வெள்ளி(II) புளோரைடு
![]() | |
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
வெள்ளி(II) புளோரைடு
| |
வேறு பெயர்கள்
வெள்ளி இருபுளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
7783-95-1 ![]() | |
ChemSpider | 10802085 ![]() |
EC number | 232-037-5 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 82221 |
| |
UNII | 372MAR8LH9 ![]() |
பண்புகள் | |
AgF2 | |
வாய்ப்பாட்டு எடை | 145.865 கி/மோல் |
தோற்றம் | வெண்மை அல்லது சாம்பல் படிகப் பொடி, நீர் உறிஞ்சும் திறன் |
அடர்த்தி | 4.58 கி/செ.மீ3 |
உருகுநிலை | 690 °C (1,274 °F; 963 K) |
கொதிநிலை | 700 °C (1,292 °F; 973 K) (சிதையும்) |
சிதையும் | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | நேர்ச்சாய்சதுரம் |
ஒருங்கிணைவு வடிவியல் |
நாற்கோண நீட்சி எண்முக ஒருங்கிணைப்பு |
மூலக்கூறு வடிவம் | |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | நச்சுத்தன்மை கொண்டது, தண்ணீருடன் வன்முறையாக வினைபுரிகிறது, சக்திவாய்ந்த ஆக்சிசனேற்றி |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | MSDS |
GHS pictograms | ![]() ![]() ![]() |
GHS signal word | அபாயம் |
H272, H301, H302, H311, H312, H314, H331, H332 | |
P210, P220, P221, P260, P261, P264, P270, P271, P280, P301+310, P301+312, P301+330+331, P302+352, P303+361+353 | |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | வெள்ளி(I,III) ஆக்சைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | தாமிரம்(II) புளோரைடு பலேடியம்(II) புளோரைடு துத்தநாக புளோரைட்டு காட்மியம் புளோரைடு பாதரச(II) புளோரைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
வெள்ளி(II) புளோரைடு (Silver(II) fluoride) என்பது AgF2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெள்ளி(II) சேர்மத்திற்கு இச்சேர்மம் ஓர் அரிய எடுத்துக்காட்டாகும். வெள்ளி பொதுவாக அதன் +1 ஆக்சிசனேற்ற நிலையில் இருக்கும். வெள்ளி(II) புளோரைடு ஒரு புளோரினேற்ற முகவராகப் பயன்படுத்தப்படுகிறது.
தயாரிப்பு
[தொகு]Ag2O சேர்மத்தை தனிம புளோரினுடன் சேர்த்து புளோரினேற்றம் செய்வதன் மூலம் AgF2 சேர்மத்தை தயாரிக்க முடியும். மேலும், 200 °செல்சியசு (473 கெல்வின்) வெப்பநிலையில் தனிம புளோரின் AgF அல்லது AgCl உடன் வினைபுரிந்து AgF2 சேர்மத்தை உருவாக்கும்.[1][2]
ஒரு வலுவான புளோரினேற்றும் முகவர் என்பதால் வெள்ளி(II) புளோரைடு சேர்மத்தை டெஃப்ளான் அல்லது ஒரு செயலற்ற உலோக கொள்கலனில் சேமிக்க வேண்டும். இது ஒளி உணர்திறன் கொண்டது.
வெள்ளி(II) புளோரைடை சந்தையில் பல்வேறு வழங்குனர்களிடமிருந்து வாங்க இயலும். தேவை ஆண்டுக்கு 100 கிலோவிற்கும் குறைவாக உள்ளது. ஆய்வக சோதனைகள் இதன் பயன்பாட்டைக் கண்டறிந்தாலும், பெரிய அளவிலான தொழில்துறை பயன்பாட்டிற்கு இது மிகவும் விலை உயர்ந்ததாகும். 1993 ஆம் ஆண்டில், AgF2 ஒரு கிலோவிற்கு 1000-1400 அமெரிக்க டாலர்கள் வரை விற்கப்பட்டது.
