வெல்கம்ஹோட்டல் சென்னை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெல்கம்ஹோட்டல் சென்னை
முன்னாளில் சோழா ஷெரட்டன், மை பார்ட்சூன் சென்னை
Map
விடுதி சங்கிலிஐடிசி வெல்கம்குழுமம் ஹோட்டல், பேலஸ் மற்றும் ரிசார்ட்ஸ்
பொதுவான தகவல்கள்
இடம்இந்தியா
முகவரி10, கத்தீடரல் சாலை, சென்னை,தமிழ்நாடு- 600 086, இந்தியா
திறப்புஅக்டோபர் 18, 1975
மேலாண்மைஐடிசி வெல்கம்குழுமம் (ITC Welcomgroup)
உயரம்39.75 m (130.4 அடி)[1]
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை10
பிற தகவல்கள்
அறைகள் எண்ணிக்கை90
வலைதளம்
Fortunehotels.in
[2]

வெல்கம்ஹோட்டல் சென்னை (Welcomhotel Chennai), ஒரு ஐந்து நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஹோட்டல் ஆகும். இது இந்தியாவின் சென்னையில் உள்ள கதீட்ரல் சாலையில் அமைந்துள்ளது. இதற்கு முன்பு ஹோட்டல் சோழா ஷெரட்டன் என்று இந்த ஹோட்டல் அழைக்கப்பட்டு வந்தது. ஐடிசி’யின் கீழ் முதன் முதலில் நிறுவப்பட்ட ஹோட்டல் மை ஃபார்ட்சூன் ஆகும். இந்த ஹோட்டல் இதன் சுற்றுச்சூழல் மேலாண்மைக்காக, ஐஎஸ்ஓ 14001 தரச்சான்றிதழ் பெற்ற நிறுவனம் ஆகும். ஐடிசி ஹோட்டல் லிமிடெட் நிறுவனத்தினால் உரிமம் பெறப்பட்ட ஹோட்டல்களில் இதுவும் ஒன்று. [3]

வரலாறு[தொகு]

ஹோட்டல் சோழா ஷெரட்டன் என்று ஆரம்பத்தில் அழைக்கப்பட்ட இந்த ஹோட்டல் அக்டோபர் 18, 1975 இல் தொடங்கப்பட்டது. இது ஐடிசி நிறுவனம் ஹோட்டல் வணிகத்தினுள் காலடி எடுத்துவைக்கக் காரணமாகவும் அமைந்தது. [4] அக்டோபர் 15, 2011 இல் இதன் பெயர் மாற்றப்பட்டு மை பார்ட்சூன் சென்னை என்ற பெயருடன் ஃபார்ட்சூன் பார்க் ஹோட்டல் லிமிடெட் நிறுவனத்தின் கீழ் வந்தது. இது முழுவதும் ஐடிசி நிறுவனத்தின் துணையின் கீழ் இயங்கியது. ஆனால் பெயர் மட்டுமே மாறியுள்ளதே தவிர அதன் முதல் தர ஹோட்டல் சேவைகள் மாறாமல் அப்படியே உள்ளன. [5]

இருப்பிடம்[தொகு]

சென்னையில் உள்ள, அமெரிக்க தூதரகத்தில் இருந்து 0.5 கிலோ மீட்டர் தூரத்தில் மை ஃபார்ட்சூன் அமைந்துள்ளது. பிரபலமான இடங்கள் மற்றும் வணிக இடங்களான தியாகராய நகர், மெரினா கடற்கரை மற்றும் அண்ணா சாலை போன்ற இடங்களுக்கு விரைவாகச் செல்ல முடியும். இந்த ஹோட்டலில் இருந்து தியாகராய நகர் தோராயமாக 4 கிலோ மீட்டர் தொலைவிலும், அண்ணா சாலை/மவுண்ட் சாலை தோராயமாக 7 கிலோ மீட்டர் தொலைவிலும், மெரினா கடற்கரை தோராயமாக 3 கிலோ மீட்டர் தொலைவிலும், கபாலீசுவரர் கோயில் தோராயமாக 4 கிலோ மீட்டர் தொலைவிலும், அமெரிக்க தூதரக அலுவலகம் தோராயமாக ஒரு கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளன. இவையனைத்தும் பொழுதுபோக்கு, வணிகம் மற்றும் பல செயல்களுக்கு பிரபலமானவை.

ஹோட்டல்[தொகு]

ஹோட்டலின் 10 அடுக்கு மாடிகளில் மொத்தம் 90 அறைகள் உள்ளன. இதில், 48 ஃபார்ட்சூன் கிளப் எக்ஸ்குளுசிவ் அறைகள் (650 சதுர அடி பரப்பளவு கொண்டது), 26 ஃபார்ட்சூன் கிளப் அறைகள் (440 சதுர அடி பரப்பளவு கொண்டது) மற்றும் 16 சாதாரண அறைகள் (220 சதுர அடி பரப்பளவு கொண்டது) ஆகிய அறைகள் அடங்கும். மண் அடுப்பின் மூலம் சமைத்த உணவு, வட இந்திய சிறப்பு உணவகம், 24 மணி நேர பல்வேறு உணவு வகைகளைக் கொண்ட உணவகம், சிறிய உணவு பதார்த்தங்கள் வழங்கும் உணவகம் மற்றும் டுராண்ட் பார் போன்ற உணவு வசதிகள் இங்குள்ளன.[6]

