வெற்றி (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெற்றி
பிறப்புவெற்றி சுடலை
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
மற்ற பெயர்கள்சுடலைக்கண் வெள்ளைபாண்டியன்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2017-தற்போது வரை

வெற்றி சுடலை (Vetri Sudley) தொழில்ரீதியாக வெற்றி என்று அழைக்கப்படும் இவர், தமிழ் திரைப்படங்களில் தோன்றும் ஒரு இந்திய நடிகர் ஆவார். 8 தோட்டாக்கள் (2017), ஜீவி (2019)[1][2] போன்ற தனது சொந்த குடும்பத் தயாரிப்பு படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததற்காக இவர் மிகவும் பிரபலமானவர்.[3][4]


தொழில்[தொகு]

வெற்றி, தயாரிப்பாளர் எம். வெள்ளைபாண்டியனின் மகனாவார்.[3] இவர் தனது தந்தை தயாரித்து 2017இல் வெளியாகி விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட "8 தோட்டாக்கள்" திரைப்படத்தில் காவல் துணை ஆய்வாளர் வேடத்தில் அறிமுகமானார். பின்னர் இவர் ஜிவி (2019) என்ற பரபரப்பூட்டும் திரைப்படத்தில் தோன்றினார். இது நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று பெரிய வெற்றி பெற்றது. 2021 ஆம் ஆண்டில் இவர் C/O காதல் என்ற தொகுப்புப் படத்தில் தோன்றினார், இது C/o கஞ்சரபாலம் என்ற தெலுங்கு படத்தின்[5] மறு ஆக்கமாகும். இவரது அடுத்த படமான வனம்[6]26 நவம்பர் 2021 அன்று வெளியானது

குத்துச்சண்டை வீரராக மாற விரும்பும் வடசென்னை பையனாக ரெட் சாண்டல் படத்திலும்,[7][8] ஒரு கொலைக் குற்றம் சாட்டப்பட்டு, தனது நினைவுகளை இழந்து தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள ஒரு வேடத்தில் மெமரிஸ் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.[9]

திரைப்படவியல்[தொகு]

அடையாளம்
இதுவரை வெளியாகாத படங்களைக் குறிக்கிறது இதுவரை வெளியாகாத படங்களைக் குறிக்கிறது
ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
2017 8 தோட்டாக்கள் சத்யா அறிமுகப் படம்
2019 ஜீவி சரவணன்
2021 மே/பா காதல் தாடி
வனம் மகிழ்
2022 ஜோதி சக்தி
ஜீவி 2 சரவணன் ஆஹாவில் வெளியானது
TBA மெமரீஸ் Production has yet to be released அறிவிக்கப்படும் தயாரிப்புக்குப் பிந்தைய பணியில்

சான்றுகள்[தொகு]

  1. "The concept of 'Thodarbiyal' appealed to me: Vetri on 'Jiivi'". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 2 July 2019.
  2. "This role has good mix of heroism and villainy: Vetri on 'Jiivi'". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. பார்க்கப்பட்ட நாள் 26 June 2019.
  3. 3.0 3.1 "A promising entrant in K'town". தி டெக்கன் குரோனிக்கள். பார்க்கப்பட்ட நாள் 3 April 2017.
  4. "Vetri bags another intriguing thriller". தி டெக்கன் குரோனிக்கள். பார்க்கப்பட்ட நாள் 13 June 2018.
  5. "Vetri's 'C/o Kaadhal' release date announced". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 3 March 2020.
  6. "First look of Jiivi Vetri's 'Vanam'". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 26 December 2020.
  7. "Vetri is a north Madras guy in his next". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 7 December 2019.
  8. "Vetri's Red Sandal revolves around red sandalwood smuggling". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 16 October 2021.
  9. "Vetri's thriller has been titled Memories". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 24 February 2020.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெற்றி_(நடிகர்)&oldid=3799817" இலிருந்து மீள்விக்கப்பட்டது