உள்ளடக்கத்துக்குச் செல்

வெலம்பொடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெலம்பொடை (Welamboda) இலங்கையின் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் உடுநுவரை தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள முஸ்லிம் கிராமமாகும். கிட்டத்தட்ட 5000 பேரைக் கொண்டது வெலம்பொடை கிராமம். இங்கு ஒரு ஜும்மா பள்ளியும் 9 தக்கியாக்களையும் அமைந்துள்ளன.

கண்டிய மன்னர் காலத்திலேயே வெலம்படை குடியிருப்புக்கள் ஆரம்பமானது என்று சில வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். கண்டிய மன்னர்களது ஆஸ்தான வைத்தியர்களாக இருந்த பல முஸ்லிம்களின் குடும்பங்கள் வெலம்பொடையில் குடியமர்த்தப்பட்டது இக்கருத்துக்கு சான்றாக அமைகிறது. இவர்களில் ஒருவரான செய்கு முகம்மத் உடையார் என்பவருக்கு கண்டி மன்னன் கீர்த்திசிரி ராஜசிங்கன் செப்புசாசனம் மூலம் 1747 இல் வெலம்படைப் பகுதியில் பெரும்பாலான இடங்கள் வழங்கப்பட்டதாகத் தெரியவருகிறது. சன்னச என்று இச்சாசனம் பற்றி தொல்பொருள் ஆய்வாளர் கலாநிதி கம்புறுபிடிய தேரர் குறிப்பிடுகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெலம்பொடை&oldid=761223" இலிருந்து மீள்விக்கப்பட்டது