வெல்னர் மேசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெல்னர் மேசை (Welner table) நோயாளிகள் மற்றும் உடல் குறைபாடுள்ள மருத்துவர்கள் ஆகிய இருவருக்கும் அணுகலை எளிதாக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட மருத்துவ பரிசோதனை மேசையாகும்.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறப்புத் தேவைகளைக் கொண்டவர்கள் ஆகியோருக்கு உணர்திறன், இரக்கம் மற்றும் முழுமையான மருத்துவ நோயறிதல் பரிசோதனைகள் மூலம் சிகிச்சையளிக்க இம்மேசை உதவுகிறது.

அமெரிக்க மகப்பேறியல்-மகளிர் மருத்துவ நிபுணர் மற்றும் ஊனமுற்றோர் உரிமை ஆர்வலரான சாந்தரா வெல்னர் இம்மேசையை வடிவமைத்தார்.

ஊனமுற்ற பெண் நோயாளிகளுடனான வெல்னரின் பணி வெல்னர் மேசை கண்டுபிடிப்புக்கு வழிவகுத்தது, உலகளாவிய ரீதியில் அணுகக்கூடிய மருத்துவப் பரிசோதனை மேசை நிலை மற்றும் உயரத்தில் வழக்கமாக உள்ள மாற்றங்களை விட பரந்த அளவிலான சரிசெய்தல் வசதி, சக்கர நாற்காலியிலிருந்து எளிதாக இடம் மாற்றிக்கொள்ளும் வகையில் தரையில் இருந்து 20 அங்குலங்கள் (510 மிமீ) உயரத்திற்குக் கூட குறைத்துக் கொள்ளும் ஏற்பாடுகள் போன்ற வசதிகள் இம்மேசையில் உண்டு. [1] பரிசோதனைக்காக பரந்த அளவிலான வெவ்வேறு நிலைகளை அனுமதிப்பதன் மூலம் ஊனமுற்ற மருத்துவர்களின் தேவைகளையும் இம்மேசை வழங்குகிறது. [2][1]

மேற்கோள்கள்[தொகு]

மேலும் வாசிக்க[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெல்னர்_மேசை&oldid=3682303" இலிருந்து மீள்விக்கப்பட்டது