வெள்ளகோவில் சிவலோக நாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கருவறைக்குள் சென்று வழிபடும் திருக்கோவில்

அமைவிடம்[தொகு]

திருப்பூர் மாவட்டம் திருச்சி செல்லும் சாலையில் 40 கிலோமீட்டரில் காங்கயத்திற்கு அடுத்து வெள்ளக்கோவிலில் சிவ லோகநாதர் கோவில் அமைந்துள்ளது

இக்கோவிலின் சிறப்ப[தொகு]

தெய்வ வழிபாடு மிகத் தொன்மையானது. சிவ வழிபாடு வரலாற்று காலத்துக்கு முற்பட்டது. சிவலிங்க வழிபாடு பண்டைக் காலத்தில் உலகெங்கும் பரவி இருந்தது. மனித பிறவியின் நோக்கம் நோயின்றி வாழ்ந்து இறைவனை அடைவதே ஆகும். இறைவனால் ஆட்கொள்ளபட்ட அருளாளர்கள் மலர் மாலைகளூடன் தமிழ் பாமாலைகளையும் பாடி திருக்கோவில்களை வணங்கி உள்ளார்கள் . அவைகள் பன்னிரு திருமுறைகள் எனவும் நாலாயிர திவ்ய பிரபந்தம் எனவும் வரையறுத்துள்ளார்கள். அந்த வகையில் வெள்ளகோவில் பகுதியில் சிவலோகநாதர் திருக்கோவில் 12 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டு உணவால் சைவர்களாக உள்ளவர்கள் பூவும் நீரும் கொண்டு இறைவனை வழிபட வகை செய்துள்ளார்கள். பன்னிரு திருமுறைகளை ஒதி சிவனை தினமும் வழிபாடு செய்யப்படுகிறது….நால்வர் குருபூஜைகளும் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது..வாரவழிபாடு பிரதோஸம் நடராசர் அபிசேகம் அடியார்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.