இயைபும் கட்டமைப்பும்
[தொகு]வெள்ளி(II) புளோரைடு ஒரு வெள்ளை நிறப் படிகப் பொடியாகும். ஆனால் அசுத்தங்கள் காரணமாக இது பொதுவாக கருப்பு/பழுப்பு நிறத்தில் இருக்கும். பெரும்பாலான மாதிரிகளுக்கான F/Ag விகிதம் < 2 ஆகும். பொதுவாக Ag மற்றும் ஆக்சைடுகள் மற்றும் கார்பனுடன் மாசுபடுவதால் 1.75 என்ற அளவை இவ்விகிதம் நெருங்குகிறது.[3]
சிறிது காலமாக, வெள்ளி உண்மையில் +2 ஆக்சிசனேற்ற நிலையில் உள்ளதா, AgI[AgIIIF4] போன்ற நிலைகளின் கலவையில் உள்ளதா என்பது சந்தேகிக்கப்பட்டது. இது வெள்ளி(I,III) ஆக்சைடைப் போன்றது. இருப்பினும், நியூட்ரான் விளிம்பு விளைவு ஆய்வுகள் அதன் விளக்கத்தை வெள்ளி(II) என உறுதிப்படுத்தின. AgI[AgIIIF4] அதிக வெப்பநிலையில் இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் அது வெள்ளி(II) புளோரைடு சேர்மத்தைப் பொறுத்தவரை நிலையற்றதாக இருந்தது.[4]
வாயு நிலையில், வெள்ளி(II) புளோரைடு D∞h சமச்சீர்நிலையைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. AgF2 இன் படிக அமைப்பு ஒற்றை-படிக எக்சு-கதிர் விளிம்பு விளைவு மூலம் தீர்மானிக்கப்பட்டது.[5]
தோராயமாக 14 கிலோகலோரி/மோல் (59 கிலோயூல்/மோல்) தரைநிலை மற்றும் முதல் கிளர்ச்சி நிலைகளைப் பிரிக்கிறது. இந்தச் சேர்மம் பாரா காந்தமானது, ஆனால் −110 °செல்சியசு (163 கெல்வின்) அலவுக்கும் குறைவான வெப்பநிலையில் இது பெரோ காந்தமாக மாறுகிறது.
பயன்கள்
[தொகு]வெள்ளி(II) புளோரைடு ஒரு வலுவான புளோரினேற்றமும் ஆக்சிசனேற்றமும் செய்யும் முகவர் ஆகும். வெள்ளியும் புளோரினும் வாயு நிலையில் வினை புரியும்போது வினையூக்கத்தில் ஓர் இடைநிலையாக இது உருவாகிறது. புளோரைடு அயனிகளுடன், இது AgF−
3, நீல-ஊதா AgF2−
4 மற்றும் AgF4−
6 அணைவு அயனிகளை உருவாக்குகிறது. [6].
வெள்ளி(II) புளோரைடு கரிம பெர்புளோரோ சேர்மங்களின் புளோரினேற்றத்திலும் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.[7] இந்த வகை வினை மூன்று வெவ்வேறு வழிகளில் நிகழலாம் (இங்கே Z என்பது கார்பனுடன் இணைக்கப்பட்ட எந்த உறுப்பு அல்லது குழுவையும் குறிக்கிறது X என்பது ஒரு ஆலசன்)
- CZ3H + 2 AgF2 → CZ3F + HF + 2 AgF
- CZ3X + 2AgF2 → CZ3F + X2 + 2 AgF
- Z2C=CZ2 + 2 AgF2 → Z2CFCFZ2 + 2 AgF
CoF3, MnF3, CeF4, மற்றும் PbF4 போன்ற பிற உயர் இணைதிறன் உலோக புளோரைடுகளைப் பயன்படுத்தியும் இதே போன்ற மாற்றங்களைச் செய்யலாம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மோனோ புளோரினேற்றங்கள் மிகவும் கடினமானவை என்றாலும், அரோமாட்டிக்கு சேர்மங்களின் புளோரினேற்ற வினையிலும் AgF2 பயன்படுத்தப்படுகிறது:[8]
- C6H6 + 2 AgF2 → C6H5F + 2 AgF + HF
நீரற்ற HF கரைசல்களில் AgF2 செனானை செனான் இருபுளோரைடாக ஆக்சிசனேற்றம் செய்கிறது.[9]
- 2 AgF2 + Xe → 2 AgF + XeF2
கார்பன் ஓராக்சைடை கார்பனைல் புளோரைடாகவும் இது ஆக்சிசனேற்றுகிறது.
