உள்ளடக்கத்துக்குச் செல்

வெள்ளுற்று பெருமாள் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெள்ளூற்றுப் பெருமாள் கோவில் சேலம் மாவட்டத்தின், இடைப்பாடி பகுதியில் உள்ள புராதன கோவிலாகும். இந்தக் கோவிலில் சுயம்பு வடிவில் பெருமாள், ஆஞ்சநேயர், விநாயகர், கருடாழ்வார் சன்னதிகள் அமைந்துள்ளன. இது சூரிய மலை அடிவாரத்தில் உள்ளது.

வரலாறு

[தொகு]

இந்தக் கோவில் குறித்த வரலாறு அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. ஆனால் பாண்டவர்கள் இந்த வனத்தில் வந்து வழிபட்டதாக கூறப்படுகிறது. இங்கு நாமக்கட்டியும் குங்குமமும் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

பயணம்

[தொகு]

இந்தக் கோவிலுக்கு இடைப்பாடி பேருந்து நிலையத்திலிருந்து அரை மணி நேரத்தில் செல்லலாம். இந்தக் கோவிலுக்கு இரண்டு சக்கர வாகனத்திலோ நான்கு சக்கர வாகனத்திலோ செல்லலாம். கோவிலுக்கு செல்ல பேருந்து வசதி கிடையாது.

பூசைகள்

[தொகு]
  • புரட்டாசி மாதத்தில் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்படுகிறது. [1]
  • பிரதி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 7:00 மணி முதல் அபிசேக ஆராதனை நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து அன்னதானம் நடைபெறுகிறது.

படங்கள்

[தொகு]

தொடர்புடைய பக்கங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. Retrieved 2015-01-01.