வெள்ளைப் பெட்டிச் சோதனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வெள்ளைப் பெட்டிச் சோதனையானது (தெளிவான பெட்டி சோதனை, கண்ணாடி பெட்டி சோதனை, வெளிப்படையான பெட்டி சோதனை, மற்றும் அமைப்பிற்குரிய சோதனை என்று அறியப்படுகிறது) இது ஒரு வகையான மென்பொருள் சோதனை முறையாகும். மென்பொருளில் இச்சோதனை முறையில் ஒவ்வொரு படிமுறையூடாகவும் செல்வதால் நிராக்கல் மொழியறிவு அவசியம் ஆகும். சோதனையாளார் சோதனை உள்ளீடு ஒன்றை கணினிக்கு வழங்கி அது நிரலில் அது செல்லும் பாதையைப் பின் தொடர்ந்து சரியான வெளீட்டைத் தருகின்றாதா என்பதைச் சரிபார்ப்பார்.

இந்தச் சோதனையானது எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றதோ அதைப் பின்பற்றியே நடத்தப்படுவதால், நடைமுறைப்படுத்தும் முறையில் மாற்றங்கள் செய்தால் சோதனையிலும் மாற்றங்கள் செய்யவேண்டும். எடுத்துக்காட்டகா இலத்திரனியல் சோதனை ஒன்றில் புதிதாக சேர்கிட் (Circuit) ஒன்றுதேவைப்பட்டாலும் அதை வணிகரீதியாகத் தரமுடியாமல் இருக்கலாம். எனவே பிழையான பொருள் ஒன்று தொடர்ந்தும் பிழையாகவே இருக்கலாம்.

வெள்ளைப் பெட்டிச் சோதனையானது ஓரலகுச் சோதனை, ஒருங்கிணைப்புச் சோதனை மற்றும் அமைப்பு சோதனை (system) போன்றவற்றில் பயன்படுத்தக் கூடியதாக இருந்தாலும் பொதுவாகத் ஓரலகுச் சோதனைகளிலேயே பயன்படுத்தப்படுகின்றது. பொதுவாக இது ஒரு தொகுதியில் உள்ளே பாதையைச் சரிபார்த்தாலும் ஒருங்கிணைப்பு சோதனையில் ஒவ்வொரு பகுதிகளுக்கும் இடையில் எவ்வாறு செல்கின்றது என்பது சரிபார்க்கப்படும். இச்சோதனைமுறையில் வழுக்களைக் கண்டுபிடிகக்கூடியதாக இருந்தாலும் மென்பொருட் தேவைகள் ஆவணத்தில் தரப்பட்டுள்ள எல்லாவற்றையும் பூர்த்தி செய்யும் வகையில் மென்பொருளானது உள்ளதா எனச் சரிபார்க்க இயலாது. ஆயினும் ஒருவர் எல்லாப் பாதைகளும் சரிவரச் சோதிக்கப்படுள்ளது என்பதனை உறுதிப்படுத்த இயலும்.

பொதுவாக வெள்ளைப் பெட்டிச் சோதனையில் கீழ்வரும் முறைகளை உள்ளடக்கியிருக்கும்[1].

  • கட்டுப்படுத்திய பாய்ச்சற் சோதனை
  • தரவுப் பாய்ச்சற் சோதனை

வெள்ளைப் பெட்டி சோதனை நுட்பம் செயல்பாட்டுமுறை[தொகு]

வெள்ளை பெட்டி சோதனை அடிப்படையில் மூல குறியீடு புரிந்து கொண்டிருக்கும்போது நீங்களே சோதிக்க முடியும்.நிரலாளர் ஒவ்வொரு புலப்படும் பாதையையும் சோதனை செய்யவேண்டுமென்றால் ஒரு ஆழமான புரிதலை கொண்டிருக்க வேண்டும். இந்த வெள்ளை பெட்டி சோதனை சோதனை நிகழ்வுகளில் உருவாக்கும் பொருட்டு எடுக்கும் என்று மூன்று அடிப்படை படிகள் உள்ளன அவை பின்வருமாறு:

  1. உள்ளீடு: பல்வேறு வகையான தேவைகள், செயல்பாட்டு குறிப்புகள்,வடிவமைத்தல் ஆவணங்கள் , முறையான மூல குறியீடு, விரிவான பாதுகாப்பு விருப்பம்.
  2. செயல் அலகு: இடர் பகுப்பாய்வு,சோதனை மூலோபாயத்தை உருவாக்கவேண்டும்,முறையான பரிசோதனை திட்டம், சோதனைகளை இயக்க
  3. வெளியீட: முடிவுகள் அனைத்தும் உள்ளடக்கப்பட்டு இறுதி அறிக்கை தயார் செய்யப்படும்.
வெள்ளைப் பெட்டி சோதனை செயல்முறை

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.sersc.org/journals/IJSEIA/vol5_no3_2011/1.pdf