உள்ளடக்கத்துக்குச் செல்

வெள்ளை புள்ளி விசிறிவால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெள்ளை புள்ளி விசிறிவால்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
ரைபிதுரிடே
பேரினம்:
ரைபிதுரா
இனம்:
R. albogularis
இருசொற் பெயரீடு
Rhipidura albogularis
(லெசன், 1831)
இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள அனந்தகிரி மலையில் குஞ்சுகளுடன் கூடு.

வெள்ளை புள்ளி விசிறிவால் (White-spotted fantail) அல்லது புள்ளி மார்பு விசிறிவால் (ரைபிடூரா அல்போகுலாரிசு) என்பது சிறிய வகை பேசரின் சிற்றினமாகும். இது தென் மற்றும் மத்திய இந்தியாவில் காடு, புதர் மற்றும் சாகுபடி நிலங்களில் காணப்படுகிறது. இது முன்னர் வெள்ளை-தொண்டை விசிறிவால் ஈப்பிடிப்பானின் துணையினமாகக் கருதப்பட்டது.[2]

விளக்கம்

[தொகு]

முதிர்ந்த வெள்ளை புள்ளிகள் கொண்ட விசிறிவால் சுமார் 19 செ. மீ. நீளமுடையது. இது ஒரு அடர் விசிறி வடிவ வெள்ளை நிறத்தில் விளிம்புகள் வாலினையும், வெள்ளை நிற மெல்லிய தொண்டை முடிகளையும் கொண்டுள்ளது. இப்பறவையின் மேற்பகுதி எழுது பலகை சாம்பல் நிறத்தில் உள்ளது. கருப்பு நிற கண் மூடி மற்றும் வெள்ளை தொண்டை புருவத்துடன் காணப்படும். இது வெண்மையான அடிப்பகுதியையும், வெள்ளை நிறப் புள்ளிகளுடன் காணப்படும் சாம்பல் நிற மார்பகப் பட்டையையும் கொண்டுள்ளது.

நடத்தை

[தொகு]
இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள அனந்தகிரி மலையில்

வெள்ளைப் புள்ளி விசிறிவால் மரத்தில் சிறிய கோப்பை வடிவ கூட்டில் மூன்று முட்டைகள்வரை இடுகிறது.

உணவு

[தொகு]

வெள்ளை புள்ளி விசிறிவால், பூச்சிகளை உண்ணக்கூடியது. இது அடிமரத்தின் வழியாக நகரும்போது வாலை அடிக்கடி விசிறிக்கொள்கிறது.

குரல்

[தொகு]

பொதுவாக ஆண் தனது அழைப்பில் இசைக் குறிப்புகளின் நிலையான மற்றும் தவறற்ற வடிவத்தைப் பயன்படுத்துகிறது. ஒலியானாது சத்தமாக இருக்கும் போது இரண்டு சரணங்களாகப் பிரிக்கப்படுகின்றன. முதலில் 5-6 டிரில்லிங் குறிப்புகள் உயர்ந்து விழும். இதைத் தொடர்ந்து 4-5 குறிப்புகள் அளவு உயர்ந்து மிக உயர்ந்த குறிப்பில் முடிவடையும். பறவைகள் ஆண்டுதோறும் ஒரே ஓசையினைப் பயன்படுத்துகின்றன. ஆனால் படிப்படியாகச் சிறிய மாற்றங்களுடன் ஒலிக்கின்றன. இதன் விளைவாக ஓசையானது 4-5 குறிப்புகளுக்கு பிறகு மிகவும் வித்தியாசமாக ஒலிக்கிறது. பறவையைக் கண்டறிவதற்கும் அடையாளம் காண்பதற்கும் ஆணின் அழைப்பு மதிப்புமிக்க பண்பாக உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. BirdLife International. 2017. Rhipidura albogularis (amended version of 2016 assessment). The IUCN Red List of Threatened Species 2017: e.T103709613A118756437. https://dx.doi.org/10.2305/IUCN.UK.2017-3.RLTS.T103709613A118756437.en. Downloaded on 10 December 2018.
  2. Birds of India by Grimmett, Inskipp and Inskipp, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-691-04910-6