உள்ளடக்கத்துக்குச் செல்

வெள்ளை முக அரிவாள் மூக்கன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெள்ளை முக அரிவாள் மூக்கன்
வெள்ளை முக அரிவாள் மூக்கன்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
தெரிசுகியோரினித்திடே
பேரினம்:
பிளேகாடிசு
இனம்:
பி. சிகி
இருசொற் பெயரீடு
பிளேகாடிசு சிகி
(வயோலொட், 1817)
வேறு பெயர்கள்
 • பிளேகாடிசு பால்சினெலசு சிகி
 • பிளேகாடிசு பால்சினெலசு மெக்சிகானா

வெள்ளை முக அரிவாள் மூக்கன் (White-faced ibis)(பிளேகாடிசு சிகி) என்பது திரெசுகியோர்னிதிடே என்ற அரிவாள் மூக்கன் குடும்பத்தில் அலைந்து திரியும் பறவையாகும் .

இந்த சிற்றினம் சதுப்புநிலங்களில் கூட்டமைப்பாக வாழ்ந்து முறையில் இனப்பெருக்கம் செய்கிறது. பொதுவாகப் புதர்கள் அல்லது உயரம் குறைவான மரங்களில் கூடு கட்டுகிறது. இதன் இனப்பெருக்க வரம்பு அமெரிக்காவின் மேற்கிலிருந்து தெற்கே மெக்சிகோ வரையும், தென்கிழக்கு பிரேசில் மற்றும் தென்கிழக்கு பொலிவியாவிலிருந்து தெற்கே மத்திய அர்ஜென்டினா வரையிலும், மத்திய சிலியின் கடற்கரையிலும் பரவியுள்ளது. இதன் குளிர்கால வரம்பு தெற்கு கலிபோர்னியா மற்றும் லூசியானா தெற்கிலிருந்து இதன் இனப்பெருக்க வரம்பின் மற்ற பகுதிகளை உள்ளடக்கியது.

விளக்கம்[தொகு]

வெள்ளை-முகம் கொண்ட அரிவாள் மூக்கன் இனப்பெருக்கம் செய்யாத காலங்களில் இறகுகளில் பளபளப்பான அரிவாள் மூக்கனுடன் மிகவும் ஒத்திருக்கிறது. ஆனால் இது சற்று சிறியதாக அளவிக் காணப்படும். இனப்பெருக்கம் செய்யும் பறவைகள் வெள்ளை நிற இறகுகளுடன் கூடிய இளஞ்சிவப்பு முகம், ஒரு சாம்பல் நிற அலகு மற்றும் பிரகாசமான வண்ணம், செங்கால்களுடன் காணப்படும். முதிர்ச்சியடைந்த பறவைகளின் கண்கள் ஆண்டு முழுவதும் சிவப்பு நிறத்திலிருக்கும். அதேசமயம் பளபளப்பான அரிவாள் மூக்கன் இருண்ட கண்களுடன் காணப்படும். இரண்டு சிற்றினங்களின் குஞ்சுகள் ஏறக்குறைய ஒரே மாதிரியானவை.[2]

அளவீடுகள்:[3]

 • நீளம் : 18.1-22.1 அங்குலம் (46-56 செ.மீ.)
 • எடை : 15.9-18.5 அவுன்ஸ் (450-525 கிராம்)
 • இறக்கைகள் : 35.4-36.6 அங்குலம் (90-93 செ.மீ.)

பரவல்[தொகு]

வெள்ளை முகம் கொண்ட அரிவாள் மூக்கன் கனடா, அமெரிக்கா, மத்திய அமெரிக்கா மற்றும் தென்னமெரிக்காவின் தெற்குப் பகுதியில் காணப்படுகிறது.[1] 2012-ல், மொத்த பறவைகளின் எண்ணிக்கையானது 1.2 மில்லியன் என மதிப்பிடப்பட்டது. இதன் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகிறது. இதனால் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் இந்தப் பறவையினை குறைந்த அக்கறை கொண்ட சிற்றினமாக மதிப்பிடுகிறது.[1]

வடக்கு மற்றும் தென் அமெரிக்கா இடையே வலசைப்போதல் காணப்படவில்லை. வடஅமெரிக்காவிற்குள், வரம்பின் வடக்குப் பகுதிகளில் இனப்பெருக்கம் செய்யும் பறவைகள் தெற்கே குளிர்காலப் பகுதிகளுக்கு நகர்கின்றன.[4] எடுத்துக்காட்டாக, வடக்கு கலிபோர்னியா மற்றும் தெற்கு ஓரிகானில் உள்ள பறவைகள் தெற்கு கலிபோர்னியா மற்றும் மெக்சிக்கோவிற்குக் குளிர்காலத்தில் நகர்கின்றன.

