வெள்ளைக்கழிச்சல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெள்ளைக்கழிச்சல் அல்லது இராணிக்கெட் ( நியூகேசில் நோய், Newcastle disease) பறவைகளைப் பாதிக்கும் ஒரு நோய். கோழிகள் போன்ற வீட்டுப் பறவைகளைத் தாக்கும் இது ஒரு நச்சுயிரி நோயாகும். இது பறவையின நோய்களிலேயே மிகவும் கொடுமையானது. இதனால் பாதிக்கப்படும் பறவையினங்கள் எந்த ஒரு நோய் அறிகுறிகளையும் வெளிப்படுத்தாமலே  இறந்துவிடும்.

நோய் பரப்பும் காரணிகள்[தொகு]

இந்த நோய் பறவையின அவுல நச்சுயிரினால் பரவுகிறது. நோய் உண்டாக்கும் திறன் நச்சுயிரின் வகையைச் சார்ந்து மாறும் தன்மைக் கொண்டது.

 1. குறைந்த வீரியமுள்ள (லென்டோஜெனிக்) வகை
 2. மித வீரியமுள்ள (மீசோ ஜெனிக்)   வகை
 3. வீரியமுள்ள உள்ளுறுப்புகளை தாக்கும் வகை (வெலோஜெனிக்)
 4. வீரியமுள்ள நரம்பு மண்டலத்தை தாக்கும் வகை (வெலோஜெனிக்)
 5. நோய் அறிகுறிகளற்ற வகை.

இவற்றில் லென்டோஜெனிக் மற்றும் மீசோஜெனிக் வகைகள் குறிப்பிட்ட பகுதியில் நோய் பாதிப்புகளை உண்டாக்கும்.

நோய் பரவும் முறைகள்[தொகு]

இந்தநோய் தொற்றும் தன்மைகொண்டது. இந்தநோய், நோய்வாய்ப்ட்ட கோழிகளிலிருந்து மற்ற கோழிகளுக்குப் பரவுகின்றது. இந்நோய்  கோழி எச்சம் மூலமும், மற்றும் கோழியின் மூக்கு, வாய், கண் மூலம் வெளியாகும் சுரப்பு நீர் வழியாகவும் மற்ற கோழிகளுக்குப்   பரவும். பாதிக்கப்பட்ட   கோழிகளின் முட்டைகளிலும் இந்தநச்சுயிரி உள்ளதால், இந்த முட்டைகள் குஞ்சு பொரித்தால் நச்சுயிரி  வெளியேறி மற்ற கோழிகளைப் பாதிக்கும் .

நோய் அறிகுறிகள்[தொகு]

நோய் அறிகுறிகள் நச்சுயிரின் வகையைச் சார்ந்து  மாறும் தன்மை கொண்டன

 1. லென்டோஜெனிக் : பருவமடைந்த கோழிகளில் நோய் அறிகுறிகள் வெளிப்படுவது இல்லை; இளம் கோழிகளில் திடீரென சுவாசநோய் அறிகுறிகள், மூக்கு  மற்றும் கண் பகுதியில் சுரப்பு நீர் வெளியேறும்.
 1. மீசோஜெனிக்: பருவமடைந்த கோழிகளில் திடீரென பசியின்மை, அதிக தளர்ச்சி காணப்படும் , முட்டை இடுவது நின்று விடும், குறைவான அளவில் இறப்பு காணப்படும். இளம் கோழிகளில் திடீரென தளர்ச்சி, சக்தி விரயம், சுவாசநோய் அறிகுறிகள் (இருமல் மற்றும் மூக்கிலிருந்து நீர் வடிதல்) அதிகமாகக் காணப்படும். இயல்பற்ற நிலையில் தலையும், கழுத்தும் காணப்படும்.
 1. வெலோஜெனிக்: பருவமடைந்த கோழிகளில் மூச்சு விடுவதில் சிரமம், வயிற்றுப்போக்கு, கண்சவ்வு அழற்சி, பக்கவாதம் மற்றும் பாதிக்கப்பட்ட கோழிகள் ஓரிரு நாட்களில் இறந்துவிடும். இளம் கோழிகளில் மூச்சுத்தடை, வயிற்றுப்போக்கு, பக்கவாதம் மற்றும் அதிக அளவில் இறப்பு விகிதம் காணப்படும்

