வெறுத்திசை (செய்யுள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வெறுத்திசை என்பது வெறுக்கத்தக்க இனிமையல்லாத இசை ஆகும். வெறுத்திசை மென்னடை ஒழுக்கத்தில் வல்லொற்று அடுத்து மிகுந்து வந்தது போலவும், உயிரெழுத்து அடுத்துப் பொய்ந்நலம் பட்டு அறுத்திசைப்பது போலவும் வருவது.

ஆக்கம் புகழ்பெற்ற தாவி இவள் பெற்றாள்
பூக்கட் குழற்கார் பொறைபெற்ற - மாக்கடல்சூழ்
மண்பெறற ஒற்றைக் குடையாய் வரப்பெற்றெம்
கண்பெற்ற இன்று களி.

இப்பாடலில் பூக்கண் குழற்கார் என இருக்க வேண்டியது பூக்கட்குழற்கார் என வல்லொற்று தேவையின்றி அடுத்து வந்தது. எனவே வெறுத்திசையாயிற்று.

மேற்கோள்[தொகு]

தா.ம. வெள்ளைவாரணம், தண்டியலங்காரம். திருப்பனந்தாள் மட வெளியீடு.1968

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெறுத்திசை_(செய்யுள்)&oldid=959965" இருந்து மீள்விக்கப்பட்டது