தோற்றம்[தொகு]

வெள்ளை முக அரிவாள் மூக்கனுடன் தொடர்புடைய பளபளப்பான அரிவாள் மூக்கன் வலுவான ஒற்றுமையைக் கொண்டுள்ளது. மேலும் கடந்த காலங்களில் சில நேரங்களில் பளபளப்பான அரிவாள் மூக்கனின் துணையினமாகக் கருதப்பட்டது.[5] மற்றொரு கோட்பாடு புதிய உலகில், சிறிய தனிமைப்படுத்தப்பட்ட பளபளப்பான அரிவாள்மூக்கன்கள், தனிச் சிற்றினமாக மாறியது என்பதாகும்.[6] இருப்பினும், சமீபத்திய மூலக்கூறு இன உறவு ஆய்வுகள் வெள்ளை முகம் கொண்ட அரிவாள் மூக்கன் உண்மையில் ஒரு பொதுவான மூதாதையரிலிருந்து தோன்றியதாக இருக்கலாம் என்பதைக் காட்டுகிறது.[7] அமெரிக்காவில் உள்ள வெள்ளை முக அரிவாள் மூக்கன் தெற்கு பிரேசிலில் உள்ள வெள்ளை முக அரிவாள் மூக்கனை விடப் பளபளப்பான அரிவாள் மூக்கனுடன் மிகவும் நெருக்கமாகத் தொடர்புடையதாகத் தெரிகிறது.[7]

உணவூட்டம்[தொகு]

வெள்ளை முக அரிவாள் மூக்கன், பூச்சிகள், லீச்ச்கள், நத்தைகள், நண்டு மற்றும் மண்புழுக்கள் போன்ற பல முதுகெலும்பில்லாத உயிரினங்களை உண்கிறது. இது மீன், பல்லி மற்றும் தவளைகள் போன்ற முதுகெலும்புகளையும் உண்ணும்.[8][9] இரையினைப் பிடிக்க இது தன் அலகினை இலவகமாகப் பயன்படுத்துகின்றது.

இனப்பெருக்கம் மற்றும் கூடு கட்டுதல்[தொகு]

இளம் உயிரி இரை தேடும்போது

இந்த இனம் சதுப்புநிலங்களில் கூட்டமாக இனப்பெருக்கம் செய்கிறது. பொதுவாகப் புதர்கள் அல்லது குறைந்த உயரமுடைய மரங்களில் கூடு கட்டுகிறது. இதன் இனப்பெருக்க வரம்பு மேற்கு அமெரிக்காவிலிருந்து தெற்கே மெக்சிக்கோ வழியாகவும், தென்கிழக்கு பிரேசில் மற்றும் தென்கிழக்கு பொலிவியாவிலிருந்து தெற்கே மத்திய அர்ஜெண்டினா வரையிலும், மத்திய சிலியின் கடற்கரையிலும் பரவியுள்ளது. இதன் குளிர்கால வரம்பு தெற்கு கலிபோர்னியா மற்றும் லூசியானா தெற்கிலிருந்து இதன் இனப்பெருக்க வரம்பின் மற்ற பகுதிகளையும் உள்ளடக்கியது. வெள்ளை-முக அரிவாள் மூக்கன், கோரை, நாணற்புல், புதர்கள் மற்றும் குட்டையான மரங்கள் உள்ளிட்ட அடர்ந்த தாவரங்களைக் கொண்ட[8] சதுப்புநிலத்தின் பகுதிகளில் கூடு கட்ட இடமாகத் தேர்ந்தெடுக்கிறது.[10] வெள்ளை முக அரிவாள் மூக்கன் ஒரு நேரத்தில் மூன்று அல்லது நான்கு நீல-பச்சை நிற முட்டைகளை இடும்.[6]

ஆயுட்காலம்[தொகு]

காப்பகங்களில் வளர்க்கப்படும் வெள்ளை முக அரிவாள் மூக்கன் சராசரியாக பதினான்கு ஆண்டுகள் வரை வாழ்கின்றன. காடுகளில், வெள்ளை முக அரிவாள் மூக்கன் பொதுவாக ஒன்பது ஆண்டுகள் வாழ்கின்றன. இருப்பினும் பதிவுசெய்யப்பட்ட மிகப் பழமையான வெள்ளை முக அரிவாள் மூக்கன் பதினான்கு ஆண்டுகள் ஆறு மாதங்கள் வாழ்ந்துள்ளது.[10]

