (1970). Limits to the use of energy, Am. Sci. 58, 412.
  4. "Supply of Uranium". World Nuclear Association. Archived from the original on 12 பிப்ரவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 11 March 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. Bodansky, David (January 2006). "The Status of Nuclear Waste Disposal". Physics and Society (American Physical Society) 35 (1). http://www.aps.org/units/fps/newsletters/2006/january/article1.html#_edn3. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேக_ஈனுலை&oldid=3713545" இலிருந்து மீள்விக்கப்பட்டது