வேக்னர்-யாவ்ரெக்கு வினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேக்னர்-யாவ்ரெக்கு வினை (Wagner-Jauregg reaction) என்பது கரிம வேதியியலில் ஒரு தரமான கரிம வினையாகும். தியோடர் வேக்னர்-யாவ்ரெக்கு என்பவர் வினையைக் கண்டறிந்த காரணத்தால் இவ்வினைக்கு வேக்னர்-யாவ்ரெக்கு வினை என்று பெயரிடப்பட்டது. இரு சமான மேலியிக் நீரிலியுடன் 1,1-டையரைலெத்திலீன் சேர்த்து இரட்டை டையீல்சு- ஆல்டர் வினைக்கு உட்படுத்துவதே வேக்னர்-யாவ்ரெக்கு வினை என்று விவரிக்கப்படுகிறது. பிசு-கூட்டுவிளைபொருளை அரோமாட்டிக் சேர்மமாக்கிய பின்னர் இறுதியாக உருவாகும் வினைவிளைபொருள் ஒரு பீனைல் பதிலீட்டுடன் கூடிய நாப்தலீன் சேர்மமாகும்[1][2].

நீரிலி அரோமாட்டிக் வளையத்துடன் ஈடுபடுகின்ற இவ்வினை ஓர் அசாதாரணமான வினையாகும். சிடைரைல் குழு எனப்படும் பீனைலெத்தீன் மீதுள்ள கூடுதலான ஆல்பா-பீனைல் குழு டையீல்சு ஆல்டர் வினைக்குத் தேவையான சிடைரைலை செயலூக்குகிறது. மாறாக, செயலூக்கப்படாத இசுடைரினானது நேரியல் பலபடியாக்கல் வினை வழியாக ஆல்க்கீனுடன் வினைபுரிகிறது. இசுடைரின் தன்னுடைய அரோமாட்டிக் தன்மையை தக்கவைத்துக் கொண்டு இசுடைரின் மேலியிக் நீரிலி என்ற இணைபலபடி உருவாகிறது. டையீல்சு ஆல்டர் வினையில் உருவாகும் வினை விளைபொருளை உயர் வெப்பநிலையில் தனிமநிலை கந்தகத்தைப் பயன்படுத்தி மீண்டும் அரோமாட்டிக் சேர்மமாக மாற்ற இயலும். இதற்காக விளைபொருளுடன் பேரியம் ஐதராக்சைடும் தாமிரமும் சேர்த்து கார்பாக்சில் நீக்க வினைக்கு உட்படுத்தி அதைத் தொடர்ந்து மறு அரோமாட்டிக் சேர்மமாக்கல் செய்யப்படுகிறது:[3]

Wagner-Jauregg reaction
Wagner-Jauregg reaction

.

மேற்கோள்கள்[தொகு]

  1. Theodor Wagner-Jauregg (1930). "Über addierende Hetero-polymerisation". Berichte der deutschen chemischen Gesellschaft (A and B Series) 68 (11): 3218. doi:10.1002/cber.19300631140. 
  2. Theodor Wagner-Jauregg (1931). "Die Addition von Maleinsäureanhydrid an asymm. Diphenyl-äthylen". Justus Liebig's Annalen der Chemie 491: 1. doi:10.1002/jlac.19314910102. 
  3. Felix Bergmann; Jacob Szmuszkowicz; George Fawaz (1947). "The Condensation of 1,1-Diarylethylenes with Maleic Anhydride". Journal of the American Chemical Society 69 (7): 1773–1777. doi:10.1021/ja01199a055. பப்மெட்:20251415. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேக்னர்-யாவ்ரெக்கு_வினை&oldid=2644110" இலிருந்து மீள்விக்கப்பட்டது