அச்சுறுத்தல்கள்[தொகு]

கடந்த காலத்தில், வெள்ளை முக அரிவாள் மூக்கன் மனிதர்களிடமிருந்து பல அச்சுறுத்தல்களை எதிர்கொண்டது. 1960களில் உட்டாவில் முடிக்கப்பட்ட ஆய்வுகள் (இந்த சிற்றினம் வலசைப்போகும் பறவைகள் ஒப்பந்தச் சட்டத்தில் சேர்க்கப்படுவதற்கு முன்பு) 82.9% பதிவு செய்யப்பட்ட பறவைகளின் இறப்புகள் சுடப்பட்டுக் கொல்லப்பட்டன என்பதைக் காட்டுகிறது.[5] இருப்பினும், முன்னர் இந்த சிற்றினத்தின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாகப் பூச்சிக்கொல்லிகள் மற்றும் வாழ்விட அழிவு ஆகும்.[6] டி.டி.டீ. என்ற பூச்சிக்கொல்லியானது காரணமாக முட்டை ஓடுகள் மிகவும் மெல்லியதாகவும் உடையக்கூடியதாகவும் இருந்தன. இதனால் பெற்றோர் முட்டைகளை அடைகாக்கும் போது முட்டைகள் பாதிப்பிற்குள்ளானது.[6] மேலும், இந்த சிற்றினம் ஈரநிலங்கள் மற்றும் சதுப்புநிலங்களை உணவு சேகரிக்கவும் கூடு கட்டுவதற்கும் மிகவும் சார்ந்து இருப்பதால், மாசுபாடு மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட நீர் வாழ்விடங்களை வடிகட்டுதல் போன்ற நீர் அமைப்புகளில் மாற்றங்கள் கடந்த காலத்தில் இந்த இனத்தின் பேரழிவு தரும் தாக்கங்களை ஏற்படுத்தியது.[8][9] இந்த சேதங்களைச் சரிசெய்வதற்காக, 1970ஆம் ஆண்டில் டி.டி.டீ. தடைசெய்யப்பட்டது. சதுப்புநிலக் கூடுகளின் வாழ்விடங்களைச் சிறப்பாகப் பராமரிக்கவும் பாதுகாக்கவும் பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்பட்டன.[11] ஆனாலும், அனைத்து புவியியல் பகுதிகளிலும் வெள்ளை முக அரிவாள் மூக்கனின் எண்ணிக்கை மீட்கப்பட்டு வளர்ந்து வருகிறதா என்பது குறித்து சில விவாதங்கள் உள்ளன.[11]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 BirdLife International (2016). "Plegadis chihi". IUCN Red List of Threatened Species 2016: e.T22697426A93613243. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22697426A93613243.en. https://www.iucnredlist.org/species/22697426/93613243. பார்த்த நாள்: 19 November 2021. 
 2. "White-faced Ibis". Birding Hawaii. 2004. Archived from the original on 2012-11-05. பார்க்கப்பட்ட நாள் 2013-12-23.
 3. "White-faced Ibis Identification, All About Birds, Cornell Lab of Ornithology". www.allaboutbirds.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-26.
 4. "White-faced Ibis". Audubon (in ஆங்கிலம்). 13 November 2014.
 5. 5.0 5.1 Ryder, Ronald. (1967) “Distribution, Migration and Mortality of the White-Faced Ibis (Plegadis chihi) in North America”.
 6. 6.0 6.1 6.2 6.3 Audubon White-faced Ibis பரணிடப்பட்டது 2020-05-12 at the வந்தவழி இயந்திரம், Retrieved 11 April 2014
 7. 7.0 7.1 Ramirez, J. L., C. Y. Miyaki, and S. N. Del Lama.
 8. 8.0 8.1 8.2 Great Basin Bird Observatory White-faced Ibis[தொடர்பிழந்த இணைப்பு], Retrieved 22 April 2014
 9. 9.0 9.1 Texas Parks and Wildlife White-faced Ibis, Retrieved 11 April 2014
 10. 10.0 10.1 Ryder, Ronald A. and David E. Manry.(2005)"White-faced Ibis (Plegadis chihi)”, The Birds of North America Online” (A. Poole, Ed.).
 11. 11.0 11.1 D. Dark-Smiley and D. Keinath. (2003) “Species Assessment for White-faced Ibis”.

வெளி இணைப்புகள்[தொகு]