உள்ளடக்கத்துக்குச் செல்

வெள்ளவத்தை இராமகிருஷ்ண வித்தியாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெள்ளவத்தை இராமகிருஷ்ண வித்தியாலயம் 1920 களில் உருவாக்கப்பட்டது பின்னர் 1980களில் வெள்ளவத்தை பாமன்கடைப்பகுதிக்கு இடமாற்றப்பட்டது. தரம் 1 முதல் தரம் 11 வரையுள்ள மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இப்பாடசாலையில் நூலகம், விஞ்ஞான ஆய்வுகூடம், மனையியல் கூடம் ஆகியவை இருப்பினும் விளையாட்டுத் திடல் (மைதானம்) கிடையாது. 2008 ஆம் ஆண்டின் படி இப்பாடசாலையின் அதிபராக இந்திரா இராசத்தினம் கடமையாற்றுகின்றார். இப்பாடசாலையில் யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.

உசாத்துணை[தொகு]

  1. வீரகேசரி வாரவெளியீடு, 13 ஏப்ரல் 2008.