நோய் கண்டறியும் முறைகள்[தொகு]

 1. நோய் அறிகுறிகள் மூலம் கண்டறியலாம்(நீரித்தபச்சைக்கழிச்சல் மற்றும் சுவாசக்கோளாறு
 2. ஆய்வகத்தில் நச்சுயிரிகளைப் பரிசோதனை செய்வதன் மூலம் கண்டறியலாம் .
 3. இறப்பறிசோதனை மூலமும் கண்டறியலாம் (பாதிப்படைந்த கோழிகளின்  இரைப்பை (proventriculus) மற்றும் சீக்கல் டான்சிலில் (caecal tonsil) இரத்தப்போக்கு ஏற்பட்டு, வயிற்றின் உட்புறத்தில் ஊசிமுனை அளவிற்கு சிறுசிறு சிவப்பு  புள்ளிகளோடு அமைந்திருக்கும். (இரைப்பையில் (proventriculus) இரத்தப்போக்கு சிவப்பு  புள்ளிகளை போல காணப்படும்)
 4. மற்ற நோயிலிருந்து வேறுபடுத்தி அறிவதன்  மூலமும் இந்நோயைக் கண்டறியலாம் .

சிகிச்சை முறை[தொகு]

இந்நோய்க்கு சிகிச்சைமுறை எதுவும் இல்லை . 

நோய்த் தடுப்பு முறைகள்[தொகு]

1) இந்நோயைத் தடுக்க கீழ்க்கண்டவாறு கோழிகளுக்கு தடுப்பூசிகளை அளித்து  நோய் வராமல் தடுக்கலாம்.

தடுப்பூசி அட்டவணை

 • 5வதுநாள் - கண்சொட்டு முறையில் F1 தடுப்பூசி இறைச்சிக்கோழி மற்றும் முட்டைக்கோழிகளுக்கு
 • 28வது நாள் -  ஆர். டி.வி. (RDV)   லசோடா  (LASOTA)  -இறைச்சிக்கோழி மற்றும் முட்டைக்கோழிகளுக்கு
 • 8வது வாரம் - ஆர். டி.வி.கே(RDVK)- முட்டைக்கோழிகளுக்கு
 • 14வது வாரம்  -ஆர். டி.வி.கே (பூஸ்டர்)- முட்டைக்கோழிகளுக்கு
 • 40வது வாரம்  -ஆர். டி.வி(பூஸ்டர்) லசோடா( LASOTA) -முட்டைக்கோழிகளுக்கு

தற்பொழுது வாய்வழியாகவும் வெப்பம் தாங்கக்கூடிய இராணிக்கெட் தடுப்பூசி கொடுக்கப்படுகிறது. இதை தீவனத்தில் கலந்து கோழிகளுக்கு  கொடுக்கலாம். இது எளிய முறையாகும். இந்தநோய்யை தடுக்க கால்நடைத்துறை மாநிலம் முழுவதும்  

2)கோழிகளை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் போது அவற்றில் இராணிக்கெட் நோய் உள்ளதா என பரிசோதனை செய்ய வேண்டும்.

3)இராணிக்கெட் நோய் மற்ற கோழிகளுக்கு வேகமாகப் பரவும் தன்மைக் கொண்டதாகும். எனவே சுவாசநோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாகக் கால்நடை மருத்துவரை அணுகி தடுப்பு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.  

படங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Newcastle disease
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளைக்கழிச்சல்&oldid=1828746" இருந்து மீள்விக்கப்பட்டது