உள்ளடக்கத்துக்குச் செல்

வெள்ளம் (எண்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெள்ளம் என்னும் எண்ணிக்கையைத் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். அவர் காலத்தில் அது எண்ணிக்கை வரையறை இல்லாத அல்பெயர் எண்ணாக இருந்தது.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் படைப்பெருக்கத்தைக் குறிப்பிடும் புலவர் வெள்ளம் என்னும் எண்ணிக்கையால் குறிப்பிடுகிறார். இது தொல்காப்பியம் குறிப்பிடும் அல்பெயர் எண்ணாகவோ, கம்பன் குறிப்பிடுவது போன்ற அலகு எண்ணாகவோ இருக்கலாம்.

யாண்டுதலைப் பெயர வேண்டுபுலத்(து) இறுத்து
முனைஎரி பரப்பிய துன்னரும் சீற்றமொடு
மழைதவழ்பு தலைஇய மதில்மரம் முருக்கி
நிரை களிறுஒழுகிய நிரைய வெள்ளம் [1]

கம்பராயணத்தில் இந்த எண் அளவு எண்ணிக்கையைக் குறிக்கும் அலகாகக் கையாளப்பட்டுள்ளது. சுக்கிரீவன் கொண்டுவந்து அணிவகுத்துக் காட்டிய படையின் அளவு என்ன என்று இராமன் வினவியபோது, எழுபது வெள்ளம் எண்ணிக்கையின் மிகும் என்று சுக்கிரீவன் கூறினான்.

'"ஏற்ற வெள்ளம் எழுபதின் இற்ற" என்று
ஆற்றலாளர் அறிவின் அறைந்தது ஓர்
மாற்றம் உண்டு; அது அல்லது, மற்றது ஓர்
தோற்றம் என்று இதற்கு எண்ணி முன் சொல்லுமோ? [2]

மேற்கோள்

[தொகு]
  1. பதிற்றுப்பத்து - பாடல் 15
  2. கம்பராமாயணம் கம்ப இராமாயணம் 4 கிட்கிந்தா காண்டம் 13. நாட விட்ட படலம் பாடல் 2
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளம்_(எண்)&oldid=2930545" இலிருந்து மீள்விக்கப்பட்டது