- 2 AgF2 + CO → 2 AgF + COF2
இலேசான நிலைமைகளின் கீழ் ஆர்த்தோ நிலையில் பிரிடினைத் தேர்ந்தெடுத்து புளோரினேற்றம் செய்ய AgF2 சேர்மத்தைப் பயன்படுத்தலாம்.[10]
பாதுகாப்பு
[தொகு]AgF2 என்பது மிகவும் வலிமையான ஆக்சிசனேற்றியாகும். தண்ணீருடன் இது வன்முறையில் வினைபுரிகிறது.[11] நீர்த்த அமிலங்களுடன் வினைபுரிந்து ஓசோனை உருவாக்குகிறது. அயோடைடை அயோடினாக ஆக்சிசனேற்றுகிறது.[11][12] மேலும் அசிட்டிலீனுடன் தொடர்பு கொள்ளும்போது வெடிக்கும் வெள்ளி அசிட்டிலைடை உருவாக்குகிறது.[13] இது ஒளி உணர்திறனும் மிகவும் நீர் உறிஞ்சும் தன்மையும் கொண்டுள்ளது.[11][11] அரிக்கும் தன்மை கொண்ட இது ஐதரசன் பெராக்சைடுடன் தொடர்பு கொள்ளும்போது வன்முறையில் சிதைந்து, ஆக்சிசன் வாயுவை வெளியிடுகிறது..[13] HF, F2 மற்றும் தனிம வெள்ளி ஆகியவற்றை வெளியிடுகிறது.[12]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Priest, H. F.; Swinehert, Carl F. (1950). "Anhydrous Metal Fluorides". Inorganic Syntheses. Vol. 3. pp. 171–183. doi:10.1002/9780470132340.ch47. ISBN 978-0-470-13234-0.
{{cite book}}
:|journal=
ignored (help) - ↑ Encyclopedia of Chemical Technology. Kirk-Othermer. Vol.11, 4th Ed. (1991)
- ↑ J.T. Wolan; G.B. Hoflund (1998). "Surface Characterization Study of AgF and AgF2 Powders Using XPS and ISS". Applied Surface Science 125 (3–4): 251. doi:10.1016/S0169-4332(97)00498-4. Bibcode: 1998ApSS..125..251W.
- ↑ Hans-Christian Miller; Axel Schultz; Magdolna Hargittai (2005). "Structure and Bonding in Silver Halides. A Quantum Chemical Study of the Monomers: Ag2X, AgX, AgX2, and AgX3(X = F, Cl, Br, I)". J. Am. Chem. Soc. 127 (22): 8133–45. doi:10.1021/ja051442j. பப்மெட்:15926841.
- ↑ Jesih, A.; Lutar, K.; Žemva, B.; Bachmann, B.; Becker, St.; Müller, B. G.; Hoppe, R. (1990-01-22). "Einkristalluntersuchungen an AgF 2" (in en). Zeitschrift für anorganische und allgemeine Chemie 588 (1): 77–83. doi:10.1002/zaac.19905880110. பன்னாட்டுத் தர தொடர் எண்:0044-2313. https://onlinelibrary.wiley.com/doi/10.1002/zaac.19905880110.
- ↑ Egon Wiberg; Nils Wiberg; Arnold Frederick Holleman (2001). Inorganic chemistry. Academic Press. pp. 1272–1273. ISBN 0-12-352651-5.
- ↑ Rausch, D.; Davis, r.; Osborne, D. W. (1963). "The Addition of Fluorine to Halogenated Olefins by Means of Metal Fluorides". J. Org. Chem. 28 (2): 494–497. doi:10.1021/jo01037a055.
- ↑ Zweig, A.; Fischer, R. G.; Lancaster, J. (1980). "New Methods for Selective Monofluorination of Aromatics Using Silver Difluoride". J. Org. Chem. 45 (18): 3597. doi:10.1021/jo01306a011.
- ↑ Levec, J.; Slivnik, J.; Zemva, B. (1974). "On the Reaction Between Xenon and Fluorine". Journal of Inorganic and Nuclear Chemistry 36 (5): 997. doi:10.1016/0022-1902(74)80203-4.
- ↑ Fier, P. S.; Hartwig, J. F. (2013). "Selective C-H Fluorination of Pyridines and Diazines Inspired by a Classic Amination Reaction". Science 342 (6161): 956–960. doi:10.1126/science.1243759. பப்மெட்:24264986. Bibcode: 2013Sci...342..956F.
- ↑ 11.0 11.1 11.2 11.3 Dale L. Perry; Sidney L. Phillips (1995). Handbook of inorganic compounds. CRC Press. p. 352. ISBN 0-8493-8671-3.
- ↑ 12.0 12.1 W. L. F. Armarego; Christina Li Lin Chai (2009). Purification of Laboratory Chemicals (6th ed.). Butterworth-Heinemann. p. 490. ISBN 978-1-85617-567-8.
- ↑ 13.0 13.1 Richard P. Pohanish; Stanley A. Greene (2009). Wiley Guide to Chemical Incompatibilities (3rd ed.). John Wiley and Sons. p. 93. ISBN 978-0-470-38763-4.