வெ. மோகனா
மாண்புமிகு வெ. மோகனா | |
|---|---|
| நீதிபதி-இந்திய உச்ச நீதிமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 2 சூன் 2026 | |
| பரிந்துரைப்பு | சூர்யகாந்த் சர்மா |
| நியமிப்பு | திரௌபதி முர்மு |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 27 சூன் 1966 சென்னை, இந்தியா |
| முன்னாள் மாணவர் | கோயம்புத்தூர் சட்டக் கல்லூரி |
வெங்கிட சுப்பிரமணியன் மோகனா (V. Mohana)(பிறப்பு 27 சூன் 1966) சூன் 2026 முதல் இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியில் உள்ள இந்திய நீதிபதி ஆவார். இவர் முன்பு இந்திய உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார்.[1][2][3]
வழக்கறிஞராக
[தொகு]1966 சூன் 27 அன்று சென்னையில் பிறந்தார். நீதிபதி மோகனா முதல் தலைமுறை வழக்கறிஞர் ஆவார். இவர் 1988ஆம் ஆண்டில் கோயம்புத்தூர் சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றார். இது இந்தியாவின் முதல் ஐந்து ஆண்டு சட்டப் படிப்பின் ஒரு பகுதியாகும். பின்னர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பணியாற்றிய அப்போதைய வழக்கறிஞர் இந்து மல்கோத்ராவுடன் இவர் பணியாற்றியுள்ளார். இதன்பிறகு, மோகனா மூத்த வழக்கறிஞர் சி. எஸ். வைத்தியநாதனின் குழுவில் சேர்ந்தார். 1996 ஆம் ஆண்டில், இவர் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆனார். இந்திய உச்ச நீதிமன்றம், தில்லி, உயர் நீதிமன்றம், தலைநகரில் உள்ள பல்வேறு தீர்ப்பாயங்களில் பயிற்சி பெற்றார். 2015ஆம் ஆண்டில், இவர் உச்ச நீதிமன்றத்தால் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். இவர் அரசியலமைப்பு, குடிமை மற்றும் குற்றவியல் விடயங்களில் பணியாற்றினார். மேலும் பல உயர்மட்ட வழக்குகளில் நீதிமன்றத்தின் நண்பர் பணியாற்றினார். உச்ச நீதிமன்றத்தில், 2022 கர்நாடக ஹிஜாப் வழக்கு, இந்திய இராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கான நிரந்தர ஆணையம் போன்ற வழக்குகளில் ஆஜரானார். 2015 தேசிய நீதித்துறை நியமன ஆணைய வழக்கில் இந்திய ஒன்றியத்தை இவர் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
உச்ச நீதிமன்ற நீதிபதியாக
[தொகு]இவர் 2026 சூன் 2 அன்று இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.[4][5][6][7][8] இந்திய உச்ச நீதிமன்ற வரலாற்றில் 12ஆவது பெண் நீதிபதியாகவும், வழக்கறிஞர்களில் இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற அமர்வுக்கு பதவி உயர்த்தப்பட்ட 2ஆவது பெண் நீதிபதியாக உள்ளார்.[9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "SC Collegium Recommends Elevation of Four HC Chief Justices, Senior Advocate V Mohana To Supreme Court" (in en). Live Law. https://www.livelaw.in/top-stories/sc-collegium-recommends-elevation-of-four-hc-chief-justices-senior-advocate-v-mohana-to-supreme-court-535969.
- ↑ "Supreme Court Collegium recommends four High Court judges, woman advocate to top court" (in en). The Hindu. https://www.thehindu.com/news/national/supreme-court-collegium-recommends-four-high-court-judges-woman-advocate-to-top-court/article71030697.ece.
- ↑ "Collegium recommends four HC Chief Justices and Senior Advocate V Mohana to be appointed as Supreme Court judges" (in en). Bar and BEnch. https://www.barandbench.com/news/litigation/collegium-recommends-four-hc-chief-justices-and-senior-advocate-v-mohana-to-be-appointed-as-supreme-court-judges.
- ↑ "From V Mohana To Justice Sheel Nagu: Who Are The New Supreme Court Judges Approved By Centre?" (in en). News 18. https://www.news18.com/india/from-v-mohana-to-justice-sheel-nagu-who-are-the-new-supreme-court-judges-approved-by-centre-ws-l-10123545.html.
- ↑ "Centre Notifies Appointment Of 5 Supreme Court Judges : 4 HC CJs & Sr Adv V Mohana" (in en). Live Law. https://www.livelaw.in/top-stories/centre-notifies-appointment-of-5-supreme-court-judges-4-hc-cjs-sr-adv-v-mohana-536356.
- ↑ "Who Is V. Mohana? The Senior Advocate Who May Join the Supreme Court Bench" (in en). theedulaw.in. https://www.store.theedulaw.in/blog/who-is-v-mohana-the-senior-advocate-who-may-join-the-supreme-court-bench.
- ↑ "V. Mohana, Senior Advocate, Supreme Court of India, on the AOR exam, life in litigation and role of a Senior Counsel" (in en). superlawyer.in. https://superlawyer.in/v-mohana-senior-advocate-supreme-court-india-aor-exam-life-litigation-role-senior-counsel.
- ↑ "Who is V. Mohana? SC Collegium recommends senior advocate as apex court judge" (in en). theweek.in. https://www.theweek.in/news/india/2026/05/27/who-is-v-mohana-the-senior-advocate-recommended-as-a-supreme-court-judge.amp.html.
- ↑ "தமிழக சீனியர் வக்கீல் மோகனா உட்பட சுப்ரீம் கோர்ட்டில் 5 புதிய நீதிபதிகள்: ஜனாதிபதி நியமனம்". தினமலர். 2026-06-02. p. 3.