உள்ளடக்கத்துக்குச் செல்

வெள்ளி ஐப்போகுளோரைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெள்ளி ஐப்போகுளோரைட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
வெள்ளி(I) ஐப்போகுளோரைட்டு
வேறு பெயர்கள்
அர்ச்செண்டசு ஐப்போகுளோரைட்டு
வெள்ளி ஐப்போகுளோரைட்டு
இனங்காட்டிகள்
475461-52-0 Y
InChI
  • InChI=1S/Ag.ClO/c;1-2/q+1;-1
    Key: USOFCTBGGPGUEF-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 161181821
  • [O-]Cl.[Ag+]
பண்புகள்
AgOCl
வாய்ப்பாட்டு எடை 159.32 g·mol−1
நன்றாகக் கரையும்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள்
ஏனைய நேர் மின்அயனிகள்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

வெள்ளி ஐப்போகுளோரைட்டு (Silver hypochlorite) என்பது AgOCl என்ற மூலக்கூற்று வாய்ப்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். AgClO என்ற வாய்ப்பாட்டாலும் இதை அடையாளப்படுத்தலாம். இச்சேர்மம் வெள்ளி மற்றும் பல்லணு அயனியான ஐப்போ குளோரைட்டு அயனிகள் சேர்ந்து உருவாகும் சேர்மமாகும்.[1][2] வெள்ளி ஐப்போகுளோரைட்டு சேர்மம் மிகவும் நிலையற்றது மற்றும் விரைவாக சிதைவடைகிறது.[3] ஐப்போகுளோரசு அமிலத்தின் வெள்ளி(I) உப்பாகக் கருதப்படுகிறது. வெள்ளி(I) நேர்மின் அயனிகளும் (Ag+) ஐப்போகுளோரைட்டு எதிர்மின் அயனிகளும் (OCl) சேர்ந்து வெள்ளி ஐப்போகுளோரைட்டு உருவாகிறது.

தயாரிப்பு

[தொகு]
  • வெள்ளி ஆக்சைடின் தொங்கல் கரைசல் வழியாக குளோரினை குமிழிகளை அனுப்புவதன் மூலம் வெள்ளி ஐப்போகுளோரைட்டு.[4]
2 Cl2 + Ag2O + H2O → 2 AgCl + 2 HOCl
2 HOCl + Ag2O → H2O + 2 AgOCl

ஐப்போகுளோரசு அமிலம் வெள்ளி நைட்ரேட்டுடன் வினைபுரிந்து வெள்ளி ஐப்போகுளோரைட்டு மற்றும் நைட்ரிக் அமிலத்தை உருவாக்குகிறது. [5]

HOCl + AgNO3 → AgOCl + HNO3

வேதிப் பண்புகள்

[தொகு]

வெள்ளி ஐப்போகுளோரைட்டு மிகவும் நிலையற்றதாகும். இதன் கரைசல் விரைவில் வெள்ளி குளோரேட்டு மற்றும் வெள்ளி குளோரைடாக விகிதாசாரமற்ற முறையில் மாறும்:

3 AgOCl → AgClO3 + 2 AgCl

மேற்கோள்கள்

[தொகு]
  1. Comey, Arthur Messinger (1896). A Dictionary of Chemical Solubilities; Inorganic (in ஆங்கிலம்). Macmillan and Company. p. 180. Retrieved 10 March 2023.
  2. "silver hypochlorite" (in ஆங்கிலம்). chemsrc.com. Retrieved 10 March 2023.
  3. Massey, A. G.; Thompson, N. R.; Johnson, B. F. G. (6 June 2016). The Chemistry of Copper, Silver and Gold: Pergamon International Library of Science, Technology, Engineering and Social Studies (in ஆங்கிலம்). Elsevier. p. 108. ISBN 978-1-4831-8169-1. Retrieved 10 March 2023.
  4. Jean Stas (1867). "On the Action of Chlorine on Carbonate of Silver" (in en). The Chemical News and Journal of Physical Science: A Journal of Practical Chemistry in All Its Applications to Pharmacy, Arts, and Manufacturers. American Reprint: 173. https://books.google.com/books?id=ePHNAAAAMAAJ&dq=Silver+hypochlorite&pg=PA173. பார்த்த நாள்: 10 March 2023. 
  5. "Silver Hypochlorite: Formula, Solubility & Molar Mass". study.com. Retrieved 10 March 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளி_ஐப்போகுளோரைட்டு&oldid=4195287" இலிருந்து மீள்விக்கப்பட்டது