வெள்ளையடிப்பு (விளையாட்டு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெள்ளையடிப்பு (ஆங்கில மொழி: Whitewash) என்பது பெரும்பாலும் விளையாட்டுக்களில் பயன்படுத்தப்படும் பதம் ஆகும். ஒரு விளையாட்டிலோ அல்லது விளையட்டுத் தொடரிலோ விளையாடும் ஓர் குறித்த அணியானது எதிர் அணியினை எந்தவித புள்ளிகளும் எடுக்கவிடாமல் அல்லது எந்தவொரு விளையாட்டிலும் வெற்றியடைய விடாமல் செய்து தோற்கடித்தலை இப்பதம் குறிக்கின்றது. பொதுவாக ஐக்கிய அமெரிக்காவில் இப்பதத்திற்குப் பதில் சட் அவுட்[1] எனும் பதமே பரவலாக பயன்படுத்தப்படுகின்றது. பேஸ்பால், சங்கக் கால்பந்து போன்ற விளையாட்டுக்களில் வெள்ளையடிப்பு எனும் பதம் பயன்படுத்தப்படுவதில்லை. சங்கக் கால்பந்தில் கிளீன் சீட்[2] எனும் பதம் பயன்படுத்தப்படும். துடுப்பாட்டத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டப் போட்டிகளைக் கொண்டத் துடுப்பாட்டத்தொடர் ஒன்றில் எதிரணியை முழுமையாக ஒரு போட்டியிலும் வெற்றியடையவிடாது செய்கின்றதோ தோல்வியுற்ற அக்குறித்த எதிரணி வெற்றியடைந்த அணியால் வெள்ளையடிப்பு செய்யப்பட்டதாகக் குறிக்கப்படும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "சட் அவுட் என்றால் என்ன?". 3 பெப்ரவரி 2016 அன்று பார்க்கப்பட்டது.
  2. "கிளீன் சீட் என்றால் என்ன?". 3 பெப்ரவரி 2016 அன்று பார்க்கப்பட்டது.
  3. "துடுப்பாட்டத்தில் வெள்ளையடிப்பு செய்யப்பட்ட சந்தர்ப்பங்கள் சில". 3 பெப்ரவரி 2016 அன்று பார்க்கப்பட்டது.