உள்ளடக்கத்துக்குச் செல்

வெளிநாட்டு வீட்டுப் பணியாளர்கள் (ஹொங்கொங்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமது வீட்டுப்பணிப்புரியும் காலத்தை நீடித்துக்கொள்ளும் பொருட்டு குடிவரவு திணைக்களத்தில் பணியாளர்கள்

வெளிநாட்டு வீட்டுப் பணியாளர்கள் (Foreign domestic helpers in Hong Kong) என்போர் ஹொங்கொங்கில் வந்து வீடுகளில் பணிப்புரிவோர் ஆவர். இந்த வீட்டுப் பணியாளர்களாக பணிப்புரிவோர் அநேகமாக பெண்களே என்றப்போதும், ஆண்களும் உள்ளனர். ஹொங்கொங்கில் வெளிநாட்டு வீட்டுப் பணியாளர்களாக பணிப்புரிவோர், ஹொங்கொங்கின் முழு மக்கள் தொகையில் 3% உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய கிழக்கு நாடுகளில் போன்று அல்லாமல், ஹொங்கொங்கில் பணிப்புரியும் வீட்டுப்பணியாளர்கள் ஏனைய பணியாளர்கள் போன்றே வாரவிடுமுறை, பொதுவிடுமுறை மற்றும் ஹொங்கொங் அரசாங்கம் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் போன்றவற்றையும் பெறகூடியதாக உள்ளது.

2010ம் ஆண்டின் கணிப்பின் படி 284,901 பேர் பணிப்புரிவதாக அறியமுடிகிறது. இதில் 48% வீதமானோர் பிலிப்பீன்சு பெண்களாகும். இந்தோனேசியப் பெண்கள் 49.4% வீதமானோர்களாகும். மீதமானோர்களில் தாய்லாந்து, இந்தியா, இலங்கை, நேபாளம் போன்ற நாட்டுப் பெண்கள் உள்ளனர்.

உரிமைகள்[தொகு]

மத்திய கிழக்காசிய நாடுகளில் போன்று இங்கு வீட்டுப் பணிப்பெண்களாக பணியாற்றும் பெண்கள் எதிர்நோக்கும் எந்த பிரச்சினைகளும் இங்கு இல்லை. தொழில் வழங்குபவர்களான வீட்டு உரிமையாளர்கள், ஹொங்கொங்கின் சட்டத் திட்டங்களை மீறுவார்களேயானால், அவர்களுக்கு எதிராக வழக்குத்தொடரக்கூடிய வசதிகளும் ஹொங்கொங்கில் உள்ளன. வழக்குகள் பதிவுசெய்யப்பட்டால் அவை 99% வீதம் வீட்டுப்பணியாளர்களுக்கு சார்பாகவே தீர்ப்பாகின்றன. வழக்குகள் தொடரும் பட்சத்தில் தொழிலாளர் நீதிமன்றமே முன் வந்து உதவுகின்றது. அவ்வாறு நீதிமன்றம் செல்லக்கூடிய போதிய தெளிவற்றவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு உதவும் வகையில் எவ்வித இலாப நோக்கமற்று செயல்படும் பல தொண்டு நிறுவனங்களும் ஹொங்கொங்கில் இருக்கின்றன.

ஆனால் ஹொங்கொங்கில் தொடர்ந்து ஏழு ஆண்டுகள் பணிப்புரிவோருக்கு வழங்கப்படும், ஹொங்கொங் வசிப்பிட உரிமை, வெளிநாட்டு வீட்டுப் பணியாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை. ஆனாலும் சிலப் பணிப்பெண்கள் குடியுரிமையுள்ளோரை அல்லது வசிப்பிட உரிமைப் பெற்றவர்களை திருமணம் முடித்து ஹொங்கொங்கின் வசிப்பிட உரிமைப் பெற்றுவிடுபவர்களும் உள்ளனர்.

வீட்டுப் பணிப் பெண்களுக்கான சட்டங்கள்[தொகு]

வீட்டுப் பணிப் பெண்களை வேலைக்கு அமர்த்துவோருக்கான தகுதிகள்[தொகு]

வீட்டுப் பணிப் பெண்களுக்கான உரிமைகள்[தொகு]

வீட்டுப் பணிப் பெண்களுக்கான சட்ட உதவிகள்[தொகு]

வீட்டுப் பணிப் பெண்களுக்கான தொண்டு நிறுவனங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]