வெற்றிட பீங்கான் வடிகட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரு வெற்றிட பீங்கான் வடிகட்டியானது நீரினை வெளியேற்றும் விதமாக திடப்பொருட்களிலிருந்து திரவங்களைப் பிரித்தெடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனத்தில் சுழற்றி, தேக்கி, பீங்கான் வடிகட்டி தட்டு, விநியோகிப்பான், வெளியேற்ற சீவுளி, சுத்திகாpப்பான், கிளாச்சி சாதனம், குழாய் அமைப்பு, வெற்றிட அமைப்பு, குறிப்பிட்ட அளவு அமிலம் வழங்கும் தானியங்கி, உராய்வு நீக்கும் தானியங்கி, வால்வு மற்றும் வெளியேற்றி ஆகியன உள்ளன. இதன் அமைப்பு மற்றும் செயல்பாடு வழக்கமான வட்டு வடிப்பானை ஒத்துள்ளது. ஆனால் வடிப்பானின் ஊடகமானது நுண்ணிய துளையுள்ள பீங்கான் வட்டினால் மாற்றப்பட்டுள்ளது. வட்டு உருவாக்கப்பட்டுள்ள பொருளானது நீண்ட காலம் உழைக்கக் கூடியதாயும் வேதிப்பொருட்களால் பாதிக்கப்படாததாயும் உள்ளது. வடிகட்டும் செயல்முறையின் செயல்திறனைப் பாதிக்கும் எல்லா காரணிகளையும் கணக்கில் கொண்டு இதன் செயல்திறன் உகப்பாக்கப்படுகிறது. திண்மப்பொருளின் செறிவு, வட்டுவின் சுழற்சி வேகம், ஊட்டும் படுகையில் உள்ள பிhpத்தெடுக்கப்படவேண்டிய திடப்பொருளின் அளவு, வெப்பநிலை, அழுத்தம் மற்றும் வடிகட்டியில் கேக் உருவாக்கம் ஆகியன வெற்றிட பீங்கான் வடிகட்டியின் செயல் திறனை பாதிக்கும் காரணிகளாகும்.

சான்றுகள்:[தொகு]

1.Hakkinen, B.E, Antti. Dewatering of Iron Ore Slurry By a Ceramic Vacuum Disc Filter. 2. Tarleton, W., J, E.S, R.J, Richard (2007). Solid-Liquid Separation: Equipment Selection and Process Design. Great Britain: Institution of Chemical Engineers. 3. Gupta, Ashok (2006). Solid-Liquid Separation - Filtration. Mineral Processing Design and Operation - An Introduction. 4. Sutherland, K (2008). FIlters and Filtration Handbook. Elsevier.