இங்கு மூன்று கூட்ட அரங்கு இடங்கள் உள்ளன. மண்டப விருந்து இடம், வரலாற்று இடம், மண்டப மன்ற அறை ஆகிய மூன்று அரங்குகள் உள்ளன. இதில் மண்டப விருந்து இடம் 1880 சதுர அடி பரப்பளவினையும், வரலாற்று இடம் 1400 சதுர அடி பரப்பளவினையும், மண்டப மன்ற அறை 480 சதுர அடி பரப்பளவினையும் கொண்டுள்ளது. மண்டப விருந்து அறையில் 200 மக்களையும், வரலாற்று இடத்தில் 60 மக்களையும், மண்டப மன்ற அறையில் 18 மக்களையும் வசதியுடன் தங்கவைக்க முடியும். அத்துடன் 238 சதுர அடி பரப்பளவு கொண்ட, வணிக வளாக மன்ற அறையின் மூலம் 8 பேரையும், 156 சதுர அடி பரப்பளவு கொண்ட வணிக மைய அலுவலகத்தின் மூலம் 4 பேரையும் தாராளமாகத் தங்கவைக்க முடியும். நீச்சல்புற அறைகளின் மூலம் 50 மக்களுக்கு இடமளிக்க முடியும். [7]

சென்னை தவிர அகமதாபாத், பெங்களூர், தாஹெஜ், குர்கான், கொல்கத்தா, ஹைதராபாத், நேவி மும்பை, நொய்டா, ராஜ்கோட், வாபி, காந்திநகர், இந்தூர், புது டெல்லி, தானே, விஜயவாடா, காசியாபாத், ஜம்சேத்பூர், மணிப்பால், புனே, திருவனந்தபுரம் மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய இடங்களிலும் இதன் துணை ஹோட்டல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் சென்னை, புது டெல்லி, பெங்களூர், குர்கான் போன்ற இடங்களில் இரு ஹோட்டல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அறைகள்[தொகு]

ஃபார்ட்சூன் கிளப் அறைகளில் பாதுகாப்பு, தொலைபேசி, துணி தேய்க்கும் வசதி, குளிர்பதனப் பெட்டி மற்றும் செய்தித்தாள் போன்ற வசதிகள் செய்து தரப்படுகின்றன. அத்துடன் டிவிடி பிளேயர் வசதியினை வேண்டுகோளின் அடிப்படையில் வழங்குகின்றனர்.

ஃபார்ட்சூன் கிளப் எக்ஸ்குளுஸிவ் அறைகளில் பாதுகாப்பு, தொலைபேசி, குளிர்பதனப் பெட்டி மற்றும் செய்தித்தாள் வசதிகள் அளிக்கப்படுகின்றன.

வசதிகள்[தொகு]

இதன் சாதாரண வசதிகளில் கம்பியில்லா இணையச் சேவை மற்றும் இணைய வசதி செயல்படுகிறது. குளிர்சாதன வசதி, உயர் இயங்கு ஏணி, புகைப்பிடிக்காதவர்கள் அறை, பக்கத்து அறைகள், கதவு திறந்துவிடுபவர், விரைந்து வெளியேறுதல் மற்றும் விரைந்து உள்ளிணைதல், அறை பராமரிப்பு, விருந்தளிக்கும் வசதி, தேவைக்கேற்றாற்போல் மருத்துவரை வரவழைக்கும் வசதி போன்ற வசதிகள் இங்கு செய்து தரப்படுகின்றன. இவை அடிப்படை அறை வசதிகள், வணிகச் சேவைகள், உணவு மற்றும் குடிபானங்கள், மறு உருவாக்கம், பயணம், தனிப்பட்ட சேவைகள் மற்றும் இதர வசதிகள், ஹோட்டல் வசதிகள் என அனைத்து பிரிவுகளிலும் வழங்கப்படுகின்றன.

காட்சிகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Chola Sheraton". Emporis.com. பார்க்கப்பட்ட நாள் 20 Nov 2011. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  2. வெல்கம்ஹோட்டல் சென்னை at Emporis
  3. "Guide to Subsidiaries" (PDF). ITC Limited. Archived from the original (PDF) on 2010-01-02. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  4. "About us". ITC Hotels. nd. Archived from the original on 2011-01-08. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  5. Ravikumar, R.. "WelcomeHotel Sheraton Chola in Chennai gets Fortune tag". The Hindu Business Line (Chennai: The Hindu). http://www.thehindubusinessline.com/todays-paper/tp-corporate/article2552912.ece. 
  6. "My Fortune Chennai Rooms". cleartrip.com.
  7. "My Fortune, Chennai—Factsheet" (PDF). Fortune Hotels. Archived from the original (PDF) on 2012-01-13. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெல்கம்ஹோட்டல்_சென்னை&oldid=3572337" இலிருந்து மீள்விக்கப்பட்டது