உள்ளடக்கத்துக்குச் செல்

வெள்ளி குறைபுளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெள்ளி குறைபுளோரைடு
Silver subfluoride
வெள்ளி குறைபுளோரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
வெள்ளி(0,I) புளோரைடு
இனங்காட்டிகள்
1302-01-8 Y
InChI
  • InChI=1S/2Ag.FH/h;;1H/q;+1;/p-1
    Key: NYHLXUAEPHSVOU-UHFFFAOYSA-M
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 154085723
  • F[Ag].[Ag]
பண்புகள்
Ag2F
வாய்ப்பாட்டு எடை 234.734 கி/மோல்
தோற்றம் வெண்கல-பச்சை நிற பளபளப்புடன் கூடிய வண்ணமயமான படிகங்கள்
அடர்த்தி 8.6 கி/செ,மீ3, திண்மம்
உருகுநிலை 90 °C (194 °F; 363 K) கரிமச்சிதைவு
reacts
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.
Y verify (இது Y☒N ?)

வெள்ளி குறைபுளோரைடு (Silver subfluoride) என்பது Ag2F என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெள்ளியின் ஆக்சிசனேற்ற நிலை பின்ன எண்ணாக இருக்கும் ஒரு சேர்மத்திற்கு இச்சேர்மம் ஓர் அசாதாரண உதாரணமாகும். வெள்ளி மற்றும் வெள்ளி(I) புளோரைடு ஆகிய சேர்மங்கள் வினைபுரிவதன் மூலம் இது உருவாக்கப்படுகிறது.[1]

Ag + AgF → Ag2F

வெண்கல நிறப் பிரதிபலிப்புடன் சிறிய படிகங்களாக இச்சேர்மம் உருவாகிறது. மின்சாரத்தை நன்கு கடத்தும். தண்ணீருடன் தொடர்பு கொள்ளும்போது, ​​கிட்டத்தட்ட உடனடியாக நீராற்பகுப்பு நிகழ்ந்து, வெள்ளி (Ag) தூள் வீழ்படிவாகிறது.

படிகக் கட்டமைப்பு

[தொகு]

Ag2F, எதிர்-CdI2 படிக அமைப்பை ஏற்றுக்கொள்கிறது. அதாவது, காட்மியம் அயோடைடு சேர்மத்தின் அமைப்பை ஏற்றுக் கொள்கிறது. CdI2- சேர்மமும் இதே அமைப்பைக் கொண்டுள்ளது. ஆனால் I நிலைகளில் "Ag½+" மையங்களும், Cd2+ நிலைகளில் F அயனிகளும் உள்ளன.[2] வெள்ளி அணுக்களுக்கு இடையேயான மிகக் குறைந்த தூரம் 299.6 பைக்கோமீட்டர் ஆகும் (உலோகத்தில் இது 289 பைக்கோமீட்டர் ஆக உள்ளது).[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Lee Poyer, Maurice Fielder, Hugh Harrison, Burl E. Bryant "Disilver Fluoride: (Silver “Subfluoride”)" Inorganic Syntheses, 1957, Volume 5, 92–94. எஆசு:10.1002/9780470132364.ch6
  2. A Williams (April 1989). "Neutron powder diffraction study of silver subfluoride". Journal of Physics: Condensed Matter 1 (15): 2569–2574. doi:10.1088/0953-8984/1/15/002. Bibcode: 1989JPCM....1.2569W. https://zenodo.org/record/1235726.
  3. Egon Wiberg, Arnold Frederick Holleman (2001) Inorganic Chemistry, Elsevier பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளி_குறைபுளோரைடு&oldid=4452104" இலிருந்து மீள்விக்கப்பட்டது