வெள்ளைக்கோல்வரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெள்ளைக்கோல்வரை எனப்படுவது எடையளக்கும் கருவி ஆகும். இதை பேச்சு வழக்கில் வெள்ளைக்காவரை என்றும் குறிப்பிடுவதுண்டு. தற்காலத்தில் புழக்கத்தில் உள்ள தராசில் இரு பக்கமும் எடையைத் தூக்க வேண்டியிருக்கும். ஆனால், வெள்ளைக்கோல்வரையில் ஒரு பக்கம் மட்டுமே எடை நிறுத்தப்படும்.

அமைப்பு[தொகு]

கோலில் பல கோடுகள் வரையப்பட்டிருக்கும். ஒவ்வொரு கோடும் ஒவ்வொரு எடையைக் குறிக்கும். அங்கும் இங்கும் நகர்த்துவதற்கு ஏற்ப அந்தக் கோலில் ஒரு சின்ன நூல் கயிறு கட்டப்பட்டிருக்கும். தேவையான எடைக்கு உண்டான கோட்டுக்குக் கயிற்றை நகர்த்தி, பிறகு அந்தக் கோட்டிலேயே கயிற்றை இறுக்கி, எடை போட வேண்டிய பொருளைக் கோலில் உள்ள ஒற்றைத் தட்டில் வைத்து தூக்கி எடை போடப்படும். அப்போது துலாக்கோலின் கோல் படுக்கை வசத்தில் நேராய் இருந்தால் சரியான எடை காட்டுகிறது என்றும், மேலாகத் தூக்கிக்கொண்டு இருந்தால் நிறுக்கப்படுகிற பொருள் நிறுக்க வேண்டிய அளவுக்கு அதிகமாய் இருக்கிறது என்றும், கோல் கீழாகத் தாழ்ந்தால் நிறுக்கப்படுகிற பொருள் நிறுக்க வேண்டிய அளவுக்கும் குறைவாக இருக்கிறது என்றும் பொருள்.

தேவையான பொருளை ஒரு பக்கம் வைத்தவுடன், மறுபக்கம் நூலால் பிடித்துக்கொண்டிருக்க வேண்டும். எடை அதிகரிப்பால் கோலின் ஒரு பக்கம் கீழே இறங்குவதால் கோல் சாயும். கோல் சாயும் நேரத்தில் மற்றொரு கையால் பிடித்திருக்கும் நூல் கோலின் வெள்ளைக்கோட்டைத் தொடும். அதைக் கொண்டு எடையைக் கணிப்பர்.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளைக்கோல்வரை&oldid=2394415" இலிருந்து மீள்விக்கப்பட்டது