வெளிமான் (அரசன்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வெளியம் என்பது ஓர் ஊர். இது வானவரம்பன் என்னும் சேரமன்னன் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. [1]
வெளிமான் என்பது மானின வகைகளில் இன்று. வெளிமான்கள் மிகுதியாக இருந்த ஊர் வெளியம் எனப் பெயர் பெற்றிருக்கலாம். வெளி என்னும் சொல் வான்வெளியைக் குறிக்கும். இந்த வெளியத்தை ஆண்டவன் வானவரம்பன் எனப் பெயர்பெறுவது இயல்பே.

சங்ககாலத்தில் வெளிமான் என்னும் அரசன் சிறந்த வள்ளலாக விளங்கினான். பெருஞ்சித்திரனார் என்னும் புலவர் அவனைப் பாடிப் பெருமை தரும் பரிசில்களைப் பெற்றுள்ளார். அவன் காலத்துக்குப் பின்னர் அரசுக்கட்டில் ஏறிய அவனது தம்பி இளவெளிமானைக் கண்டு பரிசில் வேண்டியபோது அவன் சிறிது கொடுப்பக் கொள்ளாது அவனை இழிவுபடுத்திப் பாடியுள்ளார். [2]

ஒப்புநோக்குக[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. வானவரம்பன் வெளியத்து அன்ன நம் மாணலம் மாமூலனார் பாடல் அகம் 359
  2. புறநானூறு 162, 207, 237, 238
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெளிமான்_(அரசன்)&oldid=901559" இருந்து மீள்விக்கப்பட்டது